சுட சுட செய்திகள்

Friday, February 10, 2012

பழமொழிகளின் உண்மை ரகசியம்


“காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்” என்று போகர் சித்தர் கூறினார்.

       அது என்னவென்றால் ஒரு நாளைக்கு 21600 சுவாசம் இயங்கும். அந்த சுவாசத்தை 40 வயதுக்கு உள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டடால் உடம்பு காயகல்பம் ஆகும். ஆயுள் நீடிக்கும்.

“அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்”

        அடி என்பது சிவன்,அண்ணன் தம்பி என்பது விநாயகர், முருகன். நம் ஆத்திர அவசரத்திற்கு சிவன் உதவுகின்ற மாதிரி விநாயகரும்,முருகனும் உதவ மாட்டார்கள்.இதுதான் அர்த்தம்.

“ஜனி நீராடு”

       ஜனி நீர் என்பது தினமும் ஜனிக்கக்கூடிய நீர்ஃ அன்றாடம் பிறக்கக் கூடியது என்று அர்த்தம்.அன்றாடம் ஜனிகக்கக் கூடிய நீரில் குளிக்க உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதே இதன் அர்த்தம்.

இரு மார்புக்கு இடைப்பட்ட காலத்தில் கல்  ”

      அது என்னவென்றால் சிசுவாக இருக்கும் போது தன் தாயுடைய மார்பைப் பிடித்து பால் குடிக்கின்றோம்.அதற்கு பின் தன் மனைவியின் மார்பைப் பிடிக்கச் செல்வோம். அந்த மார்புக்கும், இந்த மார்புக்கும் இடைப்பட்ட வயது 25. இந்த 23 வயதிற்குள் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். அவன் பெண் மாயைக்கு வென்று விட்டால் அவனுக்கு படிப்பு வராது. இதுதான் அர்த்தம்.

“தாய் பத்தடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்”

     தாய் என்பது வாழை மரம். அதை 10 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும். பிள்ளை என்பது தென்னம்பிள்ளை. அதை 16 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும் என்பதுதான் பொருள்.

No comments: