சுட சுட செய்திகள்

Saturday, February 25, 2012

மேஜிக் பயிற்சி

கண்ணால் வெட்டுப்படும் வாழைப்பழம்


தேவையானப் பொருட்கள் : வாழைப்பழம், ஊசி
செய்முறை:
ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வாழைப்பழத்தை பார்வையாலேயே இரண்டாக வெட்டுவேன் என்று சொல்லுங்கள். பார்வையாளர்கள் பார்வையாலேயே நீங்கள் எப்படி வாழைப்பழத்தை இரண்டாக வெட்ட முடியும்? என்று ஆச்சரியமாக கவனிப்பார்கள்! நீங்கள் வாழைப்பழத்தை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பிடித்துக் கொண்டு, "" என் கண்களையே பாருங்கள். என் கண் இப்போது கத்தியாகி இந்தப்பழத்தை வெட்டப்போகிறது. இதோ வெட்டி விட்டது.'' என்று சொல்லி விட்டு, வாழைப்பழத்தோலை உரியுங்கள். தோலை உரித்ததுமே பழம் பாதியாக வெட்டப்பட்டு கீழே விழும்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பே வாழைப்பழத்தை மிக நெருக்கமாக ஊசியால் சரியாக நடுப்பக்கத்தை சுற்றி குத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு ஊசியால் குத்துவதால் உள்ளே இருக்கும் சுளை இரு பாகமாக வெட்டப்படும். தோலை உரித்ததும் அது பாதியாக உடைந்து விழுந்து விடும். இது சீக்ரெட். இந்த மேஜிக் செய்யும் போது பார்வையாளர்கள் உங்கள் கண்களையே பார்க்குமாறு செய்ய வேண்டும்.


 மேஜிக் பலுõன்!


தேவையானப் பொருட்கள் :
மூன்று பலுõன்கள் ( பெரியது1; சிறியது1; அதை விட சிறியது1)
நுõல், குண்டு ஊசி, ஜிகினாத் துõள்.
செய்முறை :
பார்வையாளர்கள் முன்பு நின்று கொண்டு கையில் இருக்கும் பலுõனை எடுத்து, வாயில் வைத்து ஊதி காற்றை நிரப்புங்கள்! பின்னர், வாய் பகுதியை இறுக்கத் திருகி, ஒரு நுõல் கொண்டு கட்டுங்கள்.
பார்வையாளர்களைப் பார்த்து, " இப்போ இந்த பலுõனை குண்டூசியில் குத்தப்போகிறேன்' என்று கூறி மெல்ல ஊசி முனையால் குத்துங்கள். பலுõன் "பட்'வெடிக்கும். ஆனால், கையில் காற்று நிரம்பியஒரு பலுõன் இருக்கும். மீண்டும் அதையும் குண்டூசியால் மெல்ல குத்தவும். அந்த பலுõனும் "பட்' என்று வெடிக்கும். ஆனால், கையில் காற்று நிரம்பிய பலுõன் ஒன்று இருக்கும். மீண்டும் அந்த பலுõனை குண்டூசியால் மெல்ல குத்துங்கள். "பட்' சப்தத்துடன் பலுõன் வெடித்து, கலர்கலராய் ஜிகினாய் துõளை விசிறியடிக்கும்!
இப்போது நீங்கள், "பார்த்தீர்களா! ஒரே பலுõன் வெடித்தும் மூன்று முறை மாயமாய் பலுõன் என் கையில் வந்த அதிசயத்தை' என்று ஆச்சரியப்படுத்துங்கள்!
மேஜிக் சீக்ரெட்:
முதலில் ஒரு பெரிய பலுõனை எடுத்து அதில் சிறிய பலுõனைத் திணித்துக்கொள்ளவும். அடுத்து, அந்த பலுõனுக்குள் இன்னொரு சிறிய பலுõனைத் திணித்து அதில் ஜிகினாத் துõளைப் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த சீக்ரெட் வித்தையை மேடை ஏறுவதற்கு முன்பாக செய்து கொண்டுச் செல்லவும்!

 இருட்டில் தெரியும் வானவில்!


தேவையானப் பொருட்கள்:
முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி பாத்திரம், தண்ணீர், சூரிய வெளிச்சம்

செய்முறை:
பொதுவாக வானில் வானில் பகலில் மட்டுமே தெரியும். அதுவும் மழைத்துõறல் உள்ள நேரத்தில் தான் பெரும்பாலும் தோன்றும். அப்படித் தோன்றுவது இயற்கை வானவில். ஆனால், இந்த வாரம் மேஜிக் முறையில் இருட்டிலும் வானவில்லை தோன்றச் செய்யலாம்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைக்கவும்.
பின்னர், அந்த தண்ணீர் பாத்திரத்தை சூரிய ஓளிப்படுகின்ற இடத்தில் வைக்கவும். அப்போது சூரிய ஒளி தண்ணீர் பாத்திரத்தில் விழும். பாத்திரத்தில் படரும் சூரிய ஒளி அதில் இருக்கும் கண்ணாடியில் பட்டு பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் சூரிய ஒளியை ஒரு இருட்டு அறையில் செலுத்தினால், அங்கே வானவில்லில் உள்ள ஏழு வண்ணங்களையும் காணமுடியும்.
மேஜிக் சீக்ரெட்:
பொதுவாக சூரிய ஒளியில் ஏழு வண்ணங்கள் உள்ளன. அத்தகைய சூரிய ஒளியை நீரில் பாதி மூழ்கி உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் விழச் செய்து அதனை கண்ணாடி மூலம் பிரதிபலிக்கச் செய்வதால் சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்கள் தெரியும்.

 மேஜிக்! சீட்டுக்கட்டு!


தேவையானப் பொருள்: புதிய சீட்டுக்கட்டு

செய்முறை:
ஒரு புது சீட்டுக்கட்டை எடுத்து, அதை விரித்து உங்கள் நண்பனிடம் கொடுங்கள். பின்னர், நீங்கள் கண்ணை இறுக மூடிக்கொண்டு திரும்பிக்கொள்ளுங்கள். பிறகு, நண்பனிடம் இந்தச் சீட்டுகட்டிலிருந்து ஒரு சீட்டை எடுக்கச் சொல்லுங்கள். அந்த சீட்டில் உங்கள் நண்பனின் பெயரை எழுதச் சொல்லுங்கள். அதை அப்படியே கண்களை மூடிக்கொண்டே வாங்கி, சீட்டுக்கட்டில் கலந்து விடுங்கள். பின்னர் நண்பனிடமே கொடுத்து நன்றாக கலக்கச் சொல்லுங்கள். அப்படி நன்றாக கலக்கி கொடுத்த சீட்டுக்கட்டை நீங்கள் வாங்கி, ஒவ்வொரு சீட்டாக எடுத்துக் கொண்டே வாருங்கள். ஏதோ ஒரு சீட்டை எடுத்து, இது தான் நீ பெயர் எழுதிய சீட்டு என்று எடுத்துக்கொடுங்கள். சீட்டை திருப்பிப் பார்த்து நண்பர் அதில் அவர் போட்ட கையெழுத்து இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்!
மேஜிக் சீக்ரெட்!
உங்கள் நண்பர் பெயர் எழுதி கொடுத்த சீட்டை வாங்கும் போதே கண் இமைக்கும் நேரத்தில் அந்தச் சீட்டில் மேல் புறத்தில் உங்கள் கட்டை விரல் நகத்தால் ஒரு அழுத்தம் கொடுங்கள். நீங்கள் கொடுத்த அழுத்தம் தழும்பாக அதில் பதிந்து விடும். பின்னர், சீட்டுக்கட்டை கலுக்கி ஒவ்வொன்றாக எடுக்கும் போது, அந்த தழும்பு உள்ள சீட்டு வரும் போது, அதை எடுத்து கொடுத்து நண்பரை அசத்துங்கள்!


 சீட்டு கட்டில் சீக்ரெட் விளையாட்டு!

தேவையானப்பொருள்: புதிய சீட்டு கட்டு ( பிளேயிங் கார்டு)

செய்முறை: உங்கள் நண்பர்கள் முன்பு ஒரு புதிய சீட்டு கட்டை நன்றாக களைத்து, குலுக்குங்கள். பின்னர், அந்த சீட்டுக்கட்டை நண்பரிடம் கொடுத்து இதில் ஒரு சீட்டினை நினைத்துக்கொள். நீ நினைத்த சீட்டை சரியாக நான் சொல்கிறேன் என்று சொல்லுங்கள். உங்கள் நண்பர் சீட்டு கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்து அது என்ன வென்று பார்த்து திருப்பி அந்த சீட்டை கட்டில் மூடிவைத்துவிடுவார்.
நண்பரிடமிருந்து வாங்கிய சீட்டு கட்டை அவர் முன்பாகவே நன்றாக களைத்து குலுக்குங்கள். பின்னர், ஒவ்வொரு சீட்டாக கீழே வைத்து கொண்டே வாருங்கள். அப்படி வைத்துக்கொண்டே வரும் போது சட்டென்று ஒரு சீட்டை கீழே வையுங்கள். இது தான் நீங்கள் நினைத்த சீட்டு என்று கூறுங்கள். உங்கள் நண்பர் அந்த சீட்டை புரட்டிப் பார்த்து, தான் நினைத்த சீட்டு இதுதான் என்று ஆச்சரியப்பட்டுபோவார்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் விளையாட்டில் புத்திசாலிதனம், தந்திரம்தான் முக்கியம். புதிய சீட்டுகட்டு என்பதால் சீட்டின் மேற்பரப்பு பளீச்சென்று இருக்கும். நண்பர் நினைத்து கொண்டு கொடுத்த சீட்டில் சீட்டின் ஓரத்தில் உங்கள் நகத்தால் அழுத்தமாக சிறுகுறி வைத்து விடுங்கள். அது யாருக்கும் சட்டென்று தெரியாது. பிறகு, சீட்டை குலுக்கி ஒவ்வொன்றாக கீழே வைத்துகொண்டே வரும் போது, அந்த நகக்குறி அடையாளத்தைக் கொண்டு அந்த சீட்டை இது தான் என்று காட்டுங்கள்!
இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த மேஜிக் செய்யும் போது சீட்டு வைக்கும் இடத்தில் கண்ணாடி கிளாஸ், கண்ணாடி பொருட்கள் எதாவது வைத்திருந்தால், நண்பர் சீட்டை திருப்பி பார்க்கும் போது அதன் பிம்பம் கண்ணாடி பொருள்களில் பிரதிபலிக்கும் அதை உற்று கவனித்தும் இந்த மேஜிக் செய்யலாம்!
மேலும் தொடரும் 


Thursday, February 23, 2012

இன்றைய மேஜிக் பயிற்சி

எலுமிச்சை பழத்தில் ரத்தம் !
 


தேவையானப் பொருட்கள்: எலுமிச்சம் பழம், சிவப்பு மை, கத்தி, ஊசி (சிரின்ஞ்)

செய்முறை: ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து, அதை பார்வையாளர்களிடம் காட்டி விட்டு, ""இந்த எலுமிச்சம் பழத்தில் இருந்து ரத்தம் சொட்ட செய்கிறேன் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்து உருட்டுங்கள். பிறகு, எலுமிச்சம் பழத்தை டேபிளில் வைத்து, கண்களை மூடிக்கொண்டு, நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு,"" "ஜூம் ஜூம் ஜூம் ஜூஹா' ரத்தமே இந்த பழத்தில் இருந்து வந்துடு!'' என்று கூறிவிட்டு, பார்வையாளர்களில் ஒருத்தரை எலுமிச்சம் பழத்தை கத்தியால் வெட்டச் சொல்லுங்கள். அவர், பழத்தை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம் சொட்டும். பார்வையாளர்கள் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் செய்யும் முன்பாக ஒரு ஊசி(சிரின்ஞ்)யில் சிவப்பு மையை உறிஞ்சி அதை எலுமிச்சம் பழத்தின் உள்ளே செலுத்த வேண்டும். பார்வையாளர்களுக்குத் தெரியாமல் இந்த ரகசியத்தை காப்பாற்றுவது தான் இந்த மேஜிக் டெக்னிக்!
உள்ளங்கையில் வைத்து எலுமிச்சையை உருட்டும் போது பழத்தில் பாய்ச்சிய சிவப்பு இங்க் சாறுடன் கலந்து சிவப்பாக உள்ளே மாறி இருக்கும். அதை வெட்டியதுமே சிவப்பாக சாறு வெளியே வரும்.

நிமிர்ந்து நிற்கும் கர்சீப்

தேவையான பொருட்கள்: கர்சீப், செல்லோ டேப், சைக்கிள் செயின்

செய்முறை: மூன்று கர்சீப்களை தனிதனியாக கயிறு போல திரித்துக்கொள்ளவும். மேஜிக் செய்யும் போது ஒவ்வொரு கர்சீப்பாக எடுத்து, வலது கையில்அடிமுனையையும், இடது கையில் மேல் முனையையும் பிடித்துக்கொள்ளவும். நண்பர்கள் முன் இடதுகை பிடித்திருக்கும் கர்சீப் முனையைவிட்டுவிடவும். சட்டென்று கர்சீப் கீழே மடிந்து விழும். இதுபோல இரண்டு கர்சீப்களை செய்துகாட்டவும். கடைசியாக ஒரு கர்சீப்பை எடுத்து,"" இதோ, இந்த கர்சீப் மேல் முனை பிடிமானத்தை விட்டுவிடுகிறேன். ஆனால் அது கீழே விழாது பாருங்கள்'' என்று சொல்லி இடதுகை பிடித்திருப்பதை விட்டுவிடுங்கள். கர்சீப் கீழே மடிந்து விழாமல் செங்குத்தாக நிற்கும். இதை பார்த்து நண்பர் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: ஒரு சைக்கிள் செயின் துண்டு ஒரு அடி நீளம் எடுத்துக்கொண்டு அதன் மேல் கர்சீப் சுற்றி, பிரியாமல் இருக்க செல்லோ டேப்பால் ஒட்டிவிடவும். இந்த கர்சீப்பை மற்ற கர்சீப்புடன் சேர்த்து வைத்து கொள்ளவும். கடைசியில் மேஜிக் செய்யும் போது சைக்கிள் செயின் உள்ள கர்சீப்கயிறை எடுத்து பக்கவாட்டு வசத்தில் பிடிமானத்தை விட்டால் மடிந்து விழும். ஆனால் செங்குத்து வசத்தில் பிடித்து கொண்டு பிடிமானத்தை விட்டால் கீழே விழாது. இதில் சீக்ரெட் சைக்கிள் செயின் பக்கவாட்டில் மட்டுமே நிமிந்து நிற்காது. நேர் வசத்தில் நிமிந்து நிற்கும். இந்த மேஜிக் செய்யும் போது கைபிடிமானத்தை விடுமுன் நேர் வசத்தில் திருப்பிக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் சிவப்பாகும் கலர் மேஜிக்!

தேவையான பொருட்கள் : மஞ்சள் துõள், மஞ்சள் நிற துணி, சுண்ணாம்புத் துõள், தண்ணீர்


செய்முறை:
இந்த மேஜிக் வித்தை ஒரு தந்திர விளையாட்டுத்தான். இதை மிகுந்த முன்னேற்பாடுடன் செய்ய வேண்டும்.
உங்கள் நண்பர்களிடம் ஒரு மஞ்சள் நிற முள்ள துணியை காட்டுங்கள்."" இந்த மஞ்சள் நிற துணியை உங்கள் கண்முன்பே சிவப்பு கலராக மாற்றுகிறேன் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, மஞ்சள் நிற துணியை எடுத்து நன்றாக விரித்துக் காட்டி, உதறுங்கள். பின்னர் தண்ணீர் உள்ள பாத்திரத்தை எல்லாருக்கும் காட்டுங்கள். பிறகு அந்த துணியை பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு,"" ஓம் கிரீம் கிரீம் ... க்லிம் க்லிம் ... மஞ்சள் துணியே சிவப்பு நிறமாக மாறிவிடு! ம்ம்ம்... கலிம் கிரீம்...'' என்று மந்திரம் போட்டு விட்டு பாத்திரத்தில் இருக்கும் துணியை வெளியே எடுங்கள். மஞ்சள் துணி சிவப்பு துணியாக மாறி இருக்கும் இதைப் பார்த்து பார்வையாளர்கள் அசந்துபோவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் செய்வதற்கு முன்பாக மஞ்சள் துõளை நீரில் கலந்து கலக்கி, அதில் ஒரு மஞ்சள் நிற துணியை நனைத்து ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். அடுத்து தண்ணீர் பாத்திரத்தின் அடியில் ஒரு செ.மீ. அளவு சுண்ணாம்பு எடுத்து பூசி வைத்து கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொள் வேண்டும். இந்த தண்ணீரில் மஞ்சள் துணியை போட்டு விட்டு, அதை எடுக்கும் போது சுண்ணாம்பு தண்ணீரில் கலக்கும் படி ஒரு கலக்குகலக்கி அதில் துணியை அமுக்கி எடுத்தால் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததும் மஞ்சள் துணி சிவப்பாக மாறும்!
இதில் மேஜிக் சீக்ரெட் மஞ்சள் சுண்ணாம்பு!

மேஜிக் தொடரும் 
 

Saturday, February 18, 2012

மேஜிக் செய்யலாம் வாங்க - சாக் பீஸ் புள்ளி மேஜிக்

1.சாக் பீஸ் புள்ளி மேஜிக்!
 

தேவையானப் பொருள்: சாக் பீஸ்
செய்முறை: முதலில் நீங்கள் ஒரு மேஜை முன்பு நின்று கொள்ளுங்கள். பார்வையாளர்களைப் பார்த்து, "இப்போது நான் செய்யப்போகும் மேஜிக் ரொம்ப வித்தியாசமானது. இந்த மேஜிக் உங்களில் ஒருவரை அழைத்து செய்து காட்டுகிறேன்' என்று கூறிவிட்டு, பார்வையாளர்களில் ஒருத்தரை அழையுங்கள். வந்தவர் கையை விரிக்கச் சொல்லி, அவரின் கட்டை விரலில் ஒரு சாக் பீஸ் புள்ளியை வைத்து விடுங்கள். இதை பார்வையாளர்களிடம் காட்டச் சொல்லுங்கள். பின்னர், உங்கள் கையையும் விரித்து பார்வையாளர்களிடம் காட்டி என் கையில் ஒன்றும் இல்லை என்பதை நீரூபியுங்கள். அடுத்து, அந்த நபரின் கட்டை விரலில் இருந்த சாக் பீஸ் புள்ளியை அழித்துவிடச் சொல்லுங்கள். அதை பார்வையாளர்களிடம் காட்டச் சொல்லுங்கள். இப்போது "ஜூம்சூம் ஜூம்ஹ' என்று சொல்லிவிட்டு "இப்போ அவர் விரலில் அழித்த சாக் பீஸ் புள்ளி என் கட்டை விரலுக்கு வரும் பாருங்கள்' என்று சொல்லிவிட்டு கையை விரித்து காட்டுங்கள். உங்கள் கட்டைவிரலில் சாக்பிஸ் புள்ளி இருப்பதைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்!

மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்வதற்கு முன்பு சாக்பீஸ் முனையில் தண்ணீர் நனைத்து டேபிளின் ஓரத்தில் அழுத்தமாக ஒரு புள்ளி வைத்துக்கொள்ளுங்கள். மேஜிக் செய்யும் போது மின்னல் வேகத்தில் அதை கட்டை விரலில் ஒத்திக் கொள்ளவும். அல்லது மேஜிக் செய்யும் போது உங்கள் கட்டை விரலை ஈரப்படுத்தி, நாமக்கட்டிபவுடரில் ஒத்திக்கொள்ளவும். ஈரம் காய காய வெள்ளை புள்ளியாகத் தெரியும்!
 
மேஜிக் தொடரும்
 

Tuesday, February 14, 2012

உயிர்களின் தோற்றம்- மரணம்


உணர்தல் என்ற சிறப்பாற்றலான அறிவு முதலில் அழுத்தம் வெப்ப தட்ப ஏற்ற தாழ்வு இவற்றை உணர்வாகப் பெறுதலில் தொடங்குகின்றது. இந்த உணர்வு ஸ்பரிச  உணர்வு (அ) ஊறு உணர்வு ஆகும். இந்த ஓரறிவு இயக்கமுடைய ஜீவனே  தாவரம் ஆகும்.
தாவரத்திலிருந்தோ (அல்லது) அதன் வித்துக்களில் இருந்தோ உயிரியக்க  விரைவு அதிகமாகி , சுவையுணர்வு கூடி அதற்குரிய  கருவியான வாய் அமையப் பெறும்போது அது ஈரறிவு ஆகிறது. இந்த ஈரறிவு உயிரினக்களிடம்  உயிரியக்க சக்தி விரைவு பெற்று வாசனையுணர்வான கருவியான மூக்கு பரிணாமம் அடைந்தாள்  அதுவே மூவறிவாகும். எறும்பு, செல், போன்றவை 

மேலும் ஒளியுணாவு கருவியான கண்தோன்ற நாலறிவு உயிரான பாம்பு முதலியன தோன்றின.
ஒலியுணர்வு கருவியான காது என்று கருவி தோன்ற ஐந்தறிவு உயிரான மிருகங்கள் பறவைகள் முதலியன தோன்றின.
இத்தகைய பரிணாம  வளர்ச்சியின் தொடர் நிகழ்ச்சியில் வால் உள்ள குரங்கு தோன்றி பின்பு வால் இல்லா குரங்கு தோன்றி, பின் மனிதன் தோன்றியிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

வெள்ளத்தால் பூமி அதிர்ச்சி , பிளவுகள், அவற்றால் இந்த மனித குடும்பம் சிதறடிக்கப்பட்டு பூமியில் பல்வேறு இடங்களில் பரவி அந்தந்த நாட்டு தட்வெட்ப அமைப்புக்களுக்கேற்ப கருப்பர்கள், வெள்ளையர்கள், குட்டையர்கள், நெட்டையர்கள், பனியில் வாழும் எஸ்கிமோக்கள் போன்று
பலவேறுபாடுகளுடன் மனித இனம் தோன் ற  பழக்க வழக்கம் பண்பாடு, கலாச்சாரம் , போன்ற முறைகளால் மதங்கள் பலவாகப் பிரிந்து , உலக முழுவதும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிய வேண்டும்.

ஐந்துபொருட்களும் ஆக்கும் கட்டத்தில் தீ பூமியை உணடாக்குகிறது (எரி மலைக்குழம்பு).
எரி மலைக்குழம்பு சாம்பல் பூசி உலோகத்தை உண்டாக்குகிறது (தாதுப்பொருட்கள் ) . உலோகம் நீரை உண்டாக்குகிறது (குளிர்ந்த  நீர் உள்ள தம்ளரின்  வெளியில் நீர் முத்துக்கள);  நீர் காற்றை உணடாக்கி மரங்களைப் பெருக்குகின்றது. 
 
மரணம்
 
 
அணுக்களில் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல், அதனுடே பரமாணு நிலையில் ஊடுருவி ஓடிச்சுழன்று கொண்டே இருப்பது உயிர்ச்சக்தி.
உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண் டானால் அதுவே உணர்ச்சியாகிறது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன்  தாங்கிப் பழகும் அளவிற்கு மேலாக ஓங்கும்போது அது வல்லுனர்ச்சி  துன்பமாகி நோயாக வருகிறது. இந்த தடை நீடித்து அதன்
விளைவாக உடலில் மின்சாரம், காற்று, இரத்தம் ஆகிய மூன்று சுழல்களும் தடைபடுமேயானால் உடலுக்கு மூலமான வித்து தாங்கும் அளவிற்கு மேல்
கனல் கொண்டு அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடுகூடிய உயிர்சக்தி தொடாந்து அந்த உடலில் சுழன்று இயங்கமுடியாமல் உடலை விட்டு வெளியேறிவிடும் .
உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் மனித இனம் உட்பட ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலப்பொருளால் ஆனவை. அவை அழியும் போது ஏதாவது ஒரு
தனிப்பொருளில் சேர்ந்துவிடும். இது இயற்கையின் விதி, இதற்கு யாரும் எவையும், விலக்கல்ல.
இந்த்தனிப்பொருட்கள் தான் நிலம், நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஆகும். இந்த தனிப்பொருட்கள் தனித்து இயங்கினாலும் இவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தியவாறு உள்ளன. காற்று மண்ணை அள்ளி வீசும், மண் நீரைக்கட்டும் உறிஞ்சும், நெருப்புக்கு எதிரி  நீர் , நெருப்பு வெற்றிடத்தை ஆட்கொண்டு விடும், வெற்றிடமோ காற்றை ஆட்கொண்டு விடும், இதுவே இயற்கையில் அமைந்த சமநிலைத் தத்துவமாகும். இவை ஒன்றை ஒன்று மிஞ்சும்போது உலகில் பேரழிவு ஏற்படும். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் .
மனித உடலிலும் இந்த ஐந்து தனிப்பொருட்கள் (பூதம் ) உள்ளன. பஞ்சபூதமாகிய ஐந்து தனிப்பொருட்களால் ஆன இவ்வுடம்பு முடிவில் மண்ணோடு நேரடியாகவோ மற்ற நான்கு தனிப்பொருட்களால் உந்தப்பட்டோ பின்னர் மண்ணோடு மண்ணாய் சேர்வது திண்ணம் .

தோல் - மண், வாய்-நீர், கண்-நெருப்பு வயிறு-வெளி , மூக்கு -காற்று 
இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தி சமமமாக வைத்திருக்கும்வரை அமைதி நிலவுவதைக் காணலாம். இந்த ஐந்து தனிப்பொருட்களும் ஒரு கட்டுப்பாட்டில் இருந்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கமாகும்.

Monday, February 13, 2012

ஜீவன் என்றால் என்ன ?


உடலின் உள்ளே உயிர்; சக்தியானது வெட்ட வெளியிலே உள்ள ஆற்றல்களை பிராணவாயுவின் மூலம் மூச்சுக் காற்றhல் உடலின் உள்ளே இழுத்து கோடிக்கணக்கான நமது உடல் அணுக்களுக்கு ஆற்றலைக் கொடுத்து உடலை இயக்க வைக்கிறது.

இப்படிப்பட்ட அணுத்திரள்களாளான இப்பிரபஞ்சத்தில் இருந்து மனித ஜீவன் உற்பத்தி ஆகிறது. ஆதியிலே இப்பிரபஞ்சப் படைப்புக்கு மூலமானது இரண்டு சக்திதான். அதைத்தான் சிவசக்தி என்கிறோம் . இதுவே பரமாணுவாகும். அதே போல மனித ஜPவன் உருவாவதற்கு இரண்டு மூல அணுக்கள் காரணமாக விளங்குகின்றன. சிவம் என்கின்ற ஆண் சுக்கிலப்புழுவும் சக்தி என்கிற பெண்
சுரோணிதப் புழுவும் இரண்டின் கலப்பினால் ஜீவன் உற்பத்தியாகிறது.

இப்படி இயக்குகின்ற அந்த சக்தியைத்தான் சுருக்கமாக உயிர்; சக்தி அல்லது ஜீவன்; என்கிறோம். இந்த இரண்டும் அதாவது உடலும உயிரும் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு பொருளைத்தான் ஜீவன் என்கிறோம்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் தனது ஜீவன் சாத்திரத்தைக் கண்டு கொண்டால்; உலகில் எல்லாம் இன்பம்தான். இவ்வுலகில் எதுவும் நல்லதும்
இல்லை. நண்பன் பகைவன் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் தன் சுய தூய அறிவை அறிந்து விட்டால் எல்லாம் சமம், எல்லாம் இன்பமயம் ஆகும். அதுவே ஆத்மஞானம் பெறுவது, இன்றிமையாதது.

ஜீவன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நடைபெறும் தொடாபயணமே வாழ்க்கையாகும். வாழத் தெரிந்து  வாழ்பவர்களான ஞானிகளை நம்பி அவர்களைப் பின்பற்றியும் வாழ்வதே ஞான வாழ்வு அல்லது ஞான வாழ்க்கையாகும் . அதுவே இன்ப வாழ்க்கையாகும் ,


புத்தகம் தரவிறக்கம்

இடீபஸ் காம்ப்ளெக்ஸ்- என்னது அது ?


சென்ற நூற்றாண்டில் 1939 வரை வாழ்ந்த 'சிக்மண்ட் ஃப்ராய்டு' முதலில் அறிவித்த  சித்தாந்தம் இது. நவீன உளவியலின் தந்தை அவர். ஆஸ்திரியாவில் வியன்னா நகரத்தில் பொது மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராகத்தான் தன் வாழ்க்கையைத் துவக்கினார்.

1883-ல் அவருடன் பணிபுரிந்த 'ப்ராயர்' என்ற சக டாக்டர், தன் பேஷண்ட்டான ஒரு பெண்மணி திடீர் திடீர் என்று வலிப்பு வந்து கை கால் விளங்காமல் போய் தாய்மொழியே மறந்து போனதுபற்றி ஃப்ராய்டிடம் சொன்னார். இந்தப் பெண்மணியின் கேஸ்தான் உலகத்தின் முதல் சைக்கோ அனாலிசிஸ் என்னும் உளவியல் பகுப்பாய்வு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 
அவளை ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்தி விசாரித்த ஃப்ராய்டு, 'அந்தப் பெண்
தன் தந்தை நோய்வாய்ப் பட்டிருக்கும்போது சரியாக கவனிக்காததில் ஏற்பட்ட உள்மனக் குற்ற உணர்ச்சிதான் வெளியில் அந்த ஹிஸ்டீரியாவாக பரிணமித்தது' என்ற காரணம் சொன்னார்.
நாளடைவில் ஃப்ராய்டிடம் உளவியல் சிகிச்சை பெற பலர் வந்தார்கள். தன்
கண்டுபிடிப்புகளை புத்தகங்களாக எழுதினார். தி Interprededition  of  Dreams' - 'கனவுகளின் விளக்கம்' என்று 1900-ல் அவர் எழுதிய நூல் உலகப் பிரசித்தி பெற்றது. நவீன உளவியலாளர்கள் ஃப்ராய்டு சொன்ன சில காரணங்களுடன் ஒத்துப் போவதில்லை.

உதாரணமாக அவர் நம் எல்லாச் செயல்களுக்கும் செக்ஸ்தான் அடிப்படை என்றார். நம் கனவுகளை தின வாழ்வில் நிறைவேற்ற முடியாத உள்மன இச்சைகள் என்றார். அவருடைய மிகப் புரட்சிகரமான சித்தாந்தம் இடீபஸ் காம்ப்ளெக்ஸ்.
கிரேக்க புராணக் கதை ஒன்றில் இடீபஸ் தவறாக தன் தந்தையைக் கொன்றுவிட்டு, தெரியாமல் தன் தாயையே மணந்து கொள்கிறான். ஃப்ராய்டு, எல்லா இளைஞர் களுக்கும் தகப்பனை துரத்திவிட்டு தாயை மணந்து கொள்ளும் இச்சையும் எல்லாப் பெண்களுக்கும் தாயைத் துரத்தி விட்டு தந்தையோடு படுத்துக்கொள்ளும் இச்சையும் உள்மனத்தில் உண்டு என்றார்.
இதைத்தான் 'இ.கா.' என்றார் ஃப்ராய்டு. சுத்த ஃப்ராடு என்று எல்லோரும் வலுவாக எதிர்த்தாலும் அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத் தீற்று இன்றும் இருக்கிறது.
ஃப்ராய்டு சிகிச்சைக்கு உட்காரும்போது நிறைய டச்சு சுருட்டுகள் பிடித்தார். 1938-ல் ஹிட்லருக்குப் பயந்து இங்கிலாந்துக்குக் குடியேறினார். 1939-ல் இறந்து போனார். காரணம் கான்ஸர்!

ஒரு மனிதனை உருவாக்குவது பிறப்பா? வளர்ப்பா?




 இந்தக் கேள்வி 1874-லிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். டார்வினின் உறவுக்கார ரான கால்டன் என்பவர்தான் Nature of Nature  கேள்வியை முதலில் எழுப்பியவர் (இந்தச் சொற்`றாடர் ஷேக்ஸ்பியரில் இருக்கிறதாம்). தமிழில் சௌகரியமாக பிறப்பா வளர்ப்பா என்று வடிவு பெறுகிறது. ஒரு மனிதனின் சுபாவம் அவன் பிறப்பைப் பொறுத்தது... அது அவன் ஜீன்களில் உள்ளது என்கிற வாதம் சென்ற நூற்றாண்டில் வலுப்பெற்றது. இதன் முக்கிய ஆதரவாளர்கள் இமான்யுவெல் காண்ட், ஃப்ரான்சிஸ் கால்டன், நவம் சாம்ஸ்கி போன்றவர்கள். மனிதனின் சுபாவத்தை வளர்ப்பினால், சூழ்நிலையால் மாற்ற முடியும் என்ற நம்பியவர்கள் ஜான் லாக், பாவ்லாவ், சிக்மண்ட் ஃப்ராய்டு போன்றவர்கள்.

இரண்டு கட்சியும் மாறி மாறி முதலிடத்துக்குப் போட்டி போடுகின்றன. 40/60, 30/70, 70/30 என்று பிறப்பு-வளர்ப்பு விகிதாசாரத்துக்கான மதிப்பீடுகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
ஒரு கட்டத்தில் எல்லாமே ஜீன் சமாசாரம். நீங்கள் முதுகு சொறிவது கூட உங்கள் ஜீனில் உள்ளது என்றார்கள்.
சமீபத்திய டி.என்.ஏ. ஆராய்ச்சிகளில் கண்டிருப்பதை 'டைம்' பத்திரிகை ஒரு
அட்டைக்கட்டுரையில் வெளியிட்டுள்ளது. இக்கட்டுரை சிந்தனைகளை ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது. பிறப்பின்போதே டி.என்.ஏ-விலேயே நம் சுபாவம் எழுதப்பட்டுவிட்டது என்கிற biological determinism தற்போது மவுசு குறைந்து வருகிறது. டி.என்.ஏ-யில் நம் சுபாவம் எழுதியிருப்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால், அந்த டி.என்.ஏ-யைச் செயல்படுத்தும் மெக்கானிஸம் என்பது ஒரு மனிதன் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்தது
என்று தெரிகிறது. நம் வாழ்நாள் முழுதும் பிறப்பும் வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகின்றன.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் ஓரினச் சேர்க்கையை விரும்பும் ஆண்கள் பெரும்பாலும் இளைய சகோதரர்களாகத்தான் இருக்கிறார்கள் (மூத்தது ஆணாக இருந்தால்).
தந்தையில்லாமல் வளர்ந்த பெண்கள் சீக்கிரமே பூப்படைகிறார்கள் (குடும்பத்தைக் காப்பாற்ற அப்பா இல்லாத அவசரம்). ஓரினச்சேர்க்கையோ பூப்படைவதோ ஜீன் சம்பந்தப்பட்டதுதான்.
ஆனால், அதைத் துவக்கி வைக்கும் செயல் அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதேபோல் மொழித் திறமை, காதல் போன்றவைகளும் ஜீனில் இருந்தாலும் இவற்றைக் கூட்டவும் குறைக்கவும் ஸ்விட்ச் போட வேண்டியிருக்கிறது.

ஆம்! நம் ஜீன்களில் பலவற்றில் ஒரு ஸ்விட்ச் இருக்கிறதாம். அதனை 'ப்ரோமோட்டர்' என்கிறார்கள். இதனுடன் 'என்ஹான்ஸர்' என்று மற்றொரு ஊக்கப்படுத்தும் சங்கதியும் சேர்ந்து ஸ்விட்ச் எப்போது போடப் படுகிறது எப்போது அணைக்கப்படுகிறது அல்லது போடாமலேயே அடக்கி வைக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துகிறதாம்.

ப்ரோமோட்டரில் உள்ள லேசான வித்தியாசங்கள்தான் ஓர் உயிரினத்தின் அமைப்பைத் தீர்மானிக்கின்றனவாம்.

உதாரணமாக Hoxc8 என்னும் ஜீன் ஓர் உயிரினத்தின் மார்புக் கூடான தோராக்ஸை நிர்ணயிக்கிறது. நாம் உள்பட எல்லா உயிர்களுக்கும் இந்த ஏச்ஸ்ஷ8 இருக்கிறது. இதன் ப்ரோமோட்டர்களில் உள்ள வேறுபாடுகள்தாம் உயிரினம் கோழியா, எலியா, மலைப்பாம்பா என்று தீர்மானிக்கிறது. இதில் ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் எலிக்கு மலைப்பாம்பு போல உடல் முழுதும் மார்புக்கூடாகி விடும்.
ஒரு மண்புழுவுக்கும் நமக்கும் ஐம்பது சதவிகிதம் ஜீன்கள் ஒரே வகையே! சுருங்கச் சொன்னால் தற்போது பிறப்பினால் மட்டும் மனிதன் உருவாவதில்லை. அவன் சருமத்தின் நிறம், சுருட்டை முடி போன்ற ஆதார விஷயங்கள் மட்டும் பிறப்புக் காரணங்களால் தீர்மானிக்கப்படலாம். ஆனால், பல பிறப்புக்காரணங்கள் வளர்ப்பினால் திருத்த, திருந்தக்கூடியவை என்பது தெரிகிறது.

மொத்தத்தில் மாலிக்யுலர் பயாலஜி தற்போது ஒரு புதிய மனுதர்ம சாஸ்திரத்தை அமைத்துக்கொண்டிருக்கிறது.

'குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்' என்று ஆதங்கப்படும் திருமழிசை ஆழ்வார், அற்புதமான சந்தத்துடன் விருத்தம் எழுதும் திறமை படைத்திருந்தார். கவிதை எழுதும் திறமை ஜீன் சமாசாரம். அந்த ஸ்விட்சு போடப்படுவது வளர்ப்பினால்தான். யாராவது உங்களிடம் இதெல்லாம் உனக்கு வராது... இதுக்கெல்லாம் பிறந்து வரணும் என்று அலட்டிக்கொண்டால்
'ஹ!' என்று சொல்லுங்கள்.

Friday, February 10, 2012

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?”

காதல் கதை !!!ஒரு உண்மை சம்பவம்!!!!!!


                                            ஒரு உண்மை சம்பவம்!!!!!!!


      காதல் கதை !!!



                        ஒரு அழகான கிராமம்.அந்தக்
கிராமத்தின் தலைவருக்கு ஒரு
பெண் இருந்தாள்..அவளைப் போல்
ஒரு
அழகிய பெண்னை யாரும்
பார்த்ததும் இல்லை
 கேட்டதும்
இல்லை.அந்தப் பெண் பக்கத்து
கிராமத்தைச்
சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
காதலிக்க ஆரம்பித்து
விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த
கிராமமும் அந்தக் காதலை
எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை
விட்டு ஒட
 தீர்மானித்து ஒரு
நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர்.
  உடனே
ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
தேடியது. இருந்தும் அவர்களால்
கண்டு பிடிக்கவே
முடியவில்லை.
  அதன் பிறகு அவர்கள்
 அந்த்க்
காதலை ஏற்றுக்
 கொள்ள முடிவு
செய்து செய்தித்தாளில்
விளம்பரமும்
கொடுத்தனர்.அதைப்
  பார்த்த
காதல் ஜோடி உடனே ஊர்
திரும்பியது. சந்தோஷப் பட்ட
ஊர்
 மக்கள் அந்தக்
காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
முறையில்
 திருமணம் செய்ய
முடிவு செய்தனர்.  
திருமணத்திற்குத் தேவையான
பொருட்களை
 வாங்க
நகரத்திற்குச்
சென்றிருந்தனர்.அப்போது
எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
எதிரிலேயே
 உயிர் துறந்தான்.
உடனே அந்தப்
 பெண்னும்
 மனநிலை
பாதிக்கப்பட்டாள்.
  
ரொம்ப நாட்களுக்குப்
 பிறகு
நினைவு திரும்பிய அந்தப் பெண்
குடும்பத்தினருடன்
  வசித்து
வந்தாள். திடீரென்று ஒரு நாள்
அப்பெண்னின் தாய் ஒரு கனவு
கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
மகள் அவளுடைய
 காதலன் நினைவாக
வைத்திருக்கும் உடையில்
இருக்கும்
 இரத்த்க் கறையை
உடனே துவைக்க வேண்டும்
என்றது,இல்லா விட்டால்
  மோசமான
விளைவுகள்
ஏற்படும் என்றும் எச்சரிக்கை
செய்தது.
 அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின்
தந்தையிடமும் கனவில்
எச்சரித்தது.ஆனால் அவரும்
அதைக் கண்டு
கொள்ளவில்லை
  அடுத்த நாள் அப்பெண்னின்
கனவிலேயே தோன்றி
எச்சரித்தது.அவள் உடனே
தாயிடம் கனவைப்
 
 பற்றிக்
கூறினாள். அதன் பிறகே அதன்
முக்கியத்துவம்
உணரப்பட்டது.அவள் தாய்
 அதை
துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும்
 அதைத்
துவைத்தாள். இருந்தும் தேவதை
மறுபடியும் அடுத்த நாள்
கனவில்
வந்து கறை சரியாகப்
 போகவில்லை
என்று
 எச்சரித்தது.
மறுபடியும் அப்பெண்
அத்துணியைத்
துவைத்தாள்.இருந்தும்
 கறை
போகவில்லை.
 அடுத்த நாள் காலையில்
அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
பெண் கதவைத்
திறந்தாள்.அப்போது கனவில்
வரும் அதே பெண் நின்று
கொண்டிருந்தாள். அவள் முகம்
கனவில் வருவதைப்
 போல் கனிவாக
இல்லாமல்
வெளிறிப் போய் இருந்தது.உடனே
இவள் பயத்தினால் அலறினாள்.
  அந்தத் தேவதை கோபத்துடன்
கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்
எக்ஸல் போடு கறை போயிடும்"
என்றது.
  
இதைப் படித்ததும் உடனே என்னை
உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
நானே இதை எனக்கு
அனுப்பியவரைத்
தேடிக்கிட்டு
 இருக்கேன்
 



பழமொழிகளின் உண்மை ரகசியம்


“காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்” என்று போகர் சித்தர் கூறினார்.

       அது என்னவென்றால் ஒரு நாளைக்கு 21600 சுவாசம் இயங்கும். அந்த சுவாசத்தை 40 வயதுக்கு உள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டடால் உடம்பு காயகல்பம் ஆகும். ஆயுள் நீடிக்கும்.

“அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்”

        அடி என்பது சிவன்,அண்ணன் தம்பி என்பது விநாயகர், முருகன். நம் ஆத்திர அவசரத்திற்கு சிவன் உதவுகின்ற மாதிரி விநாயகரும்,முருகனும் உதவ மாட்டார்கள்.இதுதான் அர்த்தம்.

“ஜனி நீராடு”

       ஜனி நீர் என்பது தினமும் ஜனிக்கக்கூடிய நீர்ஃ அன்றாடம் பிறக்கக் கூடியது என்று அர்த்தம்.அன்றாடம் ஜனிகக்கக் கூடிய நீரில் குளிக்க உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதே இதன் அர்த்தம்.

இரு மார்புக்கு இடைப்பட்ட காலத்தில் கல்  ”

      அது என்னவென்றால் சிசுவாக இருக்கும் போது தன் தாயுடைய மார்பைப் பிடித்து பால் குடிக்கின்றோம்.அதற்கு பின் தன் மனைவியின் மார்பைப் பிடிக்கச் செல்வோம். அந்த மார்புக்கும், இந்த மார்புக்கும் இடைப்பட்ட வயது 25. இந்த 23 வயதிற்குள் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். அவன் பெண் மாயைக்கு வென்று விட்டால் அவனுக்கு படிப்பு வராது. இதுதான் அர்த்தம்.

“தாய் பத்தடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்”

     தாய் என்பது வாழை மரம். அதை 10 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும். பிள்ளை என்பது தென்னம்பிள்ளை. அதை 16 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும் என்பதுதான் பொருள்.

Tuesday, February 7, 2012

ஜீவனே சிவன் - இது உண்மையா?


ஆம். உண்மைதான்.

நம்  இருதயம் சிவலிங்கம் வடிவம் போன்றது. நாம் ஏன் கடவுளுக்கு தேங்காய் உடைத்து வழிபடுகிறோம் என்றால் நம் இருதயம் தேங்காய போன்ற வடிவத்தில் லிங்கமாக உள்ளது.
தேங்காயில் மூன்று நரம்புகள் இருக்கும். அது மும்மூர்த்திகளின் குறுக்கெலும்புகள். மூன்று கண்களும் இருக்கும். அதே போல் வாழைப் பழத்திலும் மூன்று பட்டையாக மூன்று நரம்புகள் உள்ளது. அது ஆண் வாழைப்பழம். ஐந்து நரம்புகள் உள்ள பழம் பெண் வாழைப்பழம். அதில் நமசிவாய மந்திரம் உள்ளது.
ஆகையால் தான் கோவில்களில் நாம்தேங்காயை உடைத்தும், பழத்தை வைத்தும் வழிபடுகிறோம்.


வினாயகர் சுழி- ஒரு விளக்கம்.


தாயின் கருவரையில் பத்து மாதங்கள் வரை தங்கியிருந்து நன்கு வளர்ச்சி அடைந்தவின் கருவறையில் இருந்து வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை சிசுவானது தமது இருகரங்களையும் தனது நாசிக்கு நேராக வைத்து கூப்பி வணங்கி தியானத்தில் ஈழ்ந்து இருக்கும்.



 அந்த சிசுவானது இறைவனிடம், “இறைவா நீயே கதி!” என்று கருவறையில் தியானித்துக் கொண்டு இருக்கிறேன், நீ எனக்கு என்ன வரம் கொடுக்கப் போகிறாய்? ஏனக் கேட்கும். அதற்கு இறைவன் மும்மூர்த்தியின் கங்கையில் மூன்றரை லிடடடர் நீரில் அமர்ந்து கொண்டிருக்கிறாய்! இன்னும் சில் நாட்களில் வெளியில் செல்லப் போகிறாய். உன் தாயின் அபான வாசலின் வழியே நீ செல்லும் பொழுது விநாயகருக்கு உரிய மந்திரத்தை எந்த அளவுக்கு உச்சரிக்கன்றாயோ, இந்த அளவுக்கு நீ வாழ்வாயாக! ஏன்று இறைவன் வரம் கொடுக்கினறார். ஆகையால் அந்த சிசு தாயின் அபான வழியான முதல் வாசல் வழியாக வருவதால் அந்த வாசலின் பெயர் உகரம்.ஆதலால் அந்த சிசு முதன் முதலில் “உ,அ, உ,அ” என்று அழுகின்றது.ஆகவே நாம்எந்;த ஒரு  விசயத்தை எழுதும் போதும், முதலில் “உ” போடுகிறோம்.இதுவே “உ” போடும் ரகசியம். இதை 108 முறை உச்சரித்தால் அக்குழந்தை 120 வயது வரை தீர்க்காயுசுடன் வாழும். அக்குழந்தை இம்மந்திரத்தை குறைத்து உச்சரிக்க உச்சரிக்க, அதன் ஆயுளும், குறையும். இதனால் தான் பிறந்த குழந்தை அழுகவில்லை எனில் கிள்ளிவிட்டோ, அல்லது சுண்டிவிட்டோ அழ வைப்பார்கள். ஆகையால் அந்த சிசு இந்த உலகத்தைப்; பற்றி அறிவதற்கு முன்;பே அதன் வாயில் இருந்து வரக்கூடிய எழுத்து “உ” அடுத்து வரக்கூடிய எழுத்து ‘அ” மூன்றாவதாக வரக்கூடிய எழுத்து “ம”. இ;ந்த “உகரம், அகலம், மகரம்” அம் மூன்றும் டீசர்ந்துதான் “பிரணவம்”. இந்த பி ரணவம்தான் “ஓம்” எனும் நாதம்.
இந்த ஓம் என்ற நாதத்தை அன்றாட வாழ்க்கையில் நாம அனைவரும் நம்மை அறியாமலேயே சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். அது எவ்வாறு  என்றால்,
வணங்குவோம்
படிப்போம்
அழைப்போம்
செல்வோம்
கொடுப்போம்
பேசுவோம்   
வாழ்த்துவோம்
ஆகையால் தான் ஓம் என்பது என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் நாதமாகி உணரப்படுகிறது


Monday, February 6, 2012

பெண்....

பெண்....


பாவம் ஒரு விளையாட்டு பொருள்...


அவள் போடும் ஒப்பனைகள் கூட


அவளை அடிமை யாக்குகிறது...


பணிந்து வாழ்வதற் காகவே அவள்...படைக்க பட்டாளா..?


அவளின் அறிவு...கட்டுப்பாடுகளால் காயப்பட்டது...


அவளின் பலம்ஆணாதிக்கத்தால் ..உருக்குலைந்த்தது..


விண்ணுக்கு சென்று ...வீடு திரும்பினாலும்...--அவள்


வீட்டில் கணவனின் கை பொம்மை தான்...


விஞ்சான உலகம் தான்...


ஆனால்...


இன்னும் இங்கே ...


விதவை...மலடி...வாயாடி...ஓடுகாலி...


மாறவில்லை...




ஆண் , பெண்.. சரிநிகர் சமானம்...


இல்லை...


இது...அவளின் உடலமைப்பால்


உருக்குலைந்து போனது...


ஆணுக்கு கருப்பை இடமாற்றம் நடந்தால் ஒழிய...

சமானம் உறுதியில்லை.  



ஒருபெண்ணை....


அலங்காரம் கூட அடிமை படுத்தும்...


விளம்பரங்களே அதற்க்கு சாட்சி.

கற்றுக் கொடுங்கள்

எனக்குத் தெரிந்த என் நண்பரின் மகன் படு சுட்டி, அவன் அப்பாவை விட அவனுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம். school க்கு ஆட்டோவில் போகும் போது இப்போதே புட்போர்ட் அடிப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
“யப்பா உள்ளே போய் ஒட்காருப்பா, விழுந்துரப்போற..’ என்று நண்பர் சொன்னால், “நீ முதல்ல உள்ளே போப்பா..எதுதாப்ல வண்டியில வர்றவன் இடிச்சுட்டு போய்ற போறான்.” என்று சொல்லக் கூடிய வாய் துடுக்கு. 
தன் உடை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கின்ற கம்பீர எண்ணம். 
ளஉhழழட விட்டு வந்தவுடன், தன் ஷ வை, புத்தகப்பையை,சரியான இடத்தில் வைக்கும் ஒழுங்கு. இப்படி எத்தனையோ விஷயங்களில் அவன் என் மனதில் ஆக்ரமித்திருக்கிறான்.
வெட்கம், தாழ்வு மனப்பான்மை, பயம், இவை போன்ற எதிர்மறை பழக்கங்களை அவனிடம் பார்க்கவே முடியாது.
சின்ன வயசுதான். ஆனால் அவனுக்குள் ஒரு விவரம் தெரிந்தவருக்குள் இருக்கும் அசாதாரமாண தன்னம்பிக்கை எப்படி வந்தது..? அவன் வளர்க்கப்பட்ட விதம்தான் காரணம்.
அவன் அம்மா, அவனுக்கு ஊட்டிய தைரிய பண்புகள்தான் காரணம்.
குழந்தைகள் செய்யக்கூடாது என்று நாம் நினைக்கும்  வேலையைக்கூட, “உனக்கு எது தேவையோ, அதை நீயேதான் செய்துக் கொள்ள வேண்டும்” என்று அவனை உறுதியுள்ளவனாய் மாற்றியிருக்கிறார்.
தன் சட்டையில் பட்டன் பிய்ந்து இருந்தால் கூட, அதை அவன்தான் தைத்துக் கொள்ள வேண்டு;ம். “ஐய்யோ..ஊசி குத்திடுச்சுனா..?” என்று நீங்கள் நினைப்பது போல் அவன் அம்மா நினைப்பதில்லை.
வாகன நெரிசல் இருக்கிற, சாலைகளை கடந்து போய், பொருட்களை வாங்கிவர அவனை அனுமதித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க, தைரியம் என்கிற உற்சாக மருந்தைத்தான், அவனுக்கு அந்த தாயும் சரி, குடும்பத்திலுள்;ளவர்களும் கொடுத்திருக்கிறார்கள்.
அதனுடைய reaction தான், அந்த குழந்தையின் தன்னம்பிக்கை.
smartboy  என்று நாம் சொல்வோமே.! அதன் மொத்த உருவம் அந்த குழந்தைதான்.
தனக்கிருக்கும் திறமைகளை வெளிக்காட்ட அவன் ஒரு போதும் தயங்கியதில்லை.பாடச் சொன்னால், பல பேர் கூடியிருக்கிற இடமானாலும் பாடுவான், ஆடுவான்.
ஆனால் தனக்கு இதெல்லாம் தெரியும் என்று தன்முனைப்பு அல்லது முந்திரிக் கொட்டை மாதிரி அலட்டிக்கொள்ள மாட்டான்.இது எதைக் காட்டுகிறது தெரியுமா? அவனுக்குள் எந்தவித தாழ்வு மனப்பான்மையோ, வெட்கமோ, பயமோ, கொஞ்சம் கூட அவனிடத்தில் தலைதூக்கவில்லை என்பதுதான். ஆம் நண்பர்களே…தைரியம்தான் தன்னம்பிக்கையின் ஆணி வேர். இது ஆழமாக வேறூன்றி விட்டால், எந்த எதிர்மறை சிந்தனைகளும், உள்ளுக்குள் ஊடுருவாது.
நம்மில் எத்தனைபேர், அப்படி குழந்தைகளை வளர்க்கிறோம்..? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
பாட்டி பேய் கதையாய் சொல்லி பயமுறுத்துவாள். தாத்தா மீசையைக் காட்டி காட்டியே பயமுறுத்துவார். அப்பா நேரடியாகவே மிரட்டுவார். அம்மா பூச்சாண்டியை  நினைவுபடுத்தாமல் சோறூட்ட மாட்டாள். போதாக்குறைக்கு பள்ளிகளும் நம் குழந்தைகளை அநியாயத்திற்கு பயமுறுத்துகின்றன. படிக்கின்ற ஆர்வத்தை நம் குழந்தைகளிடம் குறைத்ததே இந்த பயமுறுத்தல்தான்.
நன்றாக யோசித்துப் பாருங்கள்.
பள்ளிக்கு போக மறுக்கும் குழந்தையை, அப்பா மாட்டை விரட்டுவதுபோல் ஒரு மரத்திலிருந்து குச்சியை உடைத்து, போறியா? இல்லையா? என்று மிரட்டி மிரட்டியே வகுப்பறை வரை விரட்டி செல்வார். அதோடு அந்த மிரட்டலும், பயமுறுத்தலும் நின்று விடாது. “நீங்க விடுங்க சார்..இனி நான் பாத்துக்கிறேன்..” என்று தன் பங்குக்கு அந்த வகுப்பு வாத்தியாரும் சேர்ந்துக் கொள்ளுவார்.
தினமும் இதே வேளையாக இருந்தால் அந்த குழந்தைக்கு பள்ளி செல்லும் ஆர்வம் எப்படி வரும்.? தன்னம்பிக்கை எப்படி வளரும்.? 
நண்பர்களே..நம் குழந்தைகளின் ஒவ்வொரு பண்பிற்கும் நாமும், நம் குடும்பத்தாரும் தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறோம். நம் குழந்தையின் ஒவ்வொரு பார்வையும் நம்மீது மட்டும்தான் அதிகமாக பதிகிறது. நாம் எதை சொல்கிறோமோ..அதையே திருப்பி சொல்கிறது. கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடும் போது கூட, தன் பெற்றோர் எப்படி சண்டை போடுவார்களோ அதை போலவே திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அப்படியானால் அந்த குழந்தைளின் மனதில் உருவாகும் அனைத்து எண்ணங்களுக்கும் நாம்தான் மிக முக்கிய களமாக இருக்கிறோம். நாம் சொல்லிக் கொடுக்கும் விசயங்களைத்தான் அவர்கள், வேத வாக்காக நினைக்கிறார்கள். பயமுறுத்தியே வளர்க்கும் குழந்தை, கோழையாகி, தாழ்வு மனப்பான்மை நிறைந்து, மற்றவர்கள் துணையில்லாமல் எந்த வேலையையும் செய்ய துணிவில்லாமல், கடைசியில் சோர்ந்து போகிறது. கூட்டத்தை பார்த்தால் சில குழந்தைகளுக்கு வெட்கம் வந்து, வாய் பேசக் கூட கூசி நிற்கும் பரிதாப ஊமை குழந்தைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். இவர்கள் இப்படியே வளர்ந்தால் எதிர்கால போட்டிகள் நிறைந்த உலகத்தில் சாதிக்கப் போவதுதான் என்ன..?
ஆகவே நாம் நமக்கென வந்துவிட்ட விழுதுகளை, சரியான உரமிட்டு வளர்ப்பது நம் முக்கிய கடமை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தை பெரிய ஆளாகி, இந்த ஊருலகத்தையெல்லாம் ஆள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நிறைவேற வேண்டுமென்றால், உங்கள் குழந்தைக்கு நல்ல பண்புகளை ஊட்டும் பயிற்சிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தன்னம்பிக்கையின் முதல் எதிரியான பயத்தை கொன்றுபோட, சூட்சுமங்களை கற்றுக் கொடுங்கள்.

ஆன்மிக தரவிறக்கம்


ஆன்மிக சம்பந்தமாக தேடல் உடைய வாசகர்களுக்கு , கிழ்க்கண்ட நன்கு புத்தகங்களும் வர பிரசாதம். 
ஸ்ரீ ருத்ரம் என்கிற மகா manthiram , சிவபெருமானை நேரில் காட்சியளிக்க வைக்க கூடிய மந்திரங்களும், அதன் பாட்டு வடிவமும்,  இன்றைய பதிவில் இணைத்துள்ளேன்.சதுரகிரியின் மகத்துவத்தை விளக்கும், சதுரகிரி பயணம் என்கிற நூலையும், வாசகர்கள் தரவிறக்கி கொள்ளலாம்.