சுட சுட செய்திகள்

Tuesday, May 28, 2013

சட்டத்தின் படி (கடைசி)



தியாகு வந்துக் கொண்டே என்ன தமயந்தி திருடன் வந்தாக்கூட தெரியாத அளவுக்கு computer ல் என்ன தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்?

அதுதான் திருடனை பிடிக்க நீ இருக்கியே. அசிஸ்டன்ட் கமிசனர் சார் என்றாள் தமயந்தி.

ஹலோ ஏசி வாங்க என்றான் எழில். 

நான் என்னைக்குமே இந்த வீட்டுக்கு தியாகுதான்.
ஓகே ஓகே என்று தமயந்தி முடிப்பதற்குள்,

ராசாத்தி, முத்து திவாகரன் உள்ளே வந்தபடியே 
குட். அந்த ஓகே என்பதைதான் உன்னிடம் எதிர்பார்க்கிறோம்.

தியாகு திவாகரன் மகன் எழில் தமயந்தி மூவரும் திடுக்கிட்டு பார்க்க திவாகரன் தொடர்ந்து, “அம்மா தமயந்தி சுத்தி வளைக்காம நேரடியாக கேக்கிறம்மா…உன் அம்மாவுக்கு தியாகுவை மாப்பிள்ளையாக ஆக்கிகொள்ள விருப்பம். அதிலும் நியாயமிருக்கு. முத்து தன்  சொந்த சகோதிரியாக நினைத்து உன் அம்மாவையும் பாதுகாத்ததுதான்.

உன் அப்பாவின் இந்த உயர்வுக்கு நான்தான் காரணமென்று நினைப்பதால் என் மகனை மாப்பிளையாக்க அவர் ஒருவேளை விரும்பலாம். அது மட்டுமல்ல. உன்னுடைய நடை உடை பாவனை செயல்பாடு அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தது. ஆகவே உன்னை என் மருமகளாக ஆக்கிக் கொள்ள எனக்கு விருப்பம். இனி உன் இஸ்டம். எழி;ல் நீ என்னப்பா சொல்றே?”

தியாகு என்னப்பா சொல்லற ? என்றாள் ராசாத்தி.

எங்க ரெண்டு பேரையும் விடுங்க. தமயந்தி நீ என்ன சொல்லறே, எந்த ஒளிவுமறைவுமில்லாமல் சொல்லு…

சின்ன வயதிலிருந்தே நானோ அல்லது தமயந்தியோ அப்படியொரு எண்ணத்தில் வளரவில்லை. பெரியோர் விருப்பம் என்னவோ அது எனக்கு ப+ரண சம்மதம். என்றான் தியாகு.

என்னம்மா தமயந்தி உன் முடிவு என்னம்மா, இல்ல வேறு எதாவது…யாரையாவது பயப்பட வேண்டாம். நான் நிச்சயமாக வருத்தப் பட மாட்டேன். என்றாள் திவாகரன்.

திடுக்கிட்ட தமயந்தி ஐயா என்னை மன்னிச்சிடுங்க. எங்க அம்மா என்னையோ தியாகுவையோ அப்படி வளக்கல. நாங்க ரெண்டு பேரும் குடும்ப கஸ்டத்தை உணர்ந்து படிச்சவங்க. பெரியவங்க முடிவே என் முடிவு. என்று கொஞ்சம் வெக்கத்துடன் சொன்னாள் தமயந்தி.

அட கடவுளே இதற்கு முடிவே இல்லையா, என்று பெருமூச்சுவிட்டார் திவாகரன்.

நீண்ட அமைதிக்கு பின். திவாகரன் மகன் எழில்….

அப்பா…என்னை மன்னிச்சிடுங்க. பெரியவங்க எடுக்க வேண்டிய முடிவை நான் சொல்றதுக்கு….

தமயந்திக்கு தியாகுதான் பொருத்தமான மாப்பிள்ளை. சின்ன வயதிலிருந்து ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்டவர்கள். மேலும் எனக்கு அம்மாவின் பாசம் என்னென்னே தெரியாது. தங்கை பாசம் தெரியாது. அந்த உறவின் நிழலில் வாழ நான் ஆசைப்படறேன்.

இன்று முதல் தமயந்தி என் சொந்த தங்கை. என்னம்மா என்னை மகனா ஏற்றுக் கொள்வீர்களா? என்:று ராசாத்தியின் காலில் விழ போனவனை அள்ளி தூக்கி நிறுத்தி எழில் நீ எனக்கு கடவுள் கொடுத்த சொந்த மகனப்பபா…என்றபடி ஆனந்த கண்ணீர் வடித்தாள் ராசாத்தி.

அப்பறமென்ன பெரியோர்களே சீக்கிரம் நாள் குறிங்க. என்று சொல்லியபடி துள்ளி குதித்து ஓடினாள் தமயந்தி.
எல்லோரும் ஒரே சப்தமாக…

அடி கள்ளி…. என்றனர்.





நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: