சுட சுட செய்திகள்

Tuesday, July 31, 2012

தவிச்ச வாய்க்கு..

தவிச்ச வாய்க்கு..
வாங்க அண்ணா வாங்க… ஏங்க இங்கே யார் வந்திரக்காங்கன்னு வந்து பாருங்க என்றாள் பரிதியின் மனைவி.

ஓ வாங்க மாப்பிளே.. வாங்க

என்ன ஆடி காத்தடிச்சமாதிரி  திடீரென்று? உக்காருங்க என்று சோபாவைக் காட்டினார் பரிதி.

ஏங்க ஒரு நிமிசம் உள்ள வாங்களேன்..

என்ன தெய்வம்? (தெய்வானையின் முழு பெயர்) என்றார் கணவர் பரிதி.

குடிக்க  கொடுக்க தண்ணி இல்லை. தண்ணி கொண்டு வர்ற பையனும் வரல.

அதனாலென்ன? நான் போய் வாங்கிட்டு வர்றேன்.

மாப்பிளே பேசிட்டு இருங்க இப்ப வந்தர்றேன் என்றபடி கிளம்பினார் பரிதி.

என்னம்மா எப்படியிருக்கே பையன் என்ன பண்ணறான்?

தருண் Msc   அக்ரி முடிச்சிட்டு கிராமத்துல இருக்கிற நெலத்திலே ஏதோ பயோ டெக், அப்புறம் இயற்கை சாகுபடி சொட்டு நீர் பாசனம,; இந்த முறையில விவசாயம் பண்ணீட்டு இருக்கான். அதோடு ஆடு மாடு கோழின்னு வளர்த்துக்கிட்டு இருக்கான் கவர் மெண்ட் வேலையே வேண்டான்னு சொல்லிட்டான் என்றாள் தெய்வானை.

கேக்கவே ரொம்ப சந்தோசமாக யிருக்குதும்மா! லட்சம் கொடுத்து வேலையிலே சேரதைவிட இது நல்ல முடிவும்மா என்றபடி..

குடும்ப உறவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்க்ள்.

கையில் ஒரு பாட்டில் தண்ணீருடன் வந்து குடிக்க கொடுத்தார் பரிதி.

என்ன மச்சான் இங்க குடிக்கக் கூட தண்ணீர் இல்லையா? வெளியில போய் வாங்கிட்டு வர்ரீங்க?

சற்று வெட்கத்துடன் 7 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருது அது இப்போ அரைமணி நேரம் வர்றது கால் மணி நேரம்தான் வருது. மாமுலா தண்ணீர் கொண்டு வர்ற பையனையும் காணோம். என்றான் பரிதி.

மூலிகை கலந்த தண்ணீர் ஆச்சே உங்க ஊர் தண்ணீர்.!

ம்க்கூம்…அதுக்கு ஆபத்து வர்ற மாதிரியாயிடுச்சே மாப்பிளே..!

என்ன சொல்லறீங்க மச்சான்?

கேரள அரசு அட்டபாடியில் அணைக்கட்டறாங்களாம் அப்புறம் எங்களது சிறுவானிக்கு ஏது மாப்பிளே தண்ணிர்? என்று வேதனையுடன் சொன்னார் பரிதி.

என்ன அநியாயம் இது? முல்லை பெரியார் அணை விவகாரத்துல நம்ம ஆம்பிளை பொம்பளைங்கள ஈவு இரக்கமில்லாம வெளியேத்துனாங்க. உங்க கோயமுத்தூருலேயும் சரி Thirupur லேயும்  சரி எத்தனை மலையாளிகள் வேலை கொடுத்து காப்பாத்திக்கிட்டு இருக்கோம்? திருப்பூர்ல முக்கால் வாசி கடைகளையும் நடத்துறவங்க மலையாளத்துக்காரங்கத்தான். நம்ம ஊர்ல இருக்கிற எல்லா காலேஜ்லேயும் அவுங்க  புள்ளைகளை கொண்டு வந்து படிக்க வைக்கிறாங்க. நீலகிரியிலிருந்து சென்னை வரை எத்தனை மலையாளிகள் கடை கண்ணி வைச்சு சுகமா வாழறாங்க? நாம எவ்ளோ கண்ணியமா நடந்துக்குறோம் என்றார் மைத்துனர்.

அது மட்டுமில்ல.. மாப்பிளே அங்க ஓரங்கட்டப்பட்ட நடிகைகளைம் பெரிய அளவில் கொண்டு வந்ததும் நம்ம ஆளுங்கத்தான்.ஆனால் ரொம்பவும்தான் சண்டித்தனம் செய்யறாங்க என்றார் பரிதி.

அதுசரி மாப்பிளே விவசாயம் எல்லாம் எப்படி போயிட்டுயிருக்குது?

அந்த வேதனையை எப்படி சொல்லறது? நாங்க காவேரிதான் நம்பியிருக்கோம். கர்நாடககாரனுக்கு கல் மனசு… கரையல.

உச்ச நீதி மன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் அவங்க மதிக்கறதா  தெரியல..பச்சபுள்ள கணக்கா பயிறு வாடுது..ஆனா ஒண்ணு..மச்சான்..வளர்ற பயிரை தண்ணியில்லாம காய வைச்சு கொல்றதும், பச்ச குழந்தையை கழுத்தை நெறிச்சு  கொல்லுறதும் சமம்.அந்த பாவம் சும்மா விடாது .

கபினி அணையைக் கட்;டியது நம்ம சோழ மன்னர்தான். நம்ம மண்ணு காயக் கூடாதுன்னு உலகத்துக்கே சோறு போடணும் ன்னு நினைச்சு அணையை கட்டினாரு..இப்போ கர்நாடகக் காரன்கிட்ட அய்யா சாமின்னு கையேந்தற நிலமையாயிடுச்சு…

ஆனால் ஒண்ணு மாப்பிளே..இந்த சண்டித்தனத்துக்கும் அடாவடி அக்கிரமத்துக்கும் ஒரே முடிவு நதி நீர் பங்கீடு ஒன்றுதான். ம்ம்…

அம்மா தண்ணி கொண்டு வந்திருக்கேன்…

உள்ளே கொண்டு வாப்பா நீ மகராசனா இருப்பே…

ஏங்க ரெண்டு பேரும் சாப்பிட வர்ரீங்களா….சாப்பாடு ரெடியாயிடுச்சு… இது தெய்வானை.

சாப்பிட்டுக் கொண்டே சரி மாப்பிளே..அனுசா என்ன பண்றா படிப்பு முடிஞ்சுருச்சுல்ல?

அதெல்லாம் Bsc அக்ரி முடிச்சுட்டு Msc பண்றேன்னு விடாப்பிடியா ஒத்தக் கால்ல நிக்குறா..

அண்ணே மோர் ஊத்திக்கோங்க…உப்பு போட்டுக்கோங்க.. என்றபடியே உப்பை ஒரு சிட்டிகை எடுத்து இலையில் வைத்தாள் தெய்வானை.

 அண்ணா சுத்தி வளைச்சு பேச விரும்பல. ஒரு நாள் நல்ல நாள் பாத்து வர்றோம். என்று கணவனைப் பார்த்தாள். நீ எடுத்த எந்த முடிவுக்கு நான் குறுக்கே நின்னு இருக்கேன் தெய்;வானை? என்றார் கணவர்.

வந்த வேளை சுபமாக முடிந்ததை எண்ணி சந்தோசப்பட்டார் அந்த மைத்துனர்.

தருண் - அனுசா திருமணம் நடக்க இனிய வாசகர் சார்பாக வாழ்த்துக்கள்.

தவிச்ச வாய்க்கு தண்ணிர் என்ன, விருந்தே கிடைக்கும்.

கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி( 8) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சட்டத்தின்படி 8
சென்ற வாரம்  
கதவை திறந்துக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி ஒருவள் வெளியேவந்தாள். அப்போது  ராசாத்தியைப் பார்த்து பானுவும், பானுவைப்பார்த்து ராசாத்தியும்  திகைத்து நின்றார்கள்.
எதற்காக…..இந்த திகைப்பு?


வேலுவையும் அவன் குழந்தையையும் பேக்டரிக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு மேனேசரிடம் பனியன் பண்டலை நல்லமுறையில் சேர்த்ததை பெற்றுக்கொண்டவரின் கையப்பமுள்ள நகல்களை சமர்பித்துவிட்டு திரும்பிய பொழுது,

என்னப்பா இப்பத்தான் வந்தியா? சரி சரி ரொம்ப களைப்பாயிருப்ப.. போய் ரெஸ்ட் எடு.. என்றார் கம்பெனி முதலாளி திவாகரன்.

டீரைவர் ஏதோ சொல்ல முற்படுவதற்குள் திவாகரின் செல் அலறியது.

'மனேஜர் டிரைவர் மணி எங்கே?'

'சார் நீங்கத்தான் அவருக்கு லீவு கொடுத்து அனுப்பி வைச்சிட்டீங்க' என்றார் பவ்யமாக…

லாரி டிரைவரைப்பார்த்து 'நீ ரொம்ப டயர்டா இருக்கிறீயா? வண்டி ஓட்டுவியா?'

'முதலாளி எனக்கு தெரிந்த ஆள் ஒருத்தர் இருக்கிறார்.. அவரு கார் ஓட்டுவார்' 
என்று ஆபீஜ் ருமின் ஜன்னல் வழியே வேலுவைக்காட்டினான்;.

'அவரைக் கூப்பிடுய்யா…'

'வேலு இங்க வாப்பா'…அழைத்தவன் லாரி  டிரைவர்.

தன் குழந்தையுடன் முதலாளியின் அறைக்குள் பவ்யமாக வந்து நின்றான் வேலு.

'ஏப்பா கார் ஓட்டுவியா?'

'ஓட்டுவேன் முதலாளி ஆனால் லைசன்ஸ் இல்லை'

'ம்ம்ம…சரி அது பரவாயில்லை..இது யார் உன் குழந்தையா?'

'ஆமாங்க…'



'மேனேசர் நாங்க வர்ர வரைக்கும் குழந்தையை வாட்ச் மேனிடம் பார்த்துக்க சொல்லு.'

லாரி டிரைவரைப் பார்த்து 'சரிப்பா வேலைப் போட்டு கொடுத்துடலாம் நாளை காலை என்னை வந்து பார்.'

வேலு பின் சீட்டுக் கதவை திறந்து விட்டான் திவாகரன் அமர்ந்தபடி 

'திருப்பூர்ல உனக்கு எல்லா இடமும் தெரியுமா?' ஏன்றார்.

'தெரியுமுங்க..'

'சரி ஹோட்டல் வேலனுக்கு போ…Buyer வெயிட் பண்ணீட்டு இருப்பார்.'

வேலுவினுடைய டிரைவிங்கில் இருந்த நிதானம், சாலை விதிமுறைகளை அனுசரித்தல், மொத்தத்தில் அனுபவமுள்ள ஓட்டுனரின் திறமை யிருந்ததை கண்டு மனதுக்குள்ளேயே பராட்டினார் திவாகரன்.

'உனக்கு பனியன் கம்பனியில் என்ன வேலை தெரியும்?'

'முதலாளி நான் ஏழு வயசிலிருந்தே பனியன் கம்பனிகளில் வேலை செய்யறேன.கை மடிக்கறதுலயிருந்து கட்டிங்,  டெய்லரிங், அயன், பரிண்டிங், டையிங்ன்னு எல்லா செக்சனிலும் வேலை செஞ்சிருக்கேன் '.

'உன் குடும்பம் எல்லாம் எங்கே யிருக்காங்க?''

இந்த கேள்வியை வேலு சற்றும் எதிர்பார்க்கவில்லை. உண்மையைச்சொன்னால்  வேலை கொடுப்பாரா? இல்லை ஒரு குடும்பத்தை காப்பாற்ற வழி    தெரியாத உனக்கு எத்தனை வேலை தெரிந்தாலும் ஒழுங்காக வேலை செய்ய முடியாது என்று எண்ணி வேலைக் கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்று மனதுக்குள்ளேயே நீண்டநேரம் யோசித்தான் வேலு.

அதற்குள் ஹோட்டலையடைந்தது கார்.

தன்னை சுதாரித்துக் கொண்ட வேலு காரை சரியான இடத்தில் நிறுத்திவிட்டு பின்கதவை பவ்யமாக திறந்தான் திவாகரன் முன்னே செல்ல பின்னாலேயே ஓடிவந்தான் வேலு.

"முதலாளி சூட்கேஜ் மறந்துட்டீங்க".

 திவாகரன் வேலுவை மேலும் கீழும் பார்த்தபடி சூட்கேஸை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்குள் சென்றான்.

உள்ளுர் ஏஜென்ட் Buyer யை அறிமுகப்படுத்தினார்.

Glad to meet you Mr Diwagaran  என்றார் அந்த வெளிநாட்டு Buyer

Thank you very much Sir  என்றபடி இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் வியாபாரத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

"Mr. we want XXL  size black and blue color T shirt with must be picture of our President of America."

"Oh..Sure sir…I am bring this cloth material for show you as a sample and Also this is our documents where we doing business with some other good companies in America.. .Please see.."

"Good Diwakaran it is surprising. I am so happy to see this you are having business connection with our Nation..this cloth is very nice…it may be suitable for that T shirt. Ok…well…we need 1,50000 pieces next October…ok? Can you do this?"

"Sure sir…no problem."

என்றபடி அவர்களது பிஸினஸ் பேச்சுவார்த்தைகள் இனிதாக முடிந்தது.'

இந்த சிறிய இடைவெளியில் காரை சுத்தமாக துடைத்து வைத்திருந்தான் வேலு.

முதலாளி வருவதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி|ருந்தான்.

திவாகரன் பேச்சுவார்த்தையை முடித்தபடி மகிழ்ச்சியாக வெளியே வந்தான்…
.
வேலு கார் கதவை திறந்து விட, ஏறி அமர்ந்தான் திவாகரன்.

'பேக்டரிக்கு போப்பா…ஆமா நான் குடும்பத்தைப் பற்றிக்  கேட்டதற்கு ஒண்ணும் பதிலேக் காணோம்?' ஏன்று பழையதை ஞாபகப் படுத்தினர் திவாகரன்

'ஒரு முடிவுக்கு வந்தவனாக உண்மையை சொல்லுவோம்.. பொய்க்கும,; குடிக்கும் ஒரு முற்றுப்  புள்ளி வைப்போம் என்ற முடிவுடன்
முதலாளி சின்ன வயசிலே அம்மா இறந்துட்டாங்க எனக்கு அம்மாங்கற பேர்ல வந்த ஒருத்தியால சரியான சாப்பாடு, படிப்பு. எதுவுமே கிடைக்காம போச்சு. ஏழு வயசிலிருந்தே உழைக்க ஆரம்பிச்சுட்டேன்.கூட்டாளிகளுடன் சேர்ந்து குடிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.

சொல்றதுக்கு இருந்த அம்மாவும்  அப்பாவும் போயிட்டாங்க ஆனால் சொந்தக் காரங்களாப் பார்த்து தூரத்து உறவுக்கார பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சாங்க..அவளை செய்யாத சித்ரவரையெல்லாம் செஞ்சேன். மூணு வருசமா அத்தணையையும் பொறுத்தவ…( சற்று நிறுத்தி;) போன மாசத்துல ஒருநாள் கோவிச்சுக்கிட்டு பையனைக் கூட்டிட்டு சென்னைக்கு போயிட்டா..அப்புறம் அதை கேள்விப்பட்டு நானும் சென்னைக்கு போயி அவளை தேடி தேடி அலைஞ்சேன்…கடைசியில அவளை பார்க்கவே  முடியல…என் பையன் மட்டும்தான் கிடைச்சான்"..என்று தேம்பி தேம்பி அழுதபடி சொல்லி முடித்தான் வேலு.

கார் பேக்டரியை வந்தடைந்தது.

வேலு இறங்கி திவாகருக்காக காரின் பின்பக்க கதவை திறந்துவிட முயலுவதற்குள்,

ஏதோ பதற்றத்தில் இருப்பவனாக திவாகரே கதவை திறந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டு விறு விறு என்று ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.

வேலு தன்னை தவறாக முதலாளி நினைத்து விட்டாரோ என்று செய்வதறியாது நின்றான்.

அடிமேல் அடி என்பது இதுதானோ?

என்னதான் நடக்கும் என்பதை அறிய அடுத்தவாரம் வரை காத்திருங்களேன்.

கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, July 24, 2012

சட்டத்தின் படி(7) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

 சட்டத்தின் படி(7)
சென்ற வாரம்  
அது பொறாமையா ? இல்ல...அவன் பொழப்பு போயிருமேன்னு பயமா ? ஒன்னும் தெரிய  வில்லை.

வேலை வங்கி தந்தானா இல்லையா..?  


“தங்கச்சி தங்கச்சி அய்யோ கடவுளே யாராவது காப்பாத்துங்களேன்”
முத்துவினுடைய கதறலைக்கேட்டு சிறு கூட்டம் கூடி விட்டது.

“அய்யோ பாவம் என்ன கஸ்டமோ… ஏய்யா நீ எல்லாம் ஒரு மனுசனா என்த விச்சனைன்னாலும் வீட்டோடுயிருக்கணும்.  இப்போ நிலைமையைப் பாரு.” என்று ஆளுக்கு ஆள், வேலுவைப்பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

சிறு தூரத்தில் மீனவத்தாய்மார்களும் பெண்களும் தங்களுடைய உறவுகள் எவ்வித ஆபத்துமின்றி கொலைவெறி பிடித்த இலங்கை கப்பற்படையிடமிருந்து உயிர் தப்பிப்பித்து வர வேண்டும் என தத்தம் தமது கடவுள்களை வேண்டிக்கொண்டிருந்தனர்.

இங்கு நடக்கும் களேபரத்தைப்பார்த்து அவர்களும் ஓடி வந்தார்கள்.

ஆர்ப்பரிக்கும் பேரலை மீது படகு ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்படகிலிருந்து இருவர் கடலில் குதித்தனர்.

கடல் அலை இழுத்து சென்ற ராசாத்தியை இருவரும் கரைக்குத் தூக்கி கொண்டு வந்தனர்.

தன் உயிரையும் துச்சமென மதித்து மற்ற உயிரை காப்பாற்றிய அந்த மீனவ சமுதாயத்தை காப்பாற்ற தமிழக மக்களிடமிருந்து எத்தனை வகையான ஆர்பாட்டம,; உண்ணாவிரதம்.?

கட்சி பாகுபாடுயின்றி ஒரே அணியாக சேர்ந்து போராடினால்தான் இதற்கெ;ல்லாம் வழி பிறக்கும். குதிரைக்கு கொம்பு முளைத்தாலும் முளைக்குமே தவிர நமது மத்திய அரசாங்கம் கண்டுக் கொள்ளாது.. மக்கள்  கையில் இருக்கும் வலிமையுள்ள ஒரே ஆயுதம் ஓட்டு மடடும்தான். அந்த ஆயுதத்தினால்தான் இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நினைத்ததை பெற முடியும்.

ராசாத்தியை தரையில் கிடத்தியவுடன் மீனவப் பெண்கள் முதலுதவி செய்து அவளை காப்பாற்றினார்கள்.

“அய்யோ பாவம் கர்ப்பமாயிருக்கு…இந்த புள்ள”.. அதில் ஒரு பெண் பரிதாபப்பட்டாள்.

“ஏய்யா உனக்கு அறிவிருக்கா என்ன நடந்திருந்தாலும் பேசி தீர்ககணும். ஒரு உயிரு இல்லையா..ரெண்டு உயிர். போயிருந்தா என்ன பண்ணுவ?” முத்துவைப் பார்த்து திட்டினார் ஒருவர்.

மற்;றொருவர் பீடிக் குடித்துக்கொண்டே “இவனையெல்லாம் சுட்டுக் கொள்ளணும்.”

“கொல்லுங்கைய்யா கொல்லுங்க…யாருன்னே தெரியாத இவ… கடலுக்குள்ளே விழுந்து சாக போறாளே ன்னு எப்படியாவது இவளை காப்பாற்றணும்ன்னு தங்கச்சி தங்கச்சி  ன்னு கூப்பிட்டு பின்னாலயே ஓடி வந்தேன் பாரு அதுக்காக என்னை கொல்லுங்கய்யா” கண் கலங்க கொன்னான் முத்து.

“என்னது உன் தங்கச்சி இல்லையா..?” என்றபடி எல்லோரும் முத்துவை வியந்து பார்த்தார்கள்.

“ஆமாய்யா… இவளை அந்த ரோட்டுலயே பார்த்தேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே நான் டாஸ்மாக்குல தண்ணியடிச்சிட்டு வந்திட்டு இருந்தேன்.இவளுடைய பையன்னை கார் இடிச்சிருச்சு. ஆனால் 2 பேர்     வந்து பையனை தூக்கிட்டு போனாங்;க..என்ன ஏதுன்னு விசாரிக்கல..கொஞ்ச நேரத்திலே குழந்தையை பற்றி கேட்டு. இவ வந்தா.. நான் பாதி மப்புலே  குழந்தை போயிட்டதுன்னு சென்னேன். நான்  குழந்தை செத்து போயிட்டதா சொன்னதா நினைச்சு இந்த புள்ள மயக்கமாயிட்டா. மயக்கம் தெளிந்த பின் நடந்ததுதான் இந்த சம்பவம்.. காப்பாத்தனும்ன்னு நெனச்சேன். அதான் இந்த புள்ள பின்னாடியே ஓடி வந்தேன்” சொல்லி முடித்தான் முத்து.


சுணடல் விற்கும் சிறுவன் முதல் சுற்றுலா பயணிகள் வரை சிலர் பாராட்டவும் சிலர் திட்டவும் செய்தனர். சில பேர் வேடிக்கை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தனர்.

“இப்போ அநாதையான இவளை என்ன செய்ய போற?” என்றுதான் கேட்டார்களே தவிர ராசாத்திக்கு அடைக்கலம் தரும் மன நிலைமை யாருக்கும் இல்லை.

“ஏய்யா கூட பொறந்தாத்தான் தங்கச்சியா, கூட பொறக்கலைன்னா தங்கச்சி இல்லையா? இந்த மெட்ராசுல கால்வாசி பேரு அநாதையா வந்தவங்க தாய்யா.. ஏன் நான் கூட அநாதையா வந்தவன் தாய்யா. உங்க எல்லோரும் முன்னாடியும் நான் ஒண்ணு சொல்றேன். இவளை நான் என் தங்கச்;சி மாதிரி வைச்சுக்குவேன் பாதுகாப்பேன். இனிமே இவ என் தங்கச்சித்தான் தங்கச்சித்தான.;”

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராசாத்தி வருத்தம் கலந்த சந்தோசத்துடன் முத்துவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

முத்து ராசாத்தியின் கையைப் பிடித்து “ எந்திரிம்மா தங்கச்சி…அண்ணே நான் இருக்கேன் கவலைப் படாதே..உ;ன குழந்தையை எப்படியும் தேடி கண்டு பிடிக்கலாம்.என்று சொல்லி மீனவர்களைப்பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி ராசாத்தியை கூட்டிக்கொண்டு நடந்தான்.

அந்த படகில் உயிருடன் இருந்த ஒரு மீன் ஒரே துள்ளலில் மீண்டும் கடலுக்குள் குதித்தது.

பானு பானு என்று தன் வீட்டுக் கதவை தட்;டினான் முத்து.

கதவை திறந்துக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி ஒருவள் வெளியேவந்தாள். அப்போது  ராசாத்தியைப் பார்த்து பானுவும், பானுவைப்பார்த்து ராசாத்தியும்  திகைத்து நின்றார்கள்.

எதற்காக…..இந்த திகைப்பு?

அடுத்த வாரம் வரை காத்திருக்கலாமே?!!
கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Monday, July 23, 2012

ஜன்னலைத் திற - சிறுகதை

ஜன்னலைத் திற…….. சிறுகதை

கட்டிலில் தூங்கயபடி படுத்திருந்த வாசுகியைச் சுற்றி பல ஞானிகளும், சித்தர்களும், மகான்கள் என்று சொல்லிக் கொள்கிற ஆன்மீக புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. திடீரென்று எழுந்தாள் வாசுகி.

வாஸ்பேசனில் முகம் கழுவிக் கொண்டு மென்மையான டர்க்கி டவலினால் முகத்திலிருந்த ஈரத்ததை துடைத்துக் கொண்டாள்.

வாசுகி ஒரு நடிகையைப் போல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பவள். கிட்டத்தட்ட வயது 25யை தாண்டாது. நல்ல சிவப்பு நிறம். காண்போரைக் கொள்ளைக் கொள்ளும் அழகிய உடலமைப்பு அவளுக்கு.

“அம்மா டீ” என டீ கொண்டு வந்தாள்  வள்ளியம்மா..

வள்ளியம்மா அவள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி. நினைவு தெரிந்து 5 ஆண்டுகளாக வீட்டின் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்ளும் பாசமுள்ள வேலைக்காரி.

வள்ளியம்மா முதலில் பேனைப் போடு…

பேன் ஓடத்துவங்கியது.

பேன் சுத்த சுத்த…வாசுகியின் கடந்த கால நிகழ்வுகள் அத்துணையும் மனதில் மையம் கொண்டு சுத்த தொடங்கின.

“வாசுகி நீ படிச்சவ..கை நிறையா நானும் நீயும் சம்பாதிக்கிறோம் நமக்குன்னு ரெண்டு குழந்தைகள். அவர்கள் தான் நமக்கு முக்கியம்” என்றார் கணவர் சம்பத்.

“அப்போ கடவுள் பக்தி, ஆன்மீகம் இவையெல்லாம் வாழ்க்கைக்கு முக்கியமில்லையா? ஒழுக்கத்தின் பிறப்பிடமே ஆன்மீகம்தான் உங்களுக்குத் தெரியாதா என்று சப்தமாகச் சொன்னாள்” வாசுகி.

“கடவுள் நம்பிக்கை தேவையில்லைன்னு நான் சொல்லல…அதுக்காகவேண்டி நிறைய படிக்கலாம். கட்டாயம் அந்த சாமியாரிடம் தான் போய் ஆன்மீகம் கத்துக்கணும் அப்படீன்னு அவசியமில்லை” என்றான் சம்பத்

“உங்களுக்கு என்ன தெரியும்? அந்த சாமியாருடைய மகிமை என்னான்னு.கண்களில் தெய்வீக ஒளி, முகத்தில் சாந்தம், கம்பீரமான குரலில் அவர் ஆற்றும் அற்புதமான ஆன்மீக உரை. உலகம் மொத்தமும் அவரை தரிசிக்க காத்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என பெருமை பொங்க அந்த  சாமியாரைப் பற்றி  சொன்னாள் வாசுகி.

“தத்துவம் பேசறவனெல்லாம் தத்துவஞானியாக முடியாது. ஒழுக்கத்தைப் பற்றி ஓயாமல் பேசறவனெல்லாம் ஒழுக்க சீலனாக இருக்கவும் முடியாது. ஒழுக்கத்தை   உலகுக்கே சொன்ன திருவள்ளுவர் எந்த மடத்தை வைத்து தன்னுடைய கருத்துக்களை பரப்பினார்? எந்த ஜால்ராக் கூட்டத்தை அவர் வைத்திருந்தார்? ஆனா அவருடைய கருத்துக்களை இந்த உலகம் ஏத்துக்கல?”என்று அமைதியாகச் சொன்னான் சம்பத்.

சற்று உரத்தக் குரலில் “ உங்களுக்கு பொறாமை எத்தனை பேர் அவர் பார்வை தன் பக்கம் திரும்பாதா? அவர் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கி தவம் கிடக்கிறாங்க? ஆனா லாட்டரி சீட்டில் கிடைச்ச அதிர்ஸ்டத்தை போன்று என்னை அவரு சிசியையா ஏத்துகிட்டாரு நான் செய்த பெரும் பாக்கியம்” என்றாள் வாசுகி.

“அப்போ நாங்க வேண்டாம் குடும்பம் வேண்டாம் இல்ல?”

“எனக்கு எல்லாமே சுவாமிஜீ தான்”.

‘இதுதான் உன் முடிவா”

“தீர்க்கமான முடிவு”

“அப்படியானால் நம் குடும்பம்….?”

“முதலில்  சுவாமி பிறகுதான் குடும்பம்.”

மடத்திற்கு செல்ல புறப்பட்டவளை தடுத்துப்பார்த்தான் சம்பத்…ஆனால் கண்டுக்கொள்ளாமல் நடந்தாள் வாசுகி…

“நீ ஒருநாள் திரும்பி வருவே…”

“ஒருகாலுமில்லை மடிந்தாலும் அவர் காலடியில தான்”

இது நடந்தது ஆறு மாதத்திற்கு முன்.


திடீரென்று நினைவுக்கு வந்தவள…தலையை சிலுப்பிக் கொண்டாள்….பசுந்தோல் போத்திய புலியிடம் மாட்டிய மானாக, துடிதுடிக்க வக்ரமனம் கொண்ட வஞ்சகனிடம் எத்தனை முறை எத்தனை முறை என்று தலையில் அடித்து கொண்டாள்.


“வள்ளியம்மா கொஞ்சம் ஜன்னலை திறந்து வையி. ஒரே புளுக்கமா இருக்கு…பேனை போட்டாலும் சூடு குறைய மாட்டீங்கிது..”
சரிம்மா…

தெளிந்த நிலையில் பேப்பரை எடுத்து மளமளவென்று எழுதிய பேப்பரை எடுத்துக் கொண்டு “வள்ளியம்மா நான் கோர்ட் வரைக்கும் போயிட்டு வர்ரேன்”..

“அந்த போலிசாமியாரை சும்மா விடாதீங்கம்மா.. கட்டாயம் அவனுக்கு தண்டனையை வாங்கிக் கொடுத்துருங்க.”


வாசுகியின் நிலையில் இன்னும் எத்தனை பேர் ஆசிரமத்திலும் மடத்திலும்
 …….
ஜன்னல் திறந்து விட்டது அசுத்தக் காற்று வெளியேறி விட்டது….

வாசக பெருமக்களே பூரண ஆயுசு நித்திய கண்டம் அப்படி யென்றால் என்ன……

இது எப்படி யிருக்கு??

எழுத்தாளர்  திரு சுந்தரகனகு

 மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99 528 27 529 - நான் காத்திருப்பேன் .


 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, July 19, 2012

கிரைம் போன்…சிறுகதை

கிரைம் போன்

என்ன சார் கார்ல வராம பைக்குல வர்ரீங்க..?

ஏன் கார்ல வந்தாத்தான் மதிப்பீங்களா? இல்லைன்னா..நான் ஒரு துப்பறியும் நிபுணர்ன்னு ஒத்துக் கொள்ள மாட்டீங்களா,?
என்று நக்கலுடன் கேட்டார் மணவாளன்.

ஐயோ சார் மன்னிச்சிடுங்க…உள்ளே SP  எல்லோரும் உங்களுக்காக காத்திருங்காங்க…போங்க…போங்க சார்…என்று கான்ஸ்டபிள் சல்யுட் அடித்தபடி சொன்னார்.

வாங்க MR .மணவாளன் குட் ஈவினிங் என்று கைக்குலுக்கிய வண்ணம்…. 

“கை தேர்ந்த கொலைக்காரன் போல சார் அவன்…ம்…கைரேகையை….மறைக்க குளோவ்ஸ் போட்டும்….மோப்ப நாய் கிட்ட மாட்டாம இருக்க…மிளகாய் பொடி தூவி விட்டும்; சென்று இருக்கிறான் என்றார் SP 

சார் please doctor report  இருந்தா கொடுங்க…என்றார் மணவாளன்..

மூச்சு திணறல் அதாவது தலையணையில் அழுத்தி கொன்றிருக்கலாம் என்றார் SP 

அவர்களுக்கு ஆஸ்த்துமா போன்ற வியாதியிருந்ததா? இது மணவாளனின் கேள்வி.

ஆமாம் இருந்து இருக்கக் கூடும் என டாக்டர் report  பதில் - இது SP 

ஆஸ்த்துமா இருந்ததற்கு Treatment   எடுத்த டாக்டர் பற்றியும், ஆஸத்துமா சிகிச்சைக்காக கூட்டி வந்த நபர் இவர்களைப் பற்றி விசாரித்தீர்களா?

என்ன சார்..ஒருவார காலமாய் விசாரிக்காம இருப்போமா? இந்தாங்க அந்த Details …என்றார் SP 

வாங்கிப் பார்த்தார் மணவாளன்…சிறிது மவுனத்திற்கு பிறகு…

SP sir …கொலையான அந்த அம்மாவுடைய மகனின் போன் நம்பர் வேணும்…ஏற்பாடு செய்யுங்கள்…


விதவை கோமதி மிகப்பெரிய கோடீஸ்வரி…அவளின் ஒரே மகன்…ஆதி….
ஆதியின் நம்பரை தெரிந்துக் கொண்ட போலீசார் மணவாளனிடம் கொண்டு வந்துக் கொடுத்தார்கள்.




சொல்லு..எதுக்காக கோமதியம்மாவை கொலை செய்தாய்? பணத்துக்காகவா..?

இல்லை…

வேறு எதுக்காக சொல்லு…

சார் மணவாளன் சார்…இவ இப்படி யெல்லாம் கேட்டா சொல்ல மாட்டா…எங்க பக்கம் அவளை அனுப்புங்க…சார்..என்றார் மகளியர் இன்ஸ்பெக்டர் திவ்யா…

ப்ளீஸ்  கொஞ்சம் இருங்க மேடம் ... சொல்லு புனிதா எதற்காக அந்த அம்மாவை கொலை செய்தாய்?

புனிதாவிடமிருந்து எந்த பதிலும்மில்லை. மணவாளன் தொடர்ந்தார்

கோமதியம்மாளின் ஒரே வாரிசு ஆதீயை நீ உயிருக்கு உயிராக காதலித்தாய் …ஆனால் ஆதி உன்னிடம் என் தாய் இருக்கும் வரை நம் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று சொல்லியிருக்கிறான்.

தவறு நடந்துவிட்டது…தயவு செய்து என்னை மன்னித்து விடு ஆஸ்த்துமா வியாதி உள்ள என் தாயை நான் காப்பாற்ற வேண்டும் இப்படி தானே ஆதி சொன்னான்?...

ஆமாம் ஆமாம்…என் வயிற்றில் அவன் குழந்தையை பெற்று வளர்க்க…அணுஅணுவாக செத்துக் கொண்டிருந்தேன்…

குழந்தையை விட அவன் அம்மாவைத் தானே ஆதி மிகவும் நேசிக்கிறான் என்ற ஆதங்கமும் கோபமும் எனக்குள் பொங்கி கொண்டிருந்தது. நானும் ஆதியும் சேர வேண்டுமென்றால் அவன் அம்மா சாக வேண்டும் என்று அதற்காக காத்திருந்தேன்….

நேரம் வந்தது…யாரும் இல்லாத போது அவன் வீட்டிற்கு சென்று…தூங்கிக் கொண்டிருந்த அவன் அம்மாவை பார்த்தேன்…மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் கிடந்த தலைகாணியை முகத்தில் அமிழ்த்திக் கொன்றேன்….

தனது வாக்குமூலத்தை அளித்தாள்….புனிதா…

 எனக்கு தெரியும் சார்….MR மணவாளன் எந்த தடயமும் இல்லாமல் இருந்தாலும் சரியா கண்டுபிடிப்பார்ன்னு…..பக்கத்திலிருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் பேசிக் கொண்டார்கள்.

 வாங்க மிஸ்டர் மணவாளன்…வாழ்த்துக்கள் மற்றும் எங்களது நன்றிகள்…..அது சரி…எப்படி எந்த தடயமும் இல்லாமல் அந்த புனிதாதான் கொலையாளின்னு கண்டுபிடிச்சீங்க…?

ஆதியிடமிருந்து கைப்பற்றிய செல்போனை காட்டினார்….

இதுல போய்…அந்த SMS இன்பாக்ஸ்  …பாருங்க 

“என் தாய் இருக்கும் வரை நம் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்;. தவறு நடந்துவிட்டது…தயவு செய்து என்னை மன்னித்து விடு ஆஸ்த்துமா வியாதி உள்ள என் தாயை நான் காப்பாற்ற வேண்டும்”
Athi
17ஃ07ஃ2012 2.30pm 

சட்டத்தின் படி ....(6)

சென்ற வாரம்
ராசாத்தி மடமடவென்று கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்…
‘தங்கச்சி….. தங்கச்சி’
குரல் வந்த திசையினை திரும்பிப் பார்த்தாள்.
அதற்குள் பெரும் அலை ராசாத்தியை அணைத்தது.
 

வேலுவின் ஹலோ என்ற கேள்விக்கு மறுமுனையிலிருந்து

"ஹலோ யாரு?"

"என்ன  சார் என்னை தெரியல?" என்றான் வேலு,.

"யோவ் இது என்ன வீடியோ வா உன் மூஞ்சியெல்லாம் தெரிவதற்கு? பேரை சொல்லுய்யா?"

"சார் நான் தான் உங்கள் லாரியில திருப்புர்ல இருந்து வந்தேனே?" என்று நிறுத்தினான் வேலு.

"ஒ? புரியிது. ஆமா வந்த காரியம் என்ன ஆச்சு?"

"மனைவி மகன் கிடைத்தார்களா? சரி நீ எங்க இருக்குற? நான் மெட்ராஸ் போர்ட் ல இருக்கிறேன்." என்றார் டிரைவர்.

"சார் நானும் மெட்ராஸ் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து தான் சார் பேசறேன்".

"அப்படியா நான் இன்னும் ௪௫ நிமிசத்துல திருப்பூர் கிளம்பிடுவேன்.  நீ வரதுன்னா வா"

"சார் நானும் என் மகனும் திருப்பூர் தான் வரோம்". என்றான் வேலு.

"அப்படியா அப்போ உன் மனைவி? சரி சரி உடனே கிளம்பி வா அன்னைக்கி உன்னை இறக்கி விட்டேன் இல்லே ...அந்த இடத்துக்கு வா போகும் போது எல்லாம் பேசி கிட்டே போகலாம்".என்றார் டிரைவர்.

நகர பேருந்தை பிடித்து இருவரும் மெட்ராஸ் போர்ட்க்கு சென்றடைந்தார்கள்

"வாய்யா வேலு இது உன் பையனா? சரி லாரியில் ஏறு.. என்றபடி கிளினரை எதிர் பார்த்தபடி அதோ கிளி வந்துட்டான்...(கிளினரோட சுருக்கம் )

"என்னடா கிளி ...கிளி கூண்டோட வர? இந்த ரெண்டு கிளியையும் எங்க வாங்குன?"

"அண்ணே என்னை மன்னிச்சுடுங்க" என்றான் அந்த கிளினர்.

"ஏண்டா...என்னடா பண்ணுன?"

"அண்ணே இரண்டு வருசத்துக்கு முன்னால.."

".என்னடா பிளாஷ் பேக்கா?"

"அது இல்லைண்ணே..."

"இரண்டு வருசத்துக்கு முன்னால என் அத்தை இறந்து போன பின் என் மாமா அவருடைய பொன்னை கூட்டிட்டு மெட்ராஸ் வந்துட்டாரு. இந்த ஹோர்பார் ல தான் அவர பார்த்தேன். காலமெல்லாம் அவ தான் என் உசிருன்னு  நான் நெனச்ச என் நினைப்பு வீண் போகல. மாமாவும் கரிசனையுடன் இங்கயே வேலை வாங்கி தரதா சொல்லிட்டாரு.இனிமேல் நான் கிளினர் வேலைக்கு வர மாட்டேன்.  இந்த கிளி  அவளுக்கு..." என்று ......கிளினர் தொடருவதற்குள்...

"அது யாருடா."..என்று கேட்டார்...டிரைவர்.

"அது தான்னே ...என் அத்தை பொண்ணு ரேவதி. பார்க்க கிளி மாதிரி இருப்பான்னே... அவளுக்கு கிளின்னா ரொம்ப பிடிக்கும்...அதுதாண்ணே வாங்கிட்டு போறேன்". (கருப்பு   முகம்  சிவப்பானது ... வேறென்ன வெக்கம்  தான்)

எது எப்படியோ...நல்ல இருந்தா சரி...

"சரி இந்த உன் பேட்டா...உன் சம்பளத்தை திருப்பூர் ஆபீஸ் ல வந்து வாங்கிக்கோ.. அப்புறம்...ரெண்டு கிளி வச்சுரிக்கயில்ல....ஒரு கிளியை அந்த சின்ன பயன் கிட்ட கொடுடா...பாவம் வச்சு விளையாடட்டும்."

"சரிண்ணே...கொடுத்துட்டா போச்சு"... என்று சொல்லிய படி.....கிளி கூட்டை திறந்தான் கிளினர்.

திறந்தவுடன்...ஒரு கிளி அந்த இண்டு இடுக்கில் புகுந்தபடி...பறந்து விட்டது..

"ஐயோ அண்ணே...ஆசையாய் வாங்கிட்டு வந்த கிளி பறந்து போயிடுச்சே....அய்யய்யோ அண்ணே...இந்த ஒரு கிளியை யாவது என் அத்தை பொண்ணுகிட்ட கொண்டு போய் சேர்கிறேன் ண்ணே..என் சம்பளத்தை நீங்களே வாங்கி வச்சுகோங்க"..என்றபடி...வேகமாக நடந்தான் அந்த கிளினர்.

திகைத்து போன டிரைவர் வேலுவையும், குழந்தையையும் பார்த்தபடி வண்டியை கிளப்பினார்....டிரைவர்.
"நமக்குன்னு வாய்க்கிற கிளினர் யாருமே சரியா அமைய மாடிங்குரானுங்க.....ம்ம்... ரெண்டு நாளா சரியா தூக்கமே இல்ல வேலு...அண்ணல் சரியான நேரத்துக்கு வேற போய் சேரனும். என்று டிரைவர் பேசி முடிப்பதற்குள்  ...

அண்ணே...எனக்கும் driving   தெரியும் , உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் வேணும்னா வண்டியை ஓட்டுறேன்...அண்ணே எனக்கு நீங்க ஒரு  உதவி செய்யணும்...ஒரு  வேலை நீங்க வாங்கி கொடுத்திங்கன்னா ...நான் பொழச்சுக்குவேன் ....."

ம்ம்....சரி இங்க வா...ஒட்டு....

அவன் ஓட்டுவதை பார்த்து நம்பிக்கை வந்தவனாக...சரி சரி நான் போய் பின்னாடி பேனட்டுல படுதுகுறேன்...நீ பார்த்து பத்திரமா ஒட்டு.

வேலுவுடைய அதிர்ஷ்டம்...எந்த செக் போச்டுளையும்...எந்த வித தடையுமில்லை....வண்டி பாட்டுக்கு போய் கொண்டே இருந்தது.

அதிகாலை 5 மணிக்கு லோர்ரி வந்து சேர்ந்தது திருப்புருக்கு. வேலு டிரைவரை எழுப்பினான். டிரைவர் வேலுவை ஆச்சிரியத்துடன் பார்த்தார்.

"பரவால்லையே வேலு....சரி இன்னும் 2 கிலோமீட்டர் இருக்கு அந்த கம்பனி க்கு போக.....சரி நீ இந்த பக்கம் வா...நான் ஓட்டுறேன்..."

வண்டியை ஓட்டும் போது டிரைவருக்கு ஆயிரம் மன குழப்பம்.....
இவனை  வேலைக்கு சேர்த்து விட்டால்...நம்ம வேலைக்கு ஆப்பு  வச்சுருவானோ..? ....அவன் கதையை கேட்டாலும் பாவமா த்தான் இருக்கு..என்ன பண்ணலாம்..? சரி பாப்போம்..."

அது பொறாமையா ? இல்ல...அவன் பொழப்பு போயிருமேன்னு பயமா ? ஒன்னும் தெரிய  வில்லை.

வேலை வங்கி தந்தானா இல்லையா..?




  அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.
  ஆசிரியர் திரு சுந்தரகனகு
 மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529



 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, July 18, 2012

பொது தமிழ் - tnpsc study material தரவிறக்கம்

பொது தமிழ் - tnpsc study material  தரவிறக்கம்

 Tnpsc  தேர்வுக்கான முழு விளக்கங்களுடன் கூடிய பொது தமிழ் பாடத்திற்கான புத்தக சுட்டி 


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, July 17, 2012

பொது தமிழ் -General tamil

 தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு பணி  தேர்வுக்கு தயாராகும்   நண்பர்களே 

உங்களுக்கு என்  வாழ்த்துக்கள் .

இதோ ஒரு குறிப்பு உங்களுக்காக ......

பொது தமிழ் என்ற பாடத்தில் மட்டும் நீங்கள் 90 க்கும்  அதிகமான  பதில்களை நீங்கள் பெற்றீர்கள் என்றால்  உங்கள் வெற்றி உறுதியாகிவிடும்.
இதோ என் பங்குக்கு நானும் உங்களுடன்  இணைந்து பொது  தமிழை படிக்க படிக்க போகிறேன் .   என்ன சரியா? பாடத்திற்கு போலாமா ?


சொற்களும் எழுத்துக்களும்
தமிழ்மொழிப் பதங்கள்:
          தமிழென்ற செம்மொழியின் பதங்களை, சொற்களை, இங்கு தரப்பட்டிருக்கின்றன. தவறேதுமிருப்பின்  comments இல்  சுட்டுங்கள். திருத்திக் கொள்ளப்படும்.


  • நிலைமொழியும் வருமொழியும்
              இரு சொற்களின் புணர்ச்சியில், முதலிலுள்ள சொல் நிலைமொழியெனவும், இரண்டாவதாக வந்து சேரும் சொல் வருமொழியெனவும் அழைக்கப்படும்: -



    • (உ-ம்)
      படிப்பது + யாது
      இதில் படிப்பது = நிலைமொழி, யாது = வருமொழி.

  • பதமும், பகுபதமும், பகாப் பதமும்:-

              ஒரு சொல் அல்லது வார்த்தையை பதமென்று சொல்கிறோம். அதில் பல்வேறு உறுப்புக்களாக பிரிக்கக் கூடிய சொல் பகுபதம். அப்படி பிரிக்க முடியாத சொல் பகாப் பதம்.: -



    • (உ-ம்)
      பகுபதம் - கண்டான் = காண் + ட் + ஆன்,
      பகாப்பதம் - கல், மண்.

  • பகுதி, விகுதி என்பது என்ன?:-

              ஒரு சொல்லில் முதலில் இருக்கும் உறுப்பு பகுதி எனப்படுகிறது. இதனை முதல்நிலை என்றும் சொல்லலாம். அதே சொல்லின் இறுதியுறுப்பு விகுதியாகும். இதனை இறுதிநிலை என்றும் சொல்லலாம்.: -



    • (உ-ம்)
      "கண்டான்" இதனை காண் + ட் + ஆன் எனப் பிரித்தால்
      காண் - முதல்நிலை, ஆன் - இறுதிநிலை.

  • பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்:-

              உலகிலுள்ள பொருட்களின் பெயர்களை, செயல்களின் பெயர்களைக் கூறுவன எல்லாம் பெயர்ச்சொற்கள். அதுபோலவே பெயர்கள் செய்யும் செயல்களத்தனையும் வினைச் சொற்களாம். வினையைக் குறிக்கும் பெயர்ச்சொல் வினைப்பெயர். குணத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் பண்புப் பெயர்.



    • பெயர்ச் சொல்:-   (உ-ம்)மரம், கடல்.
    • வினைச் சொல்:-   (உ-ம்)ஓடினான், ஆடினான்.
    • வினைப் பெயர்:-   (உ-ம்)ஓடுதல், ஆடுதல்.
      பண்புப் பெயர்:-   (உ-ம்)கருமை, சதுரம்

  • எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்:-

               ஒரு செயலை செய்யும் பொருள் எழுவாயென்றும், செயலைச் சொல்லும் வினைமுற்று பயனிலையென்றும், எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளே செயப்படுபொருள் என்றும் வழங்கப்படும். "கண்ணன் புத்தகத்தைப் படித்தான்", இச்சொற்டொரரில்;



    • கண்ணன் - எழுவாய்
    • படித்தான் - பயனிலை
    • புத்தகத்தை -செயப்படுபொருள்


  • வேற்றுமை, உவமை, உம்மை, தொகை:-

               பெயர்ச்சொற்களில் பொருள் வேறுபாடு செய்வனவே வேற்றுமை எனப்படும். மரத்தை, மரத்தோடு என்று வழங்கும் போது, மரம் என்னும் பெயர்ச் சொல் பொருளில் பல மாறுதல்கள் அடைகிறது. அதனைச் செய்கிற ஐ, ஆல் என்பவையே வேற்றுமையாகும். இவை வேற்றுமை உருபெனவும் சொல்வர். ஒரு பொருளைப் போலவே இருக்கும் மற்றொன்றிற்கு உவமை என்கிறோம். அதுபோலவே ஒன்றிற்கு மேல் பல சொற்களைச் சேர்க்கும் போது இடையில் "உம்" சேர்க்கிறோம். அதுவே உம்மை என்றழைக்கப்படுகிறது. இரு சொற்கள் சேர்ந்து வருவது தொகையெனப்படும்.



    • வேற்றுமை - (உ-ம்) கண்ணால், கண்ணோடு
    • உவமை - (உ-ம்) மதிமுகம் (மதி போன்ற முகம்)
    • உம்மை - (உ-ம்) தமிழும், அழகும், எழிலும்
    • தொகை - (உ-ம்) செந்தாமரை (செம்மை + தாமரை)

  • அசை, சீர், அடி, எதுகை, மோனை:-

               ஒரேழுத்து அல்லது ஈரெழுத்து கொண்ட சொல்லின் தொகுதிக்கு பெயர் அசை. செய்யுளில் வரும் ஒரு சொல்லே சீரெனப்படுவது. அதுபோலவே செய்யுளில் உள்ள ஒவ்வொரு வரியும் அடியெனப்படும். அடிதோறும் முதல் சொல்லின் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது எதுகையெனவும், சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது மோனையெனவும் அழைக்கப்படும்.



    • அசை - (உ-ம்)"கடவுள்" - இதில் கட , வுள் .
    • சீர் - (உ-ம்)
      குறளில் - அகர முதற்சீர், முதல இரண்டாம் சீர்
    • அடி - (உ-ம்)
      பொன்னார் மேனியனே புலித்தோலையரைக் கசைத்து -
      இது முதலடி
      மின்னார் செஞ்சடைமேற் மிளிர்க்கொன்றை யணிந்தவனே! - இது இரண்டாமடி.
    • எதுகை- (உ-ம்)
      அழகு, பழகு - இவ்விரு சொற்களில் இரண்டாம் எழுத்து ழகரம் ஒன்றி வருகிறது. இதுவே எதுகை.
    • மோனை - (உ-ம்)
      அழகு, அன்பு - இவ்விரு சொற்களில் முதலெழுத்து அகரம் ஒன்றி வருகிறது. இதுவே மோனை.

    • மீண்டும் நாளை சிந்திப்போம் .

  • நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    ஆங்கிலம் கற்றுக் கொள்ள அருமையான வழிகாட்டி - தரவிறக்கம்

     ஆங்கிலம் கற்றுக் கொள்ள அருமையான வழிகாட்டி - தரவிறக்கம்

    இதோ லிங்க் 

    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    Wednesday, July 11, 2012

    வைரம் - சிறுகதை


    சுழல் விளக்கு காரில் வரும் அதிகாரியின் மகன் வினோதனின் அன்றாட அட்டவணை.

    காலை 5. 30 லிருந்து 6.30 கணக்கு டியுசன். பீஸ். 1500.

    6.45 லிருந்து 7.45 ஆங்கிலம் பீஸ் 1000

    (28 எழுத்துக்கள் கொண்டு…இன்றைக்கு உலகத்தையே ஆட்டி வைக்கும் மாயவாதியான மொழி)

    எல்லாமே பைக் கார்தான் நடை பயணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    பள்ளியிலிருந்து திரும்பிய பின் மாலையில்  ஹார்லிக்ஸ், சத்தான ஸ்நேக்ஸ், கொறித்தப்படி கம்பியூட்டரில் 6 மணிவரை.

    சவரில் புதிய வகை சோப் மணக்க 6.25 வரை குளியல்,

    6.30முதல் 7.30 சோசியல் பீஸ்

    7.03 வழ 8.00 மணிவரை தாய் மொழி தமிழ் பீஸ்…250.

    என்ன செய்ய? சன் டாட் மம் என்று பாலூட்டி வளர்த்தாயிற்று வேறு வழியில்லை.பணம் போட்டு படிக்க வைத்துத்தானே ஆக வேண்டும்.

    மேட்டுக்குடி வம்சம். கூந்தல்  உள்ளவள் அள்ளி முடிக்கிறாள்.

    வீட்டில் 9.45 வரை கம்ப்யூட்டர் (தனியறையில்) பார்த்தபடி பலவகை பதார்த்தம்;. முடிந்தால் ஹோம் வொர்க்.

    ஹெட்போனை காதில் மாட்டியபடி பாட்டு மற்றும் நண்பர்களுடன் அரட்டை. பிறகு ஏசி ரூமில் தூக்கம்.


    என்னம்மா கௌரி பாட்டிக்கு எப்படி இருக்குது?

    என்று கேட்டாள் டீச்சர் அருள்மொழி.

    இருமியபடி “டீச்சரம்மா நான்  நல்லாதான் இருக்கிறேன் என்ன இவப் படிப்புத்தான் நின்னு போச்சு. அதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. அந்த பைய அதான் இவ அப்பா குடும்ப சண்டையிலே இவ ஆத்தாக் காரிய நெருப்ப வைச்சுட்டு செத்துட்டான்..பாழாய் போனவன்…உடம்பு சுகத்துக்காக வேறு ஒரு சிறுக்கியைக் கட்டிக்கிட்டு இந்த மூணு புள்ளைங்களையும் ஆண்டவன் என்கிட்ட தள்ளிட்டான். இதுகளை எப்படித்தான் கரை சேத்த போறேனோ தெரியல. இந்த சின்ன வயசுலே படிப்பை நிறுத்திட்டு டீ கடையிலே வேலை.. அப்புறமா பூ கட்டுறதுன்னு காசுக்காக கஸ்டப்படறா” என்று சொல்லியபடி அழுதாள் பாட்டி.

     “கௌரி நீ நல்லபடிக்கற பொண்ணுன்னு இந்தப் பள்ளியில் உள்ள எல்லோருக்கும் தெரியும். உன் நிலமை எங்களுக்குத் தெரியும். எங்களால் முடிந்தளவு உதவி செய்றோம் ஆயிரம் ஆயிரமாக ஏன் லட்ச லட்சமாக பணம் பார்க்கும் தனியார் பள்ளியின் மத்தியில் அரசு பள்ளியிலும் நன்றாக பாடம் சொல்லித்தரும் நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கவலைப்படாதீங்க பாட்டி மீண்டும் உங்கள் பேத்தியை கட்டாயம் பள்ளியில் சேர்த்து விடுகிறேன் கவலைப்படாதீங்க. என்றார் டீச்சர்.

    இனி பூ சுற்றுவது வேறு எடுபிடி வேலை செய்து தம்பி தங்கையை படிக்க வைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்த கௌரியின் ஆனந்ததிற்கு அளவே இல்லை.

    கண்ணீர் மல்க நின்று டீச்சர் அருண்மொழியை கையெடுத்து வணங்கினாள்.பேச வார்த்தைகள் வரவில்லை.

    தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தாள் சிறிது நேரத்தில் வந்த கரண்ட் போயி விட்டது ஓடினாள் கௌரி. நம்ம தமிழ்நாட்டுல மட்டும் என்னவாம்?

    “அண்ணே அண்ணே”

    “என்னம்மா இன்னுமா நீ தூங்க போகலை? பாலாய் போன கரண்ட் போயிடுச்சா..இந்தாம்மா” என்று பேட்டரி லைட் கொடுத்தார் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பரமசிவம்.  பேட்டரி லைட் வெளிச்சத்தில் படிக்க உட்கார்ந்த பொழுது…

    இந்த சிறுக்கி பேசாம ப+ சுத்தி..வியாபாரத்த பாக்க வேண்டியத விட்டுட்டு, படிச்சு கிழிச்சு என்ன கலெக்ட்ராவா ஆகப் போறா? உடுக்க துணியில்ல..இருக்க வழியில்ல அறை வயித்து கஞ்சி காரிக்கு எதுக்கு படிப்பு கிடிப்பு? - இது பரமசிவத்தின் அம்மா பார்வதி…

    விசம் நிறைந்த வார்த்தைகளை புன்னகையுடன் அதையும் ஏற்றுக் கொண்டு படிக்கத்தொடங்கினாள்.

    இது தினமும் நடக்கும் சம்பாசனைதான்.

    மதிய உணவில் சிலர் விளையாட்டு பேச்சு என ஜாலியாக இருந்தனர் காலியாக இருந்த வகுப்பில் கௌரி மட்டும் வீட்டு பாடத்தை செய்து கொண்டிருந்தாள்.

    இரவு 10 மணி.

    ஆள் நடமாட்டம் அடங்கிவிட்டது.. நாய் சப்தத்தை தவிர.

    ஓயாத மழை.

    தம்பி தங்கை மீன்வண்டியின் நனையாதபடி படுக்க வைத்துவிட்டு பாட்டியை ஒரு ஓரமாக படுக்கச் சொல்லிவிட்டு ஒரு ஒரத்தில் ஒட்டி உட்காhர்ந்துபடி லைட்கம்பத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மழை ஓய்ந்து முழுவதுமாக நின்றது.

    தெருவிளக்கு எரிய ஆரம்பித்தது. கௌரியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.

    மடமடவென பையிலுள்ள புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இரவு 11 மணியாகும் அதற்கு மேல்தான் படிக்க முடியும் லைட் கம்பத்தின் கீழ் அது நில நேரம் எரியாமல் படிக்க வா பார்க்கிறாய் என்று விளையாட்டு கா ட்டும்.

    நம் முன்னாள் ஜனாதிபதி மண்ணென்னய் இல்லாத நிலையில் தெருவிளக்கில் படித்தவர்தான் என்பது இன்னொரு செய்தியும் கூட.
    அன்றைய தினம் ரிசல்ட் வெளியாகி யிருந்தது.

    ரிசல்ட்  பார்க்க பிரவுசிங் சென்டர் கூட்டம் 20 ரூபாய் 15 ரூபாய்  என்ற நிலைமைகேற்ப வசூல்.

    என்ன செய்வது? கையில் காசில்லை பாட்டியிடமுமில்லை என்று நினைத்து கொண்டிருந்தாள் கௌரி.

    “வினோ அப்பா பேசறேண்டா இவ்வளவு பண்ணி அட்லிஸ்ட் ஸ்கூல் 3 வது ரேங்க் கூட வரலியே?”

    “அட விடுங்க பையன் பாஸ் பண்ணிட்டான்ல அது போதும்”…என்றாள் வினோதனின் தாய்.

    கௌரி என்று தோளை தொட்ட கூப்பிட்டவரை திரும்பி பார்த்தாள்.

    வணக்கம் டீச்சர்

    இன்னும் ரிசல்ட் பார்க்கலையா? நீ கட்டாயம் பாஸ் பண்ணீருப்ப .வா மார்க் பார்க்கலாம் 



    “டீச்சர் அது வந்து”… என்ற கௌரியை பார்த்து “என்ன காசில்லையா?

    வாம்மா நான் பார்த்துக்கிறேன் என்றபடி அழைத்துச்சென்று ரிசல்ட் பார்த் த மறு நிமிடம் “கௌரி நீதான் ஸ்கூல் பஸ்ட்” கௌரி கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார் டீச்சர்.

    அப்போதுதான் வைரமாக தெரிந்தாள் கௌரி…..அந்த பார்வதிக்கு…


    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    Monday, July 9, 2012

    சட்டத்தின் படி (5) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

    சென்ற வாரம்
    ஒரு ரூபாய் காயின் பாக்சில்  தான் வைத்திருந்த கார்டிலுள்ள நம்பருக்கு போன் செய்தான்;;;;;;;;;;;;;;;;;.
    மறுமுனையில்
    “Hello”
    யார்  சொன்னது அந்த  Hello……


     மேட்டுக்குடி ஆண்களில் சில பேர் காம வெறி பிடித்து ஏழை பெண்களை நாசமாக்குவதை தடுக்கவே முடியாதா?

    கார் கண்ணாடிகளை உயர்த்தி, பெண்களை கடத்தி வன்புணர்வு கொள்ளும் மிருகங்களை என்னதான் செய்வது?

    “அய்யா நான்; மாசமா இருக்கிறேன் என்னை…………விட்டுடுங்க….  கதறினாள்  துடித்தாள் .

    கொடுமையிலும் கொடுமையிலும் இக்கொடுமையினை நடத்திவிட்டான் அந்த காமுகன். என்பதை விட தெருநாய்.

    காரிலிருந்து ராசாத்தியை இறக்கிவிட்டு சில 500 ரூபாய் நோட்டுகளை ஜாக்கெட்டுக்குள் திணித்து விட்டு சென்றான். பண்ணின பாவத்துக்கு பரிகாரமாக.

    தன் நிலையுணர்ந்த ராசாத்தி திடிரென்று பித்து பிடித்தவளாக மகனைத் தேடி ஓடினாள்.

    அடுத்தடுத்து வந்த சிலைகளைத் தாண்டி ஓடினாள். 

    பெருமூச்சு வாங்க நின்றாள் பக்கத்தில் சிலம்புடன் கண்ணகி சிலை. மதுரையை எரித்தவள்.

    கண்கலங்க அழுவதற்குக் கூட திராணியில்லாமல் வாயில் உதடுகள் மட்டும் ஏதோ கண்ணகியைப் பார்த்து முணுமுணுத்தது.

    கண்ணகியிடம் இந்த அவலத்தை சொல்லி சென்னையை எரிக்கவா முடியும்?

    எங்கு மகனை விட்டுச் சென்றாளோ அந்த இடத்தில் வருவோரிடமும், போவோரிடமும் எல்லாம் மகனை பற்றி விசாரித்தாள்.

    ராசாத்தியின் கோலத்தைப்பார்த்து சிலரின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.

    “யம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே கார்லே அடிப்பட்டது உம் மவனா? அவன தூக்கிட்டு போயிட்டாங்களே? என்ன மனுசி நீ? கொழந்தை புள்ளையை அநாதையா விட்டுட்டு நீ எங்கே போனே?”

    ஐயோ காருல அடி பட்டுடானா? உலகமே இருண்டது போல தலையில் இடிவிழுந்தது போல் மயங்கி விழுந்தாள்.

    செய்தி சொன்னவன் திடுக்கிட்டு செய்வதறியாமல் நின்றாள்.

    “யோவ்…என்னைய்யா பொம்பளை மயங்கி கிடக்கிறா…! நீ மசமசன்னு நின்னுட்டு இருக்கிறே.? தண்ணீரை முகத்தில் தெளித்து குடிக்கவும் கொடுத்தனர்.

    மயக்கம் தெளிந்த ராசாத்தி தன்னை சுற்றி நின்றிருந்த சிறு கூட்டத்தைப் பற்றி கவலைப்படாமல், என்ன ஏது என்றுகூட கேட்காமல் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் கடலை நோக்கி சென்றாள்.

    கட்டிய கணவன, பெற்ற மகன், கட்டிக்காத்த கற்பு, இத்தனையும் போய்விட்ட பின்பு இனியும் வாழ வேண்டுமா?.

    ஆர்ப்பரிக்கிற அலையின் மீது கால் பட்டதும், அலையின் வேகம் ஒவ்வொரு அடியாக உயர்ந்தது.

    ராசாத்தி மடமடவென்று கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

    அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்…


    ‘தங்கச்சி….. தங்கச்சி’

    குரல் வந்த திசையினை திரும்பிப் பார்த்தாள்.

    அதற்குள் பெரும் அலை ராசாத்தியை அணைத்தது.

    ராசாத்திக்கு என்ன ஆனது? அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.


    கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

     மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
     9952827529



    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    Friday, July 6, 2012

    TNPSC STUDY MATERIALS - FREE DOWNLOAD

    TNPSC தேர்வுக்கான பாடவாரியான முக்கிய குறிப்புகள்..

    TNPSC  STUDY MATERIALS 

    ஏழாம் வகுப்பு அறிவியல் 

    எட்டாம்  வகுப்பு அறிவியல் 

    குடிமையியல் 

    அறிவியல் அறிஞ்சர்கள் (கண்டுபிடிப்பு)

    ஆறாம்  வகுப்பு அறிவியல் 

    ஜூன் 2012 வரை நடப்பு செய்திகள் 

    கணிதம் 

    தமிழ் 

    பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்  

    தமிழ் புத்தகம் எழுதியவர்கள் 

    விலங்கியல் 

    GK1  GK2 GK3 GK4 GK5 GK6 GK7 

    GK  சிறிய தொகுப்பு 


    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    Thursday, July 5, 2012

    TNPSC தேர்வுக்கான current affairs PDF வடிவில் ...

    TNPSC  தேர்வுக்கான current affairs PDF வடிவில் ...


     current affairs 


    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    Wednesday, July 4, 2012

    கவிதை

    குற்றம் பார்க்கின் சுற்றம்….?

    சுய ஆதாயத்திற்காக
    பகைமையை உருவாக்கி 
    உறவைத் துண்டிக்கும்
    கத்திரிக்கோலாய் இருக்காதே
    உறவுகளை சேர்க்கும்
    ஊசியாயிரு
    ஊசியே உன் தலையில் ஓட்டை என்ற
    ஜல்லடைக்கு உடம்பெல்லாம் ஓட்டை
    பிறர் குற்றம் காணும் முன்
    தன் குற்றம் காண்
    உதவி என்று வந்தவனுக்க
    முடிந்தால் உதவு இல்லையேல் ஒதுங்கு
    குறைக் கூறி குற்றவாளியாக்காதே
    குற்றமில்லா மனிதன் இவ்வுலகில்
    யாருமில்லை

    ஆறு மனமே ஆறு…

    சிறுவன் கையில் காகித ஓடம்
    அதைப்பார்த்து சொட்டு சொட்டாய் கண்ணீர் வடித்தால் காவேரி
    அதோ …. என்று மணல் பள்ளத்தாக்கை காட்டியபடி.

    இக்கரைக்கு அக்கரையா பச்சை?

    வாழ்நாள் உன்னோடு இல்லையேல்
    வாழ்வேது எனக்கு
    என்ற என் இனியவளே
    துபாயிலிருந்து பெரும் தொகையுடன் வந்தவனை
    கண்டவுடன் செல்ல காசாக
    எனை தூக்கியெறிந்தவளே
    உனக்கு தெரியுமா
    துபாய் போலிஸ் அவனை
    தேடி வந்திருப்பது?.

    வேலை வாய்ப்பு
    வேண்டாம் வரதட்சனை
    வேண்டவே வேண்டாம்
    சமைத்து போட
    துவைத்து போட
    சகல வேலைகளையும் செய்யத்தயார்
    நானொரு வேலையில்லா பட்டதாரி.

      திரு சுந்தரகனகு

     மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
     9952827529

    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    கவசம் - சிறுகதை

    தமிழ் கிராமத்தைச் சேர்ந்தவன்

    நுனிநாக்கு ஆங்கிலமில்லை என்றாலும் படிக்க, சொல்வதை புரிந்துக் கொள்ள, தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பிழையின்றி ஆங்கிலம் பேசுவான்.
    விடுதியில் தங்தி படித்கும் மாணவர். ஆடம்பரத்தை விரும்பாதவன். காரணம் வசதிக்குறைவு.

    கௌதம் ஒரு தொழிலதிபரின் வாரிசு. கையிலும் பையிலும் பணமே காசோ இருக்காது.எல்லாமே கிரடிட் கார்டு தான்.
    இவனைச் சுற்றி (தூங்கும் நேரம் தவிர) எப்போதும் ஒரு கூட்டம் இருந்துக் கொண்டேதான் இருக்கும்.
    எப்போதும் ஜால்ரா போட்டுக் கொண்டு, தங்கள் தேவைகளை  முடித்துக் கொள்வார்கள்.

    அகிலன் தேவைக்கு மேலும் கொஞ்சம் பணம் கையில் எப்;பொழுதுமேயிருக்கும்   கல்லூரி மாணவர்களுக்குள்ளே கிண்டல் கேலி நக்கல் நையாண்டி அத்தனை குணாதிசியங்களும் அந்த மூணு பேருக்கும் உண்டு.

    “ஏண்டா கௌதம் தமிழ் எங்கே?”

    “எங்கே லைப்ரரியில தான்… செல்லை கொடு” என்றான் அகிலன்

    “டேய் அவன் கோயிலுக்கு போனானே”

    “என்னடா புது பைக்கெல்லாம்…. என்கிட்ட நீ சொல்லவே இல்லை?”

    புதிய மாடல்; 500CC  புல்லட்டை வாஞ்சையோடு தடவி பார்த்து “என்னடா கௌதம் அப்ப இன்னிக்கு எந்த ஸ்டார் ஓட்டலில்…” என்று கேட்பதற்குள் தமிழ் வந்தான்

    “டேய் தமிழ் மாப்ளே.புது பைக் வாங்கி இருக்காண்டா” என்றான் அகிலன்

    “நான் வாங்கலைடா என்னுடைய பெர்த் டேக்கு அப்பா வாங்கி கொடுத்தார்” என்றான் கௌதம்

    ‘சரி தமிழ் ஏறுடா.. இன்னைக்கு பார்ட்டி தா… நாங்க நான்வெச் அதான் மதுவும் மாமிசமும்” என்று அவசரப்படுத்தினான் அகிலன்.

    “மூன்று பேரும் ஒரே பைக்கிலா?”

    “வேண்டாண்டா தப்பாயிரும்..”

    “ஏண்டா என்ன போலிஸ் புடிச்சுடுமேன்னு பயமா?” என்றான் கௌதம்

    “தெரியும் ..பெரிய இடம் நமக்கு எதற்கு வம்பு என விட்டுடுவாங்க. இருந்தாலும் நான் வரலை .  எனது வாழ்த்துக்கள். அதோ அந்த முருக பெருமாள் போயிலுக்கு பொடி நடையாhய் நடந்து ஒரு அர்ச்சனை செய்துவிட்டு அப்புறம் எங்கே வேணுமின்னாலும் போங்க” என்றான் தமிழ்.

    “டேய்..பஞ்சாங்கம்…ஸடார் ஓட்டலிலும் கோயிலிருக்கு நாங்க அங்க பாத்துக்கறோம். இவ உருப்பட மாட்டான்டா… டேய் அகில் ஒரு ஆயிரமிருந்தா கொடு” எனறான் கௌதம்.

    “பின் பாக்கட்டிலிருந்து பர்சை எடுத்து 700 ரூபாய் தாண்டா இருக்கு”. என்றான் அகிலன்.

    அதை வாங்கி தமிழிடம் கொடுத்தான் கௌதம்.

    “வேண்டாண்டா” தமிழ் மறுத்தும் அவனுடைய பாக்கொட்டில் திணித்தான்.

    டேய் ஹெல்மெட் எங்கடா?  என்று கேட்டான் தமிழ்

    பின்னாலே தொங்கறது தெரியலையா ? என்றான் கௌதம்.

    தலையிலே போடுடா என்றான் தமிழ்.

    ஆனால் இருவரும் தமிழின் பேச்சை காதில் வாங்கவில்லை 

    அகிலன் காதில் ஒயரை சொருகி… “என்ன பாட்டுடா?”

    “சலிக்காத நம்ம தனுஸ் பாட்டுத்தான் மாப்பிளே”

    “புதுபைக்ககை கௌப்புடா” என்றான் அகிலன்.

    பைக் 40, 50, 60 ஐ தாண்டி 100 யையும் தாண்டி போய்கொண்டிருந்தது.
    கௌதம் செல் அலற கையிலெடுத்து ஹலோ என்பதற்குள் ஸ்பீடு பிரேக்கில் மோதி இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.



    பெரிய அதிகாரிகள் பல கம்பெனி முதலாளிகள் அனைவரும் கௌதம் தந்தை சக்ரவர்த்திற்கு ஆறுதல் சொன்னார்கள்.

    ஒரே வாரிசு கோடி கணக்காண சொத்து இனி இனி இனி…. என பூமாலைக்கு நடுவில் முகம் மட்டுமே தெரிகிற கௌதமை பார்த்துத் தேம்பி தேம்பி யழுதார்  அவர் அப்பா.

    “டேய் பாவி கேட்டீங்களாடா ஹெல்மெட் போடுங்கடா பார்த்து போங்கடான்னு சொன்னேனே…கேட்டீங்களாடா… இனி; எனக்கு யாருடா உங்களைப் போல நண்பர்கள் கிடைப்பார்கள்… என கத்தி அழுதான் தமிழ்.

    மயங்கி விழுந்தவனை; தண்ணீர் தெளித்து சகச நிலமைக்கு கொண்டுவந்த பின்னரும் கண்ணீர் நின்றபாடில்லை.

    ICU  விலிருந்து வெளியே வந்த டாக்டர் பதைபதைப்பு துக்கம் தாளாமல் நின்றிருந்த அகிலின் தந்தையைப் பார்த்து “உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை ஆனால”; என்று டாக்டர்  நிறுத்த

    “ஐயா எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை பையனை காப்பாத்துங்க” என்று கதறினாள் அகிலன் தாய்.
    செய்வதறியாது துக்கத்தினனை உள்ளடக்கிய அகிலன் தந்தை “சொல்லுங்க டாக்டா”; என்றார்.

    CNS  அதாவது மத்திய நரம்பு மண்டலத்தை துண்டித்து விட்டதால் உங்கள் மகன் சுய நினைவை இழந்து விட்டான் . இனி; உயிருடன் இருப்பான் ஆனால் நினைவு  திரும்புவதற்கு சாத்தியமில்லை போய் பாருங்க என்றார் டாக்டர்

    துக்கம் கலந்த செய்தியினை தாங்க முடியாத தாயும் தந்தையும் கதறியழுதனர்.

    அகிலனை நெஞசோடு சாய்த்து பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுப்பதை போன்று அழுது அழுது வீங்கிய கணகளுடன் ஸ்பூனில்      ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தான் தமிழ் .

    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவுடு நொண்டியில்லாமல் பிறப்பது அதனினும் அரிது.

    சாலை விதிகளை மதிக்காமல், தலைக்கவசம் அணியாமல் செல்லில் பாட்டு பேச்சு என்றும், மது அருந்தி ஓட்டுவதும், கவனமின்மையும், அதிவேகமும்
    இவையனைத்தும் கால தேவனின் உறவுக்காரர்கள். நம்மை அழைத்துச்செல்ல கண்டிப்பாக வந்துவிடுவார்கள்.

    தாய்  தந்தை உடன்பிறப்பு உறவு இணைப்பிரியா நண்பர்களையும் இழப்பது மட்டுமல்லாமல் இயற்கையான மரணத்தை செயற்கையாக மாற்ற வேண்டுமா?

    கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

     மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
     9952827529


     
    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    சட்டத்தின் படி ....(4)

    சென்ற வாரம்
    அந்த பாவி சாதாரணமாக சொன்னான்…
    “உன் பையன் எங்கேயும் போக மாட்டான்…ஒரு பத்தே நிமிசம்…அதோ அங்கே…”
    ஒரு இடத்தை காட்டியபடி காரை ஓட்டினான்.
    குழந்தை அம்மா அம்மா என்று தடுமாறியபடி ஒடி வருவது மட்டும், ராசாத்திக்கு தெரிந்தது

     
    காலை மாலை இருவேலையிலும் அவசரத்தின்மேல் அவசரம் இதற்கு விடையே இல்லையா நகரத்தில்?
    அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், உழைக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பெண்கள் உட்பட கார், பைக், ஸ்கூட்டர், ஸ்கூட்டியில் பயணிக்கும் போது சிக்னல் விழவதற்குள் போய்விட வேண்டும்.
     அப்படி என்ன அவசரமோ?

    என்ன காரணமாக இருக்கும்?
    மனைவி சொல்லை மந்திரமாக கொண்ட கணவன் ;

    பிஞ்சுகளைக் காப்பகத்திலிருந்து அழைத்து செல்லும் தாய்மார்கள்,

    இந்த ரயிலை விட்டால் பிளாட் பாரம்தான் கதி என கதிகலங்கும் வேலைமுடித்துச்செல்லும் சம்பளதாரர்கள்.

    மாலை உங்களுக்காக ரெடியாயிருப்பேன் சாக்கு போக்கு சொல்லக்கூடாது என்ற புதுமனைவியின் கடட்டளை. இது  கடுகளவு தவறினாலும் நிலைமை மோசமாகிவிடும்.

    மூன்று மாதம் தொடர் முயற்சி விடாமுயற்சியுடன் கடை பஸ்ஸடாப், தண்ணீர்பைப்  பால்பூத் , கல்லூரி என விடாது சுற்றி, வெற்றியடைந்து காதலித்த காதலி, இன்னும் கால் மணி நேரம் தான் காத்திருப்பாள் அதற்குள் போய்விட வேண்டும் இல்லையேல் பட்ட கஸ்டம் பாலாகிவிடும். என துடிக்கும் இளைஞன்.

    அம்மாவை ஆஸ்பிட்டல் கூட்டி போக வேண்டும்... டாக்டர் அடுத்த கிளினிக் போவதற்குள் போயாக வேண்டும் என்ற மகனின் பாச பரிதவிப்பு.

    மாப்பிள்ளை லேட் பண்ணாதே உனக்காக காத்திருக்கோம்! நீ வந்த பின்தான் ஓப்பன் பண்ணனும் !!! மது பிரியர்களின் அன்புக்கட்டளை.

    அன்றைக்கு கிடைத்த கூலியில் வீட்டு தேவையானதையும், குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கும் பொறுப்புள்ள குடும்பத்தலைவன்.

    முதலில் டாஸ்மாக்கு, அப்புறம் கடவுள் புண்யத்தில் மிச்சம் மீதியிருந்தால் வீட்டுக்கு என ஒரு பாலிசியே வைத்திருக்கும் சைக்கிலில் சவாரி செய்யும் தொழிலாளி

    வீடு போய் சேருவதற்குள் சீரியல் முடிந்து விடுமா? மனதில் கேள்விக்குறியுடன் பரபரப்போடு பயணத்தை எதிர்கொள்ளும் சில தாய்மார்கள்.

    இப்படி பலரின்; அவசரம் ஆதங்கம் இந்த நகரத்தில்.
    அப்பப்பா எத்தனை விதமான மனிதர்கள் இந்த சென்னையில்….

     
              ராசாத்தியின் மகன் குழந்தை அரவிந்த் “அம்மா அம்மா..” என்றபடி ரோட்டை கடக்க முயல, திடீரென வந்த கார் மோதியது. அம்மா என்ற கத்தலுடன் கீழே விழுந்தான் அரவிந்த்.

    சட்டென நின்றது கார்.

    “பையன் மேலதான் தப்பு,”

    “ஏய்… மெதுவா வந்தாதான் என்ன? கார் போனா வேற கார் வாங்கிக்கலாம் உயிர் போனா வருமா?”

    “போலிஸ்ஸை கூப்பிடு”

    “முதல்ல ஆம்புலன்ச கூப்பிடுங்கய்யா….”

    என்றவாறு பல பேச்சுக்கள் அங்கே.

    ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது.

    காரை ஓட்டிவந்த ஆள் பயந்து நடுங்கியபடி “எம்மேல தப்பு இல்லீங்க”.

    அவனை ஓங்கி ஒரு அறை விட்டார் ஒரு வாட்டசாட்டமான ஆள். “என்னடா வண்டி ஓட்டுற ராஸ்கல்..”

    குழந்தையை தன் மடியில் தூக்கி வைத்து காலிலுள்ள ரத்தத்ததை துடைத்தபடி 101க்கு போன்  செய்தார்.

    அப்போது கூட்டத்தைப்பார்த்து அங்கு வந்த டாக்டர் ஞானி பையனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    “காலையில்தான் அவனுடைய அம்மாவும் அந்த குழந்தையும் எங்கிட்டே சிகிச்சை எடுத்தாங்;க… எங்கப்பா உங்கம்மா…? என்று பையனை பரிசோதனை செய்தபடி கேட்டார் டாக்டர் ஞானி.

    “அம்மா… அம்மா கார்லே போச்சு” என்று வலியால் அழுதபடி சொன்னான் அரவிந்த்.


    பாருங்கள் இதுதான் விதியென்பது….

    அந்த வழியே…ராசாத்தியையும் குழந்தையையும் தேடிவந்த வேலு கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து…இங்கே யாவது இருப்பார்களா? என்று யோசித்தபடி…  “இருக்கணும் கடவுளே… கருணைக் காட்டு” என்று கடவுளை மனதார வேண்டியபடி கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தான்.

    அவனுக்கு தலையில் இடியே விழுந்ததது போல் இருந்தது.
    “மகனே அரவிந்த்” தென்று கத்தினான்.

    கூட்டம் மொத்தமும் அவனை பலவித பார்வையில் பார்த்தது.

    அப்பாவின் குரலைக் கேட்டவுடன் “அப்பா” என்றான் அரவிந்த்.

    ஓடிச் சென்று டாக்;டரிடமிருந்து மகனை வாரி எடுக்க முயன்றான்.

    “இந்தாப்பா குழந்தை..  என் கூட எடுத்து வா”  என காரை நோக்கி சென்றார் டாக்டர்.

    கூட்டத்தை திரும்பி பார்த்து “நான் கவர்மெண்ட் டாக்டர்.. பெயர் ஞானி. என்னுடைய கிளினிக்குக்கு பையனை எடுத்து போறேன் நானே போலிசுக்கும் கம்ப்ளைண்ட் கொடுத்துடுறேன் அடி ஒண்ணும் பலமா இல்லை. பயப்பட வேண்டாம்”

    போகும் போது மோதிய கார் காரனிடம் அவன் முகவரி அனைத்தையும் பெற்றுக் கொண்டார் டாக்டர்.

    “உங்க பேரு என்ன? ஊசி போட்டபடி சின்னக் காயம் தான் பயப்பட தேவையில்லை.”

    வேலுங்க ஐயா…

    “காலையிலேதான் அவனுக்கு சிகியளித்தேன் அம்மா எங்கப்பா ன்னு கேட்டா காரிலே போயிருச்சிங்குறான்? என்ன உங்களுக்குள்ளே ஏதாவது                    சண்டையா?”

    தலைதலையாய் அடித்துக் கொண்டு “ஆமாம் டாக்டர் ஆமாம். இந்த மொடாக்குடிகாரன் தினம் தினம் குடிச்சட்டு அவளை சந்தேகபட்டு அடி அடின்னு அடிச்சிடுவேங்க.. புள்ளைத்தாச்சின்னு கூட பாக்காம போதையிலே மிதந்திருக்கேங்க.. ஒருநாள் அவளை சூடு வைக்க போனப்ப.., தடுத்த என் புள்ளை மீது பட்டு அதுல காயம் வந்ததுதான் டாக்டர் இது” என்று மகன் காலைக் காட்டியபடி கதறி அழுதான் வேலு.

    “இந்தாப்பா வேலு குடி குடியைக் கெடுக்கும் என்பது உன் விசயத்தில் எவ்வளவு உணை;மை பாத்தியா,? இப்போ குடும்பம் போச்சே…ச்சே.. கவலைப்படாதே எப்படியும் உனக்கு உன் மனைவி கிடைப்பாள். பார் உன் கண்ணில் இருக்கும் மஞ்சள் நிறம், கை கால் நடுக்கம், இர் எல்லாம நுரையீரல்  கெட்டுப் போன அறிகுறி … பரிசோதிக்காமலேயே தெரியுது…

    ஒருத்தன் வறுமையோடு வாழ்நாள் எல்லாம் வாழ்ந்திடலாம,; உழைப்பால் முன்னேறிடலாம் ஆனால் வாழ்நாள் முழுவதுமாக மருந்து மாத்திரையோடு வாழ்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

    இயற்கையா வர்ற வியாதியை மருந்து மூலம் குணப்படுததிடலாம் ஆனால் தானா தேடிப்பிடித்த வியாதியை குணப்படுத்துவதுதான் கஸ்டம். அது ஒயிருக்கே உலை வைத்துவிடும்”

    இப்போ மனைவியை இழந்து அதுவும் கர்ப்பிணி வேறு போ தேடி போய் கண்டுபிடி..”
    “சரி போட்டோ இருக்கா,’

    “இல்லைங்க..”

    “சரி முடிந்தளவு தேடிப்பார். இரவில் தங்குவத்ற்கு வேண்டுமானால் கிளினிக்கில் படுத்துக்கோ”.என்று சொல்லிவிட்டு பர்சை எடுத்து 1000 ரூபாய் கொடுத்தார் கருணையின் மறுவடிவம் ஞானி.

    (அட்மிட் ஆனவுடன் கவுண்டரில் ஆயிரக்கணக்கில் எணம் கட்ட சொல்லும் மருத்துவர் உலகில் இப்படி ஓர் உயர்ந்த உள்ளம்)

    டாக்டரிடம் விடைபெற்ற வேலு மகனைக்கூட்டிக்கொண்டு மீண்டும் ரயில்வே ஸ்டேசனுக்கு சென்றான்.

    ஒரு ரூபாய் காயின் பாக்சில்  தான் வைத்திருந்த கார்டிலுள்ள நம்பருக்கு போன் செய்தான்;;;;;;;;;;;;;;;;;.

    மறுமுனையில்

    “Hello”

    யார்  சொன்னது அந்த  Hello……

    அடுத்தவாரம் வரை காத்திருங்கள்.


    கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

     மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
     9952827529



     
    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    Monday, July 2, 2012

    உலகம் 2012 இல் அழியுமா?

    உலகம் 2012 இல் அழியுமா?
    மாயர்களின் விளக்கம்  வீடியோ

      
    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    உலகம் 2012 இல் அழியுமா?

    உலகம் 2012 இல் அழியுமா?
    மாயர்களின் விளக்கம்  வீடியோ

      
    நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.