சுட சுட செய்திகள்

Wednesday, July 11, 2012

வைரம் - சிறுகதை


சுழல் விளக்கு காரில் வரும் அதிகாரியின் மகன் வினோதனின் அன்றாட அட்டவணை.

காலை 5. 30 லிருந்து 6.30 கணக்கு டியுசன். பீஸ். 1500.

6.45 லிருந்து 7.45 ஆங்கிலம் பீஸ் 1000

(28 எழுத்துக்கள் கொண்டு…இன்றைக்கு உலகத்தையே ஆட்டி வைக்கும் மாயவாதியான மொழி)

எல்லாமே பைக் கார்தான் நடை பயணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பள்ளியிலிருந்து திரும்பிய பின் மாலையில்  ஹார்லிக்ஸ், சத்தான ஸ்நேக்ஸ், கொறித்தப்படி கம்பியூட்டரில் 6 மணிவரை.

சவரில் புதிய வகை சோப் மணக்க 6.25 வரை குளியல்,

6.30முதல் 7.30 சோசியல் பீஸ்

7.03 வழ 8.00 மணிவரை தாய் மொழி தமிழ் பீஸ்…250.

என்ன செய்ய? சன் டாட் மம் என்று பாலூட்டி வளர்த்தாயிற்று வேறு வழியில்லை.பணம் போட்டு படிக்க வைத்துத்தானே ஆக வேண்டும்.

மேட்டுக்குடி வம்சம். கூந்தல்  உள்ளவள் அள்ளி முடிக்கிறாள்.

வீட்டில் 9.45 வரை கம்ப்யூட்டர் (தனியறையில்) பார்த்தபடி பலவகை பதார்த்தம்;. முடிந்தால் ஹோம் வொர்க்.

ஹெட்போனை காதில் மாட்டியபடி பாட்டு மற்றும் நண்பர்களுடன் அரட்டை. பிறகு ஏசி ரூமில் தூக்கம்.


என்னம்மா கௌரி பாட்டிக்கு எப்படி இருக்குது?

என்று கேட்டாள் டீச்சர் அருள்மொழி.

இருமியபடி “டீச்சரம்மா நான்  நல்லாதான் இருக்கிறேன் என்ன இவப் படிப்புத்தான் நின்னு போச்சு. அதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. அந்த பைய அதான் இவ அப்பா குடும்ப சண்டையிலே இவ ஆத்தாக் காரிய நெருப்ப வைச்சுட்டு செத்துட்டான்..பாழாய் போனவன்…உடம்பு சுகத்துக்காக வேறு ஒரு சிறுக்கியைக் கட்டிக்கிட்டு இந்த மூணு புள்ளைங்களையும் ஆண்டவன் என்கிட்ட தள்ளிட்டான். இதுகளை எப்படித்தான் கரை சேத்த போறேனோ தெரியல. இந்த சின்ன வயசுலே படிப்பை நிறுத்திட்டு டீ கடையிலே வேலை.. அப்புறமா பூ கட்டுறதுன்னு காசுக்காக கஸ்டப்படறா” என்று சொல்லியபடி அழுதாள் பாட்டி.

 “கௌரி நீ நல்லபடிக்கற பொண்ணுன்னு இந்தப் பள்ளியில் உள்ள எல்லோருக்கும் தெரியும். உன் நிலமை எங்களுக்குத் தெரியும். எங்களால் முடிந்தளவு உதவி செய்றோம் ஆயிரம் ஆயிரமாக ஏன் லட்ச லட்சமாக பணம் பார்க்கும் தனியார் பள்ளியின் மத்தியில் அரசு பள்ளியிலும் நன்றாக பாடம் சொல்லித்தரும் நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கவலைப்படாதீங்க பாட்டி மீண்டும் உங்கள் பேத்தியை கட்டாயம் பள்ளியில் சேர்த்து விடுகிறேன் கவலைப்படாதீங்க. என்றார் டீச்சர்.

இனி பூ சுற்றுவது வேறு எடுபிடி வேலை செய்து தம்பி தங்கையை படிக்க வைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்த கௌரியின் ஆனந்ததிற்கு அளவே இல்லை.

கண்ணீர் மல்க நின்று டீச்சர் அருண்மொழியை கையெடுத்து வணங்கினாள்.பேச வார்த்தைகள் வரவில்லை.

தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தாள் சிறிது நேரத்தில் வந்த கரண்ட் போயி விட்டது ஓடினாள் கௌரி. நம்ம தமிழ்நாட்டுல மட்டும் என்னவாம்?

“அண்ணே அண்ணே”

“என்னம்மா இன்னுமா நீ தூங்க போகலை? பாலாய் போன கரண்ட் போயிடுச்சா..இந்தாம்மா” என்று பேட்டரி லைட் கொடுத்தார் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பரமசிவம்.  பேட்டரி லைட் வெளிச்சத்தில் படிக்க உட்கார்ந்த பொழுது…

இந்த சிறுக்கி பேசாம ப+ சுத்தி..வியாபாரத்த பாக்க வேண்டியத விட்டுட்டு, படிச்சு கிழிச்சு என்ன கலெக்ட்ராவா ஆகப் போறா? உடுக்க துணியில்ல..இருக்க வழியில்ல அறை வயித்து கஞ்சி காரிக்கு எதுக்கு படிப்பு கிடிப்பு? - இது பரமசிவத்தின் அம்மா பார்வதி…

விசம் நிறைந்த வார்த்தைகளை புன்னகையுடன் அதையும் ஏற்றுக் கொண்டு படிக்கத்தொடங்கினாள்.

இது தினமும் நடக்கும் சம்பாசனைதான்.

மதிய உணவில் சிலர் விளையாட்டு பேச்சு என ஜாலியாக இருந்தனர் காலியாக இருந்த வகுப்பில் கௌரி மட்டும் வீட்டு பாடத்தை செய்து கொண்டிருந்தாள்.

இரவு 10 மணி.

ஆள் நடமாட்டம் அடங்கிவிட்டது.. நாய் சப்தத்தை தவிர.

ஓயாத மழை.

தம்பி தங்கை மீன்வண்டியின் நனையாதபடி படுக்க வைத்துவிட்டு பாட்டியை ஒரு ஓரமாக படுக்கச் சொல்லிவிட்டு ஒரு ஒரத்தில் ஒட்டி உட்காhர்ந்துபடி லைட்கம்பத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மழை ஓய்ந்து முழுவதுமாக நின்றது.

தெருவிளக்கு எரிய ஆரம்பித்தது. கௌரியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.

மடமடவென பையிலுள்ள புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இரவு 11 மணியாகும் அதற்கு மேல்தான் படிக்க முடியும் லைட் கம்பத்தின் கீழ் அது நில நேரம் எரியாமல் படிக்க வா பார்க்கிறாய் என்று விளையாட்டு கா ட்டும்.

நம் முன்னாள் ஜனாதிபதி மண்ணென்னய் இல்லாத நிலையில் தெருவிளக்கில் படித்தவர்தான் என்பது இன்னொரு செய்தியும் கூட.
அன்றைய தினம் ரிசல்ட் வெளியாகி யிருந்தது.

ரிசல்ட்  பார்க்க பிரவுசிங் சென்டர் கூட்டம் 20 ரூபாய் 15 ரூபாய்  என்ற நிலைமைகேற்ப வசூல்.

என்ன செய்வது? கையில் காசில்லை பாட்டியிடமுமில்லை என்று நினைத்து கொண்டிருந்தாள் கௌரி.

“வினோ அப்பா பேசறேண்டா இவ்வளவு பண்ணி அட்லிஸ்ட் ஸ்கூல் 3 வது ரேங்க் கூட வரலியே?”

“அட விடுங்க பையன் பாஸ் பண்ணிட்டான்ல அது போதும்”…என்றாள் வினோதனின் தாய்.

கௌரி என்று தோளை தொட்ட கூப்பிட்டவரை திரும்பி பார்த்தாள்.

வணக்கம் டீச்சர்

இன்னும் ரிசல்ட் பார்க்கலையா? நீ கட்டாயம் பாஸ் பண்ணீருப்ப .வா மார்க் பார்க்கலாம் 



“டீச்சர் அது வந்து”… என்ற கௌரியை பார்த்து “என்ன காசில்லையா?

வாம்மா நான் பார்த்துக்கிறேன் என்றபடி அழைத்துச்சென்று ரிசல்ட் பார்த் த மறு நிமிடம் “கௌரி நீதான் ஸ்கூல் பஸ்ட்” கௌரி கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார் டீச்சர்.

அப்போதுதான் வைரமாக தெரிந்தாள் கௌரி…..அந்த பார்வதிக்கு…


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

Anonymous said...

intha kathaiyila solli iruppathu pola niraiya idaththula parththu irukken...
nice story...

www.sindanaisiragugal.blogspot.com