சுட சுட செய்திகள்

Monday, July 9, 2012

சட்டத்தின் படி (5) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
ஒரு ரூபாய் காயின் பாக்சில்  தான் வைத்திருந்த கார்டிலுள்ள நம்பருக்கு போன் செய்தான்;;;;;;;;;;;;;;;;;.
மறுமுனையில்
“Hello”
யார்  சொன்னது அந்த  Hello……


 மேட்டுக்குடி ஆண்களில் சில பேர் காம வெறி பிடித்து ஏழை பெண்களை நாசமாக்குவதை தடுக்கவே முடியாதா?

கார் கண்ணாடிகளை உயர்த்தி, பெண்களை கடத்தி வன்புணர்வு கொள்ளும் மிருகங்களை என்னதான் செய்வது?

“அய்யா நான்; மாசமா இருக்கிறேன் என்னை…………விட்டுடுங்க….  கதறினாள்  துடித்தாள் .

கொடுமையிலும் கொடுமையிலும் இக்கொடுமையினை நடத்திவிட்டான் அந்த காமுகன். என்பதை விட தெருநாய்.

காரிலிருந்து ராசாத்தியை இறக்கிவிட்டு சில 500 ரூபாய் நோட்டுகளை ஜாக்கெட்டுக்குள் திணித்து விட்டு சென்றான். பண்ணின பாவத்துக்கு பரிகாரமாக.

தன் நிலையுணர்ந்த ராசாத்தி திடிரென்று பித்து பிடித்தவளாக மகனைத் தேடி ஓடினாள்.

அடுத்தடுத்து வந்த சிலைகளைத் தாண்டி ஓடினாள். 

பெருமூச்சு வாங்க நின்றாள் பக்கத்தில் சிலம்புடன் கண்ணகி சிலை. மதுரையை எரித்தவள்.

கண்கலங்க அழுவதற்குக் கூட திராணியில்லாமல் வாயில் உதடுகள் மட்டும் ஏதோ கண்ணகியைப் பார்த்து முணுமுணுத்தது.

கண்ணகியிடம் இந்த அவலத்தை சொல்லி சென்னையை எரிக்கவா முடியும்?

எங்கு மகனை விட்டுச் சென்றாளோ அந்த இடத்தில் வருவோரிடமும், போவோரிடமும் எல்லாம் மகனை பற்றி விசாரித்தாள்.

ராசாத்தியின் கோலத்தைப்பார்த்து சிலரின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.

“யம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே கார்லே அடிப்பட்டது உம் மவனா? அவன தூக்கிட்டு போயிட்டாங்களே? என்ன மனுசி நீ? கொழந்தை புள்ளையை அநாதையா விட்டுட்டு நீ எங்கே போனே?”

ஐயோ காருல அடி பட்டுடானா? உலகமே இருண்டது போல தலையில் இடிவிழுந்தது போல் மயங்கி விழுந்தாள்.

செய்தி சொன்னவன் திடுக்கிட்டு செய்வதறியாமல் நின்றாள்.

“யோவ்…என்னைய்யா பொம்பளை மயங்கி கிடக்கிறா…! நீ மசமசன்னு நின்னுட்டு இருக்கிறே.? தண்ணீரை முகத்தில் தெளித்து குடிக்கவும் கொடுத்தனர்.

மயக்கம் தெளிந்த ராசாத்தி தன்னை சுற்றி நின்றிருந்த சிறு கூட்டத்தைப் பற்றி கவலைப்படாமல், என்ன ஏது என்றுகூட கேட்காமல் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் கடலை நோக்கி சென்றாள்.

கட்டிய கணவன, பெற்ற மகன், கட்டிக்காத்த கற்பு, இத்தனையும் போய்விட்ட பின்பு இனியும் வாழ வேண்டுமா?.

ஆர்ப்பரிக்கிற அலையின் மீது கால் பட்டதும், அலையின் வேகம் ஒவ்வொரு அடியாக உயர்ந்தது.

ராசாத்தி மடமடவென்று கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்…


‘தங்கச்சி….. தங்கச்சி’

குரல் வந்த திசையினை திரும்பிப் பார்த்தாள்.

அதற்குள் பெரும் அலை ராசாத்தியை அணைத்தது.

ராசாத்திக்கு என்ன ஆனது? அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.


கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

 மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.