சுட சுட செய்திகள்

Wednesday, July 4, 2012

சட்டத்தின் படி ....(4)

சென்ற வாரம்
அந்த பாவி சாதாரணமாக சொன்னான்…
“உன் பையன் எங்கேயும் போக மாட்டான்…ஒரு பத்தே நிமிசம்…அதோ அங்கே…”
ஒரு இடத்தை காட்டியபடி காரை ஓட்டினான்.
குழந்தை அம்மா அம்மா என்று தடுமாறியபடி ஒடி வருவது மட்டும், ராசாத்திக்கு தெரிந்தது

 
காலை மாலை இருவேலையிலும் அவசரத்தின்மேல் அவசரம் இதற்கு விடையே இல்லையா நகரத்தில்?
அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், உழைக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பெண்கள் உட்பட கார், பைக், ஸ்கூட்டர், ஸ்கூட்டியில் பயணிக்கும் போது சிக்னல் விழவதற்குள் போய்விட வேண்டும்.
 அப்படி என்ன அவசரமோ?

என்ன காரணமாக இருக்கும்?
மனைவி சொல்லை மந்திரமாக கொண்ட கணவன் ;

பிஞ்சுகளைக் காப்பகத்திலிருந்து அழைத்து செல்லும் தாய்மார்கள்,

இந்த ரயிலை விட்டால் பிளாட் பாரம்தான் கதி என கதிகலங்கும் வேலைமுடித்துச்செல்லும் சம்பளதாரர்கள்.

மாலை உங்களுக்காக ரெடியாயிருப்பேன் சாக்கு போக்கு சொல்லக்கூடாது என்ற புதுமனைவியின் கடட்டளை. இது  கடுகளவு தவறினாலும் நிலைமை மோசமாகிவிடும்.

மூன்று மாதம் தொடர் முயற்சி விடாமுயற்சியுடன் கடை பஸ்ஸடாப், தண்ணீர்பைப்  பால்பூத் , கல்லூரி என விடாது சுற்றி, வெற்றியடைந்து காதலித்த காதலி, இன்னும் கால் மணி நேரம் தான் காத்திருப்பாள் அதற்குள் போய்விட வேண்டும் இல்லையேல் பட்ட கஸ்டம் பாலாகிவிடும். என துடிக்கும் இளைஞன்.

அம்மாவை ஆஸ்பிட்டல் கூட்டி போக வேண்டும்... டாக்டர் அடுத்த கிளினிக் போவதற்குள் போயாக வேண்டும் என்ற மகனின் பாச பரிதவிப்பு.

மாப்பிள்ளை லேட் பண்ணாதே உனக்காக காத்திருக்கோம்! நீ வந்த பின்தான் ஓப்பன் பண்ணனும் !!! மது பிரியர்களின் அன்புக்கட்டளை.

அன்றைக்கு கிடைத்த கூலியில் வீட்டு தேவையானதையும், குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கும் பொறுப்புள்ள குடும்பத்தலைவன்.

முதலில் டாஸ்மாக்கு, அப்புறம் கடவுள் புண்யத்தில் மிச்சம் மீதியிருந்தால் வீட்டுக்கு என ஒரு பாலிசியே வைத்திருக்கும் சைக்கிலில் சவாரி செய்யும் தொழிலாளி

வீடு போய் சேருவதற்குள் சீரியல் முடிந்து விடுமா? மனதில் கேள்விக்குறியுடன் பரபரப்போடு பயணத்தை எதிர்கொள்ளும் சில தாய்மார்கள்.

இப்படி பலரின்; அவசரம் ஆதங்கம் இந்த நகரத்தில்.
அப்பப்பா எத்தனை விதமான மனிதர்கள் இந்த சென்னையில்….

 
          ராசாத்தியின் மகன் குழந்தை அரவிந்த் “அம்மா அம்மா..” என்றபடி ரோட்டை கடக்க முயல, திடீரென வந்த கார் மோதியது. அம்மா என்ற கத்தலுடன் கீழே விழுந்தான் அரவிந்த்.

சட்டென நின்றது கார்.

“பையன் மேலதான் தப்பு,”

“ஏய்… மெதுவா வந்தாதான் என்ன? கார் போனா வேற கார் வாங்கிக்கலாம் உயிர் போனா வருமா?”

“போலிஸ்ஸை கூப்பிடு”

“முதல்ல ஆம்புலன்ச கூப்பிடுங்கய்யா….”

என்றவாறு பல பேச்சுக்கள் அங்கே.

ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது.

காரை ஓட்டிவந்த ஆள் பயந்து நடுங்கியபடி “எம்மேல தப்பு இல்லீங்க”.

அவனை ஓங்கி ஒரு அறை விட்டார் ஒரு வாட்டசாட்டமான ஆள். “என்னடா வண்டி ஓட்டுற ராஸ்கல்..”

குழந்தையை தன் மடியில் தூக்கி வைத்து காலிலுள்ள ரத்தத்ததை துடைத்தபடி 101க்கு போன்  செய்தார்.

அப்போது கூட்டத்தைப்பார்த்து அங்கு வந்த டாக்டர் ஞானி பையனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

“காலையில்தான் அவனுடைய அம்மாவும் அந்த குழந்தையும் எங்கிட்டே சிகிச்சை எடுத்தாங்;க… எங்கப்பா உங்கம்மா…? என்று பையனை பரிசோதனை செய்தபடி கேட்டார் டாக்டர் ஞானி.

“அம்மா… அம்மா கார்லே போச்சு” என்று வலியால் அழுதபடி சொன்னான் அரவிந்த்.


பாருங்கள் இதுதான் விதியென்பது….

அந்த வழியே…ராசாத்தியையும் குழந்தையையும் தேடிவந்த வேலு கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து…இங்கே யாவது இருப்பார்களா? என்று யோசித்தபடி…  “இருக்கணும் கடவுளே… கருணைக் காட்டு” என்று கடவுளை மனதார வேண்டியபடி கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தான்.

அவனுக்கு தலையில் இடியே விழுந்ததது போல் இருந்தது.
“மகனே அரவிந்த்” தென்று கத்தினான்.

கூட்டம் மொத்தமும் அவனை பலவித பார்வையில் பார்த்தது.

அப்பாவின் குரலைக் கேட்டவுடன் “அப்பா” என்றான் அரவிந்த்.

ஓடிச் சென்று டாக்;டரிடமிருந்து மகனை வாரி எடுக்க முயன்றான்.

“இந்தாப்பா குழந்தை..  என் கூட எடுத்து வா”  என காரை நோக்கி சென்றார் டாக்டர்.

கூட்டத்தை திரும்பி பார்த்து “நான் கவர்மெண்ட் டாக்டர்.. பெயர் ஞானி. என்னுடைய கிளினிக்குக்கு பையனை எடுத்து போறேன் நானே போலிசுக்கும் கம்ப்ளைண்ட் கொடுத்துடுறேன் அடி ஒண்ணும் பலமா இல்லை. பயப்பட வேண்டாம்”

போகும் போது மோதிய கார் காரனிடம் அவன் முகவரி அனைத்தையும் பெற்றுக் கொண்டார் டாக்டர்.

“உங்க பேரு என்ன? ஊசி போட்டபடி சின்னக் காயம் தான் பயப்பட தேவையில்லை.”

வேலுங்க ஐயா…

“காலையிலேதான் அவனுக்கு சிகியளித்தேன் அம்மா எங்கப்பா ன்னு கேட்டா காரிலே போயிருச்சிங்குறான்? என்ன உங்களுக்குள்ளே ஏதாவது                    சண்டையா?”

தலைதலையாய் அடித்துக் கொண்டு “ஆமாம் டாக்டர் ஆமாம். இந்த மொடாக்குடிகாரன் தினம் தினம் குடிச்சட்டு அவளை சந்தேகபட்டு அடி அடின்னு அடிச்சிடுவேங்க.. புள்ளைத்தாச்சின்னு கூட பாக்காம போதையிலே மிதந்திருக்கேங்க.. ஒருநாள் அவளை சூடு வைக்க போனப்ப.., தடுத்த என் புள்ளை மீது பட்டு அதுல காயம் வந்ததுதான் டாக்டர் இது” என்று மகன் காலைக் காட்டியபடி கதறி அழுதான் வேலு.

“இந்தாப்பா வேலு குடி குடியைக் கெடுக்கும் என்பது உன் விசயத்தில் எவ்வளவு உணை;மை பாத்தியா,? இப்போ குடும்பம் போச்சே…ச்சே.. கவலைப்படாதே எப்படியும் உனக்கு உன் மனைவி கிடைப்பாள். பார் உன் கண்ணில் இருக்கும் மஞ்சள் நிறம், கை கால் நடுக்கம், இர் எல்லாம நுரையீரல்  கெட்டுப் போன அறிகுறி … பரிசோதிக்காமலேயே தெரியுது…

ஒருத்தன் வறுமையோடு வாழ்நாள் எல்லாம் வாழ்ந்திடலாம,; உழைப்பால் முன்னேறிடலாம் ஆனால் வாழ்நாள் முழுவதுமாக மருந்து மாத்திரையோடு வாழ்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

இயற்கையா வர்ற வியாதியை மருந்து மூலம் குணப்படுததிடலாம் ஆனால் தானா தேடிப்பிடித்த வியாதியை குணப்படுத்துவதுதான் கஸ்டம். அது ஒயிருக்கே உலை வைத்துவிடும்”

இப்போ மனைவியை இழந்து அதுவும் கர்ப்பிணி வேறு போ தேடி போய் கண்டுபிடி..”
“சரி போட்டோ இருக்கா,’

“இல்லைங்க..”

“சரி முடிந்தளவு தேடிப்பார். இரவில் தங்குவத்ற்கு வேண்டுமானால் கிளினிக்கில் படுத்துக்கோ”.என்று சொல்லிவிட்டு பர்சை எடுத்து 1000 ரூபாய் கொடுத்தார் கருணையின் மறுவடிவம் ஞானி.

(அட்மிட் ஆனவுடன் கவுண்டரில் ஆயிரக்கணக்கில் எணம் கட்ட சொல்லும் மருத்துவர் உலகில் இப்படி ஓர் உயர்ந்த உள்ளம்)

டாக்டரிடம் விடைபெற்ற வேலு மகனைக்கூட்டிக்கொண்டு மீண்டும் ரயில்வே ஸ்டேசனுக்கு சென்றான்.

ஒரு ரூபாய் காயின் பாக்சில்  தான் வைத்திருந்த கார்டிலுள்ள நம்பருக்கு போன் செய்தான்;;;;;;;;;;;;;;;;;.

மறுமுனையில்

“Hello”

யார்  சொன்னது அந்த  Hello……

அடுத்தவாரம் வரை காத்திருங்கள்.


கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

 மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529



 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: