சுட சுட செய்திகள்

Tuesday, March 19, 2013

சட்டத்தின் படி - விறவிறுப்பான தொடர்கதை (27))

ராசாத்திக்கு திருப்புர் ஒன்றும் புதிதல்ல.

ஆனால் 20 வருடம் கழித்து வந்த ராசாத்திக்கு அதி வேக வளர்ச்சியைக் கண்டு பிரம்மிப்படைந்தாள்.

கண்டக்டரிடம் விலாசத்தைக் காட்டி தென்னம்பாளையத்திலுள்ள திவாகரன் எக்ஸ்போர்ட் க்கு போகும் வழியை தெளிவாக தெரிந்துக் கொண்டு தட்டுத் தடுமாறாமல் சரியான இடத்திற்கு வந்து செக்யுரிட்டியிடம் தமயந்தி தாய் என அறிமுகம் செய்து கொண்டு தமயந்தியைப் பார்க்க வந்ததாகக் கூறினாள்.

இண்டர்காமில் வேலுவை தொடர்புக் கொண்டார் செக்யுரிட்டி….

போனில் “செக்யுரிட்டி தமயந்தி அம்மா வந்துட்டாங்களா, எனக் கேட்டார் வேலு”

“வந்துட்டாங்க சார்”

“சரி அவங்கள ஆபிசுக்கு அனுப்பி வைங்க”

“அம்மா உங்க பேரை சொல்லுங்கம்மா…ரிஜிஸ்டர்ல எழுதனும்.”
(இண்டர்காம் தொடர் துண்டிக்கப்பட வில்லை)

“ராசாத்திங்க….”

இந்த பெயரை இன்டர்காமில் கேட்ட வேலு திடுக்கிட்டார். ஏதோ உணர்வு உந்தலில்

“செக்யுரிட்டி உடனே அவங்களைக் கூட்டிட்டு வா…”

வேலுவின் அறைக்;குச் சென்ற ராசாத்தி, “வணக்கம் முதலாளி” என்றாள்.

குரலைக் கேட்டதும் திரும்பிப்பார்த்த வேலு, சிலையான நிலைமைக்கு ஆளானார்.

ராசாத்தி குழப்பத்துடன் இது என் கணவரா, இல்லை அவர் சாயல் கொண்ட வேறு யாரோவா,? என்று குழப்பம் கலந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

இருபக்கமும் அமைதியிலும் அமைதி. அப்படியொரு அமைதி.

தொட்டு தாலி கடட்டிய மனைவியுடன் 7 ஆண்டுகால தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்தது அவ்வளவு எளிதாக மறந்து விட முடியுமா?

கண்ணீரை துடைத்தபடி “நீ….நாக்கு குழறியது. எ..எ…என் ராசாத்தியா….?”

தாரை தாரையாக வரும் கண்ணீரை துடைத்தபடி அழுது கொண்டே ‘ஆ ஆ ஆமாங்க உங்க ராசாத்pயே தான்.

தன்னையே மறந்த வேலு ராசாத்தியை கட்டடிபிடித்து நெற்றியில் முத்தமிடட்டபடி “ராசாத்தி:” …என பாசமழை பொழிந்தான்.

“சொல்லுங்க நீங்க…எப்படி…?”

“இந்த நிலைமைக்குள்…என்று தானே கேட்குற? எல்லாத்தையும் பின்னால் சொல்றேன்.”

“தமயந்தி நம்ம….”…

“ஆமாங்க தமயந்தி உங்க மகதானுங்க..நம்ம பொண்ணுங்க.” 

அப்போது வேலுவின் செல் அடித்தது.

“சொல்லும்மா…”

அரவிந்த உடன் வரும் விசயத்தை தமயந்தி சொல்கிறாள்.

“தமயந்தி அரவிந்த கூட நீயும் வீட்டிற்குப் போ…ஆபிசுக்கு வர வேண்டாம்.”

“அய்யா அம்மா…”

“வந்துட்டாங்களான்னு தானே கேட்குற? அம்மாவை நான் கூட்டிட்டு வரேன். அதுவரை அங்கேயே யிரும்மா.”

போனை ஆப் செய்தான் வேலு….

அப்போது மெல்லிய குரலில்

“என்னங்க என்னை மன்னிசுடுங்க. நம்ம பையன் அரவிந்தை…” அழுதாள் ராசாத்தி..

“கவலைப்படாதே ராசாத்தி…அரவிந்த் என்கூடத்தான் இருக்கான். வா எல்லா விசயத்தையும் விலாவரியா சொல்றேன்.”

காரில் போகும்போது வேலுவும் ராசாத்தியும் கடந்த கால நிகழ்வினை ஒருவரொக்கொருவர் பகிர்ந்து கொண்டே வேலுவின் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

சென்னையில் வீட்;டிற்கு வந்த, தியாகு டிரைனிங் முடித்து திருப்புரில் அப்பாயின்மெண்ட் ஆகியிருந்த விசயத்தை முத்துவிடம் சொன்னான்.

அத்தையும், தமயந்தியும் திருப்புரில் இருப்பதையும் முத்துவிடமிருந்து அறிந்துக் கொண்டான்.

“அப்பா நாளைக்கு நல்ல நாள் டூட்டியில் ஜாயின் பண்ணிடலாம்ன்னு நினைக்கிறேன். அப்படியே அத்தையும் தமயந்தியையும் பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.”

இருவரும் திருப்புருக்கு கிளம்பினார்கள்.

திவாகரனும்.  அவர் மகனும்…அமெரிக்கவிலிருந்து சென்னையில் ஒரு மீட்டிங்கை முடித்துவிட்டு திருப்புருக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்.

அரவிந்த தமயந்தி வந்த கார் பங்களாவை அடைந்தது.

வேகமாகச் சென்ற அரவிந்த் தமயந்தியை திரும்பிப்பார்த்து, “ஹலோ பி எ மேலே என்  ரூம்க்கு வா”…என்றான்;,

“பரவாயில்லை சார். நான் இங்கயே வெயிட் பண்றேன்”.

“ஹலோ பேர் ஹ தமயந்தி…ஐ எம் ய ஓனர்…என் பேச்சை ஒபே பண்ணுங்க.”

வேறு வழியின்றி அரவிந்த ரூம்க்கு தமயந்தி சென்றாள்.

சோபாவைக் காட்டி உட்காரச் சொன்னான் அரவிந்த்.

உடையை மாற்றிக் கொண்டு வந்த அரவிந்த ரூம் கதவினை தாழிட்டான்.

சோபாவில் உட்கார்ந்திருந்த தமயந்தி திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.

“ஏ..பயப்படாதே..உட்கார். அப்பா வர்றதுக்கு எப்படியும் 10 நிமிசம் ஆகும். ம் ம் நீ ரொம்ப அழகாயிருக்க. ஆடம்பரமில்லாத அழகு.” என்று சொல்லியபடி தமயந்தியின் தோள் மீது கை வைத்தான்.

தேள் கொட்டியது போல் விலகி நி;ன்றாள் தமயந்தி.

தமயந்தி கை கூப்பி “சார் தயவு செய்து என்னை ஒன்றும் செய்திடாதீங்க ப்ளீஸ்.”

“இதுதான வேண்டாங்கிறது. இங்கே நடக்க போறது யாருக்கும் தெரியாது.”

“அண்ணா( காலை பிடித்தபடி) உங்க தங்கையா நினைச்சுக்குங்க..என்னை விட்டுடுங்க…”

“என்னது தங்கையா…இந்த சென்டிமெண்ட் எல்லாம் வேண்டாம்.”

காமம் கண்ணை மறைக்க, அரவிந்த மிருகமானான்.

அவனிடமிருந்து தப்பிக்க தமயந்தி அங்குமிங்கும் ஓடினாள்.

வேலுவும் ராசாத்தியும் மகனையும் மகளையும் காண காரிலிருந்து இறங்கி வேகமாக பங்களாவில் நுழைந்தார்கள்.

தமயந்தியின் அபாய குறல் கேட்டு வேலு மாடிக்கு விரைந்தார்.

திறந்த ஜன்னல வழியாக கண்ட காட்சி வேலுவை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்லுகிறது.

“டேய் அவளை விட்டுடா அவ உன் கூட பொறந்த தங்கச்சிடா..கதவைத் திறடா…”

வேலுவின் பேச்சை கொஞ்சம் கூட கேட்காமல் தமயந்தியை கட்டிலில் தூக்கிப்போட்டான் அரவிந்த்.

வேலு சிறிதும் காலம் தாழ்த்தாமல் வேகமாக தன் ரூமுக்கு சென்று கைத் துப்பாக்கியை எடுத்து வந்து ஜன்னல் வழியாக ஆறு தோட்டா தீரும் வரை அரவிந்தை சுட்டுத் தள்ளுகிறார். அரவிந்தவின் உடல் சல்லடையாகி தரையில் விழுகிறது.

இக்காட்சியைக் கண்ட ராசாத்தி என்ன செய்வது என்று தெரியாமல் மயக்கமுற்று வேலுவின் தோளில் சாய்கிறாள்.

இன்னும் பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள் காத்திருக்கின்றன…..அதிர்ச்சிகள் தொடரும்….
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி - விறவிறுப்பான தொடர்கதை (26)

பக்கத்து வீட்டு பார்வதியின் மகள் சுமதி (சுமதியும்,தமயந்தியும் கல்லூரித் தோழிகள்)

“ஆண்டி ஆண்டி தமயந்திகிட்டேயிருந்து போன்:” என்று ராசாத்தியிடம் செல்லைக் கொடுத்தாள்.

“தமயந்தி எப்படியம்மாயிருக்கே,? போன காரியம் என்னம்மா ஆச்சு?”

“அம்மா என்னைப் பற்றி கவலைப்படாதே வேலை கெடச்சிருச்சு. தங்கறதுக்கு சாப்பாட்டுக்குன்னு எல்லாத்துக்கும் எந்த பிரச்சனையில்லம்மா. முதலாளி தங்கமானவர். செல்லெல்லாம் வாங்கிக் கொடுத்துரக்குறார்.”

“பரவால்லையே…நல்லா இருக்கணும் அந்த மனுசன்.”

“ம்..அம்மா மாமாக்கிட்டே போனைக் கொடு, மாமா வேலைக் கிடைச்சுருச்சு நம் கஸ்டமெல்லாம் அமல்ல மெல்ல தீர்ந்திரும். மாமா வேளாவேலைக்கு சாப்பிடுங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.”

“அம்மா தமயந்தி உன் புத்திசாலித்தனத்திற்கு கணடிப்பாக வேலைக் கிடைக்கும்னு எனக்குத் தெரியும் கண்ணு. மாமா சொன்ன கேப்பியல்ல. பேச்சை தட்ட மாட்டியே?’

‘சொல்லுங்க மாமா’

‘என்னால இப்ப அங்க வர முடியாது. அதனால உங்க அம்மாவை அனுக்கி வைக்கிறேன். நேரடியா உன்னுடைய சவுரியத்தை பார்த்துட்டு வந்துட்டா மனசுக்கு நிம்மரியாயிருக்கும். மறுக்காதேம்மா.”

“அய்யோ மாமா.. பெத்த அப்பா மாதிரி முதலாளி கவனிச்சுக்கிறார். 24 மணி நேரம் செக்யுரிட்டி இருக்கு மாமா. சரி மாமா உங்க விருப்பம். செல்லை சுமதிக் கிட்ட கொடுங்க. எப்படி வரணும்pங்கறதையும் அட்ரசையும் சுமதி எழுதி தருவாள். ஜாக்கிறதையா அம்மாவை வரச் சொல்லுங்க மாமா.”

“சரிம்மா நாளைக்கே அனுப்பி வைக்கிறேன்.”

தமயந்தியின் செல்லில் வேலு.

“சொல்லுங்க ஐயா..”

“அம்மா தமயந்தி நாளைக்கு எம்பையன் பாரின்லே இருந்து வர்றான். என்னால் ஏர்போர்ட்டுக்கு போக முடியாது. நாளைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.அதனால கார்ல போய் பையனைக் கூட்டிட்டு வந்திரும்மா…”

தமயந்தி இருதலைக் கொள்ளி போல அமல்லவும் முடியாமல் விழுங்கவுமு; முடியாமல் பதில் சொல்லாமல் இருந்ததை கண்டு,

“தமயந்தி என்ன பதிலே காணோம். ஒன்னும் பயப்படாத. உன் கூட செக்யுரிட்டி டிரைவர் வருவார்.அவருக்கு மகனைத் தெரியும். நீ அவனை ரிசீவ் பண்ண போனா போதும்.”

தயங்கி தயங்கி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அய்யா அன்னைக்கு எங்கம்மா என்னைப் பார்க்க இங்க வர்றாங்களே.”

“ஓ அப்படியா….நேரா இங்கத்தான வருவாங்க.? அட்ரஸ் சரியாத்தானே சொல்லியிருக்க?. கவலைப்படாதே. நான் அவங்கள ரிசீவ் பண்ணி உன் ரூமில் தங்க வைச்சிடுறேன்.”

வேறு வழியில்லாமல் “சரி அய்யா” என்றாள் தமயந்தி


தொடரும் 

 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி (25)


 தமயந்தி வேலுவின் நிர்வாகத்திலுள்ள எக்ஸ்போர்;ட் பனியன் கம்பெனியின் நுழைவு வாயிலில் நின்றுக் கொண்டு, அங்கிருந்த  செக்யுரிட்டியிடம் அழைப்புக் கடிதத்தை காண்;பித்தாள்.

“ ம் உள்ளே போங்கள்..”

வேலு முக்கியமான பைலில் ஆழ்ந்த கவனத்தோடு எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

May I coming Sir?    

yes…உட்காருங்க…

உங்க பெயர்….

தமயந்தி..

தமயந்தி நல்ல பெயர். என்று சொல்லியபடி தமயந்தியை நிமிர்ந்து பார்த்தார். மின்னல் அடித்தது போல் அதிர்ச்சியும் ஆச்சரியமும் சந்தோசமுமாக வேலு முகத்தில் பிரகாசம்….

ஏதோ ஒரு பரவசம் அவன் முகத்தில் பிறந்தது. அவன் குழந்தையல்லவா அவள்.

ம்..சொல்லும்மா…எங்கேயம்மா என்று கேட்பதற்குள்…தனது பயோடேட்டாவை பவ்யத்துடன் காண்பித்தாள் தமயந்தி.

அத்தனையும் படித்தாதாக தெரியவில்லை. காணம் போன தனது மனைவி ராசாத்தியை அப்படியே உரித்து வைத்தது போல் தமயந்தி உள்ளதால் அந்த பாதிப்பிலிருந்து மீளாமல் தனது அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
உங்கள் குடும்ப விபரங்கள்.

அம்மா மாமா தியாகுவைப்பற்றி சுரக்கமாக கூறியபடி…எனக்கு மட்டும் வேலைக் கிடைச்சிடுச்சுன்னா என் அம்மாவையும் மாமாவையும் நான் கூட்டிட்டு வந்திருவேன் சார்.

சிரித்தபடியே…இன்டர்காமில் மேனேசரை அழைத்தான்.

இவங்க பேர் தமயந்தி. என்னுடைய பெர்சனல் செக்ரட்டரி. கெஸ்ட் அவுசில் உள்ள என் பிரைவேட் ரெஸ்ட் ரூமை இவங்க தங்கறதுக்கு ஏற்பாடு செய்யுங்க.
அதுமட்டுமில்ல…சமையலுக்கும் ஆட்களை நியமிச்சுருங்க.

மானேசர் சென்றவுடன் தற்சமயம் அங்கே தங்கும்மா..நல்ல வீடு கிடைச்சவுடன் உன் அம்மாவையும், மாமாவையும் கூட்டி வரலாம்.

இத்தனையும் ஏதோ கனவில் நடப்பது போல் தன்னையே மறந்தவளாக..தமயந்தி நின்றுக் கொண்டிருந்தாள்.

என்னம்மா திகைச்சு போயிட்ட…உனக்கு என்ன வேலை எவ்வளவு சம்பளம் கம்பெனியின் சட்டத்திட்டம் எல்லாம் நான் சொல்றேன். உனக்கு எந்த உதவி வேணுமின்னாலும் என்னிடம் தயங்காமல் கேளு” சரி உன் போன் நம்பர் என்னன்னு சொல் நோட் பண்ணிக்கிறேன்.”

அது வந்து….எங்கிட்ட செல்போனெல்லாம் இல்லை சார்….

ஓ…அப்படியா…சரி மீண்டும் மானேசரை வரச் சொல்லி.,ஒரு போனை உடனடியாக வாங்கிவரச் சொல்லி உத்தரவிடுகிறான் வேலு.

அப்போது டெலிபோன் ஒலிக்கிறது.

போனில் திவாகரன்.

சொல்லுங்க முதலாளி…

வேலு ஒரு குட் நியுஸ். அரவிந்த படிப்பை முடிச்சுட்டான். உன்னை பார்க்கணுமிங்கற  ஆசை அவனுக்குமிருக்கும்.நாளைக்கு பிளைட்ல வர்றான். கோயம்புத்தூருக்கு நீயே வந்து கூட்டிட்டுப் போ..அது சரி உனக்கு பி எ அப்பாயிமெண்ட் போட சொன்னேனே…என்னாச்சு,?

பி எ வை செலக்ட் பண்ணிட்டேன் முதலாளி. இதோ அவங்க என் ஆபிஸ்லத்தான் இருக்காங்க.

சரி…நான் அடுத்த வாரத்தில வர்ரேன்….

சரிங்க முதலாளி….வாங்க உங்களைப் பார்க்கணும் போல இருக்கு.

தொலைபேசி இணைப்பு  துண்டிக்கப்படுகிறது.

இவர்தாம்மா என் தெய்வம்…ம்…அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.

அப்போது மானேசர் உள்ளே வந்து புதிய செல்போனைக் கொடுத்தார்.

வாங்கி தன் நம்பரை பதிவு செய்து, போனை தமயந்தியிடம் கொடுத்தார் வேலு.

கடைசிக்கட்ட விறுவிறுப்புத் நெருங்கிவிட்டது...காத்திருங்கள்

]நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி (24)

மெல்ல மெல்ல தேறிய நடைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கும் மாமாவின் முன்னேற்றத்தில், தமயந்தியின் பங்கும் இருந்தது. ஓய்வில்லாமல் உழைத்து, மருந்து மாத்திரை மற்றும் உணவுக்கும் இல்லையென்ற நிலை யில்லாமல் உழைத்த ராசாத்தியையும் தமயந்தியையும்; நினைத்து முத்து ஒரு புறம் மகிழ்ச்சியும், மறுபுறம் கவலையும் பட்ட முத்துவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

இதை கவனித்த தமயந்தி “மாமா என்ன ஆச்சு ஏன் அழறீங்க?”

“அண்ணா என்ன இது இப்பத்தான் உடம்பு தேறி வருகிறது. எதுக்கு அழணும்? தமயந்தியும் ராசாத்தியும் மாறி மாறி கேள்விக் கேட்டார்கள்.

முத்து அமைதியாக “அழவில்லையம்மா..அனாதையாக நிற்க வேண்டிய எனக்கும் என் மகனுக்கும் வேண்டி எவ்வளவு கஸ்டப்படுகிறீர்கள். தமயந்தி படிப்பு போச்சு ராசாத்தி எப்படி இளைச்சுப் போயிட்டா?”

“மாமா என் படிப்பு ஒண்ணும் கெட்டு போகல. டைப்ரைட்டிங் சார்ட் ஹேண்ட் ரைட்டிங் இப்படி எல்லா கிளாஸ_ம் போயிட்டுத்தான் இருக்கேன். அது மட்டுமில்லாமல் கரஸல டிகிரியை கண்டினிu பண்ணீட்டுத்தான் இருக்கேன். ஏன் நீங்க கவலைப்;படறீங்க.”?

“அண்ணா நீங்க மட்டும் அன்னைக்கு என்னை காப்பாத்தியிருக்கலேனா கருவோடு கடலிலே செத்துப் போயிருப்போம். எங்களை காப்பாற்ற நீங்கள் பட்ட கஸடத்தை விடவா..?” என்றாள் ராசாத்தி.
“அது …அது” என்று முத்து முடிப்பதற்குள்…

“இது..இது இதுவும் எங்கள் கடமைதான் மாமா” என்று தமயந்தி சொல்ல, முத்து தன்னையும் அறியாமல் சிரித்தான்.

முத்துவின் மகன் பார்ட் டைம் வேலை செய்து தன் செலவை சரி செய்துக் கொண்டான்.அதே சமயம் அகடாமியிலும் சேர்ந்து அதிகம் கவனம் செய்து படித்ததன் விளைவாக..இன்று IPS யாக தேர்வாகியிருக்கிறான்.

இந்த மகிழ்ச்சியை தந்தை முத்து, அத்தை ராசாத்தி, தங்கை தமயந்தி ஆகியோருடன்,பகிர்ந்து கொண்டிருந்தான்.

தியாகு அத்தையின் காலில் விழ, தடுத்த ராசாத்தி “முதலில் அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குப்பா” என்றாள்.

“இல்ல ராசாத்தி உன் ஆசீர்வாதமும் உன் வளர்ப்பும்தான் தியாகுவை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. உன் காலில் விழட்டும்.”

“அடடே என்ன இது? அப்பா காலில் விழு, அவரு அத்தை காலில் விழுன்னுட்டு. நான் ஒருத்தி இங்கே குத்துக் கல்லாட்டம் இருக்கேன் ஏன் என் காலில்  விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டியதுதான,?”

தியாகு தமயந்தியை அடிக்க ஒட, வீடே கலகலப்பானது,

“அத்தே நான் ஐ ஏ எஸ் ஆகனும்தான் நினைச்சேன். ஆனால் ஐ பி எஸ் ஆகத்தான் முடிஞ்சது. அப்பா, தமயந்தி உங்களுக்கெல்லாம் இதுல ஏதாவது வருத்தம் இருக்கா?”

உடனே தமயந்தி “தியாகு அப்துல்கலாம் கூட ஏரொனேட்டிக்கல் படிச்சிட்டு வேலைக்கு போகணும்தான் ஆசைப்பட்டார். ஆனால் சயின்டிஸ்ட் ஆகததான் முடிஞ்சது. அதுதானே அவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையா இருந்தது. எந்த தொழிலையும் விரும்பி செய்தால் முன்னேற்றம் தானே வரும் என்பதற்கு அவரே சாட்சி;.”

ஆர்டர் வந்தது. தியாகு பயிற்சிக்கு சென்றுவிட்டான்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு.,

தமயந்தி ஒரு கடிதத்துடன் வந்து முத்துவிடமும் ராசாத்தியிடமும் காண்பித்து ஒரு நிபத்தனையைப் போட்டாள்.

“மாமா அம்மா நீங்க ரெண்டு பேரும் இந்த கடிதத்தில் வந்த செய்தியை செனான்னா எவ்வித மறுப்புமில்லாமல் தடை சொல்லாமல் என்னை வாழ்த்தணும். அப்படின்னா இதைப் படிக்கிறேன்.”

“என்னடீ புதிர் போடற, ? விசயத்தை சொல்லுடி வயித்தில நெருப்பைக் கொட்டாத..”

“ராசாத்தி என் மருமக சொக்கதங்கமாச்சே. எல்லாமே நல்ல விசயமாத்தான் இருக்கும். மறுப்பே சொல்ல மாட்டோம் விசயத்திற்கு வாம்மா..”

“மாமான்னா மாமாதான். திருப்ப+ர்ல ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில நேர்முக உதவியாளர் தேவைன்னு விளம்பரம் வந்திருந்து நான் அப்ளிகேசன் போட்டேனே.? அதுக்கு நேர்முகத்தேர்வுக்கு என்னை கூப்பிட்டு இருக்காங்க. நல்ல சம்பளம், வேலை கிடைச்சா நாமெல்லாம் அங்கேயே போயிடலாம். தியாகுக்கு நான் போன்ல சொல்லிட்டேன். முதல்ல வேணாம்னான். நிலைமையை புரிஞ்சுட்டு சரின்னு சொல்லிட்டான்.”

“என்னடி திருப்புரா,?” திகைத்தாள் ராசாத்தி.

“டிரைனிங் முடிஞ்சவுடன் தியாகு சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவான். அப்புறம் என்னம்மா? இல்லை மாமா? அம்மாவுக்கும் முதல்மாதிரி உடம்பு இப்போ யில்ல. வேலைக் கிடைத்து நான் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னால் அம்மா வேலைக்கு போக வேண்டாம். தியாகுக்கு டிரைனிங் முடிந்து போஸ்டிங் போடும்வரை நான் வேலைக்கு போறது தான் சரின்னுபடுது,”

சற்று நேரம் நிதானமாக யோசித்த முத்து “இண்டர்வியு தானே..இன்டர்வியுல்ல கட்டாயம் உனக்கு வேலை கிடைக்கும்…இருந்தாலும்…”..

“மாமா தயவுசெய்து என்னை தடுக்காதீங்க. உங்க மருமகள் எப்போது தடம்புரள மாட்டாள். இது சத்தியம் மாமா.

“என்னம்மா பெரிய வார்த்தை… சரியம்மா உன் இஸ்டம்” என்று முத்துவும் ராசாத்தியும் விருப்பம் இல்லாமல் சொன்னார்கள்.

“ஏண்டி நான் உன் கூட வரட்டா?:” என்றாள் தாய் ராசாத்தி.

“அப்போ மாமவை யார் பாத்துக்கிறது. நான் சின்ன குழந்தையா? கவலைப்படாதேம்மா”….என்றபடி  திருப்புர்க்கு பயணமானாள் தமயந்தி.

விறுவிறுப்புத்  தொடரும் .....
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி (23)

 கல்லூரியில் பிரின்ஸ்பால் தியாகுவிடம்….
“தியாகு காம்பஸில் பெரிய நிர்வாகம் உன்னை தேர்ந்தெடுத்ததில் எனககு சந்தோசம் தான். இருந்தாலும் உன் அறிவுக்கு IAS, IPS ன்றவற்றில் முயற்சி செய்தால் நிச்சயம் உன்னால் முடியும் என்ற எண்ணம் உண்டு படிப்பு விளையாடடு ஒழுக்கம் அத்தனையும் உன்னிடம்…”….

May I Come in Sir என்று குரலைக் கேட்ட பிரின்ஸ்பால் “வா தமயந்தி உங்க குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியும்.. இருந்தாலும் தியாகுவின் எதிர்காலம் IAS ஆக யிருந்தாலும்,”…

முடிப்பதற்குள் தமயந்தி “சார் என்னுடைய விருப்பமும்  அதுதான்”;

“வெரி குட் அக்டமெயில் சேர நான் ஏற்பாடு செய்கிறேன். லைப்ரரியில் வேண்டிய புக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். all the best.

தியாகு குழப்பத்துடனும், தமயந்தி மகிழ்ச்சியுடனும் வெளியே வந்தார்கள்.

இந்த நல்ல செய்தியை சொல்ல தியாகுவும், தமயந்தியும், பரின்ஸ்பால் அனுமதியுடன் முத்துவையும் ராசாத்திiயையும் பார்க்க ஊருக்கு வந்தார்கள்.
முத்துவின் வீட்டு கதவை தியாகு “அத்தே அத்தே” என்று தட்டினான்.

ராசாத்தி ஓடி வந்து கதவை திறந்து துக்கத்தை மறைத்துக் கொண்டு “வா தியாகு வாம்மா என்ன ஆஸ்டல்ல லீவா’? என்றபடி உள்ளே சென்றாள்.
அம்மா மாமா எங்கம்மா,?

ராசாத்தி மௌனமாகயிருந்தாள்.

“அத்தே அப்பா வேலைக்கு போயிட்டு இன்னும் வரலியா,?”

இந்த சப்தத்தைக் கேட்டு முத்து லேசாக இருமினார்

தமயந்தியும் தியாகுவும் உள்ளே சென்றார்கள்.

முத்துவின் நிலையைக் கண்ட இருவரும் கதிகலங்கி “என்ன மாமா ஆச்சு, அம்மா மாமாவுக்கு எப்படியம்மா இப்படியாச்சு..? சொல்லுங்கம்மா?”

“அப்பா என்னப்பா இது?”எப்படியப்பா ஆச்சு” என்று அழுதபடி கேட்டான் தியாகு.
“அம்மா மாமாவுக்கு இவ்வளவு ஆயிருக்கு. ஏம்மா எங்களுக்கு தெரியப்படுத்தல, ?”

“தமயந்தி உங்க அம்மா மேல குத்தமில்ல. நான் தான். உங்களுக்கு தெரிய வேண்டாம் படிப்பு கெட்டுடும்ன்னு சொல்லிட்டேன். இதொன்னும் பெரிய முறிவெல்லாம் இல்ல. ஒரு மாசத்தில் சரியாகிடும். அப்புறம் நடக்கலாம். நீங்க கவலைப் படாம படிக்க மட்டும் செய்யுங்க.”

“எப்படிப்பா முடியும். இந்த நிலைமையில் உங்கள விட்டுட்டு’? என்றான் தியாகு.

“ஆமா மாமா இனி நான் காலேஜ் போறதில்லை”.

“என்னம்மா சொல்லறே?”.

“சொல்லறதுக்கு ஒண்ணுமில்ல. மாமா. அம்மா நீ வீட்டு வேலைக்குப் போ. நான் பக்கத்திலே யிருந்து மாமாவை பாhத்துக்கிறேன்.”
“தமயந்தி உனக்கொன்ன பைத்தியமா, நான் கேம்பஸ்லே செலக்ட் ஆயிருக்கேன். நான் வேலைக்குப் போய் குடும்பத்தை நான் பாத்துக்கிறேன.; நீ காலேஜ் போ அத்தே நீங்க வேலைக்கு போக வேண்டாம்.’

உரிமையுடன் தமயந்தி தியாகுவைப்பார்த்து, “தியாகு தன் பிரின்ஸ்பால் சொன்னதை மறந்திட்டாயா? ஆகடாமி கோச்சிங்க்கு போ. கலெக்டர் கனவை மறந்துடாதே…நான் சார்ட் ஹேண்ட், கம்பியுட்டர்ன்னு ஏதாவது ஒரு கோர்ஸ் ஒரு மணி நேரம் போய் படிக்கிறேன். வேணுமின்னா கரஸ்ல டிகிரி முடிக்கிறேன். இதிலே எந்த மாற்றமுமில்லை. இந்த முடிவே மாற்ற நீங்க எல்லாம் நினைச்சாலும் முடியவே முடியாது. என்று சொல்லி முடித்த தமயந்தியைப் பார்த்து விக்கித்து நின்றனர் மூவரும்.

விறுவிறுப்புத்  தொடரும் .....

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, March 16, 2013

என்ன செய்யும் இந்த காலவரையற்ற விடுமுறை??



எது நினைத்தோமோ அது நடந்துவிட்டது.

போராட்டக் களத்தில் குதித்திருக்கும் மாணவர்களை திசைதிருப்ப இந்த அரசு காலவரையற்ற கல்லூரி விடுமுறையை அறிவித்திருக்கிறது.

அப்படித்தான் செய்ய முடியும். 3 நாட்களுக்கு மேலாக மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லையென்றால் கல்லூரி மறு அறிவிப்பு வரும்வரை மூடப்பட வேண்டும் என்பது சட்டம். என்பதும் ஒரு சிலர் சொல்லும் கருத்து.

எது எப்படியோ….நீங்களும் போராட்டத்தை ஒடுக்க,  அவர்களை விடுமுறை என்ற அற்ப நாட்களை அனுபவிக்க ஆசைக்காட்டி மாணவ தோழர்களை திசைதிருப்பச் செய்திருப்பது என்பது வேதனையளிக்கிறது.

ஆம். நீங்களும் இந்த இனத்திலே பிறந்தவர்கள்தான். எங்களுக்கு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஊட்டிய நம் முப்பாட்டன்கள்தான் உங்களுக்கும் ஊட்டியிருக்கிறார்கள்.

போராட்டத்தை தீவிரப்படுத்தி அதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்து அதன் மூலம் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு தீர்வு காண்பதுதான் உண்மையான புத்திசாலித்தனம்.
ஆனால் தேர்தலுக்காகவே ஈழப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு, அதன் மூலம் அப்போதைக்கு குளிர்க்காய்ந்து, அப்போதே மறந்துவிடும் ஈனப்பொழப்பை நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகள்தான் இதுவரைக்கும் இந்த தமிழகத்தில் இருந்துக் கொண்டிருக்கின்றன.

அது எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி;. வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெருமழையாக பொழியவிருக்கிற இந்த மாணவ சமுதாயத்தின் போராட்டத்தை ஒரு போதும் உங்கள் அரசியல் சிறு மழைத்தூரலாக சுருக்கிவிடும் என்று நினைத்துவிடாதீர்கள்.

எப்போதாவது ஒரு தடவைத்தான் இது போன்ற அதியசயங்கள் நிகழ்கின்றன. ஆம்…1960 களுக்கு பிறகு மாணவர் கூட்டமைப்பு, இந்த அளவுக்கு மிக எழுச்சியோடு கூடியதில்லை.

சாதாரணமாக கூடி, பின் ஏதோ சந்தித்தோம். பிறகு பிரிந்தோம் என்றில்லாமல் ஏதாவது ஒரு தாக்கத்தை இந்த போராட்டத்தின் மூலம் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற  கொள்கையோடு, உணர்ச்சி வசப்பட்டு இப்போது குழுமியிருக்கிறார்கள்.

தயவு செய்து போராட்டத்தை தண்ணீர் ஊற்றி அணைத்து விடலாம் என்று கனவில் கூட நினைக்காதீர்கள்.

இது நம் சகோதர சகோதரிகளுக்காக, நாம் பேசும் மொழியின் அடையாளத்தை தாங்கி நிற்கின்ற எம் இன மக்களுக்காக எந்த தன் நோக்கத்திற்காகவும் இல்லாமல், முற்றிலும் அவர்களுக்காக நடைபெறும் போராட்டம்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்….

உணவை மறுத்து, நீர் கூட அருந்தாமல், பசி தூக்கம் மறந்து, மாணவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன தோழர்களே..?

யாரோ அழிந்தார்கள். அது வேற நாடு…நாம் இங்கே சுகமாகத்தான் இருக்கிறோம். என்று மாணவர்கள் நினைக்கவில்லை.

 எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் மனித நேயத்திற்காகவும், இன பாசத்திற்காகவும் போராடுகிறார்கள்.

இன்றைக்கும் நடைபெறுகிறது. போராட்டம். 

பின்வாங்காமல் முழு மூச்சோடு இன்னும் எம் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். 

கால வரையற்ற விடுமுறையை போராட்டத்திற்கு எம் தங்கங்கள் மடைமாற்றியிருக்கிறார்கள்.

அரசுக்கு நன்றி.







நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, March 14, 2013

தமிழர்களே….. தமிழர்களே…பிச்சைக் கேட்கிறோம்.




மாணவர் போராட்டம்,

மனதிற்கு ஒரு புது தெம்பை கொடுத்துக் கொண்டிருக்கிற போராட்டம்,

கட்சி சாயமில்லாமல் எந்த பலாபலனும் எதிர்பார்க்காமல் உணர்ச்சியாய் திரண்டிருக்கிற இளைய படை. 

கல்வி கற்கும் நேரத்திலும் களமாட இறங்கியிருக்கும் இனமான படை.

வாழ்த்துகிறேன்,

செந்தமிழன் முத்துக்குமார் எந்த நோக்கத்திற்காக, தன் பூவுடலை தீக் கொண்டு எரித்தானோ.! 

இதுவரையில் தன் மக்களை, மகன்களை துப்பாக்கி ரவைகளுக்கு தலைவன் பிரபாகரன் விட்டுக் கொடுத்தானோ..!

இதுநடந்தே தீர வேண்டும் என்று சாமனிய தமிழனும் நினைத்துக் கொண்டிருக்கும் ஈழம் இதோ உங்களால் மலரப் போகிறது.

2013 ம் ஆண்டிலிருந்த மாணவ சமுதாயம் தான், ஈழத்தை இலங்கையிலிருந்து பிரித்துக் கொடுத்தது என்கிற வரலாறு எழுதப்படவிருக்கறது.

மாணவத் தோழர்களே..!

தென்றலாய் இருந்த உங்களை மாபெரும் புயலாக, குழந்தை பாலாவின் மரண புகைப்படம் உங்களை மாற்றியிருக்கிறது.

பூவுக்குள் ஒரு பூகம்பம் புதைந்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிய வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கரிக்கட்டைப் போல் வெந்தும் வேகாமலும் கிடந்த, நம் தமிழினத்தின் ஒவ்வொரு உடம்பின் மீதிருந்தும் வரும் புகையும் நம்மை மூச்சு திணர வைத்திருக்கிறது என்பதுதானே உண்மை.

ஆம்….

நடந்தது போரல்ல…இனபடுகொலை.

ஹிட்லருக்குப் பிறகு, இந்த உலகத்தில் நடந்த மாபெரும் இனபடுகொலை, இலங்கையின் ராஜபக்சே வால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

உலகத்தின் மிகவும் அறிவார்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட யூதர் களை அவன் அழித்தான்.

இப்போது அறிவை மட்டுமே வரங்களாகவும், சாபங்களாகவும் பெற்ற தமிழர்களை இவன் அழித்திருக்கிறான்.

ஒரு சின்ன துரும்பில் கூட தமிழிருக்கக் கூடாது. இலங்கை சிங்களவனுக்குத்தான். எந்த வடிவில் தமிழிருந்தாலும் சாம்பல் கூட மிஞ்சாமல் பொசுக்கிவிடுங்கள். -இதுதான் ராஜபக்சே தன் ராணுவத்திற்கு இட்டக் கட்டளை.

நடந்தது. அவன் சொன்னது எல்லாம் நடந்தது.
தமிழர்களின் நரம்புகள் உருவப்பட்டன.

பெண்களின் குறிகள் துப்பாக்கிக் கொண்டு சிதைக்கப்பட்டன.
மார்பகங்கள் கத்தியால் அறுக்கப்பட்டன.

கர்ப்பிணிகள் வயிறு கிழிக்கப்பட்டு, சிசுவின் தலையை கொய்து எறிந்தனர்.
குழந்தையின் தலையில் மூளைகள் சிதறடிக்கப்பட்டன.

இவையெல்லாம் படுகொலை இல்லை தோழர்களே...கொடுங்கொலை.

இதையெல்லாம் பார்த்தபின்னும் வெகுண்டெழ முடியாமல், கோழைகளாய் வீட்டு மூலையில் 4 ஆண்டுகளாக பக்கவாதம் வந்து படுத்தே கிடந்திருக்கிறோம்.

ஆனால் லயோலா மாணவர்கள் உண்டாக்கிய பொறி இன்றைக்கு காட்டுத்தீப் போல் தமிழகம் முழுக்க மளமளவென்று, பரவிக் கொண்டிருக்கிறது.


நீதிக் கேட்டு மன்னனின் கூடல் நகரையே தீயால் பொசுக்கிக் காட்டிய கண்ணகி வாழ்ந்த இனம் தமிழினம். அவள்; செய்தது போலவே இந்த நெருப்பும், நியாயம் கேட்டு, கனல்களைக் கக்கத்தான் போகிறது.


மானமுள்ள தமிழர்களே..,!

வேடிக்கைப் பார்த்து விட்டு சம்மந்தமேயில்லாமல் நழுவுவது நியாயமா,?

யாரோ கொல்லப்பட்டதற்கு, இவன் எதற்கு உண்ணாவிரதம் இருக்கிறான் என்று பசையற்ற வார்த்தைகளை உதிர்ப்பது தகுமா…?

அடிமைகளாய் வாழ்வதே தனது அடையாளமாய் ஆக்கிக் கொண்ட தமிழனாய்…..
குட்டக்குட்ட குனிந்து குனிந்து தன் முதுகெழும்பையும், உடைத்துக் கொண்ட தமிழனாய்…..
இருக்கும் நாம்…நமது இனம் சார்ந்த அடையாளங்களை மீட்டெடுப்பது என்பது வரலாறு தெரியாமல் வராது.

எனக்கென்ன என்று இருக்;கும் தமிழர்களே…!

உங்களுக்குத் தெரியுமா..?

ஒரு குழந்தை, இறந்து பிறந்தாலும் வாளால் அவன் உடம்பைக் கீறித்தான் மீண்டும் மண்ணிற்குள் புதைப்பார்களாம்…!

வீரர்களாய் இந்த மண்ணில் வாழ்ந்து, நாட்டிற்காக, தன் இனத்திற்காக எதையாவது தன் சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைத்தவன் தமிழன்.

போருக்குச் செல்லும் போது கூட, பசுக்களை, ஆடுகளை, அந்தணர்களை, கர்ப்பிணிகளை, பெண்களை, குழந்தைகளை, வயதானவர்களை எல்லாம் விலகிப் போகச் சொல்லிவிட்டு, நேருக்கு நேராய் நிற்கும் தனக்குச் சமமான வீரர்களின் நெஞ்சுக்குத்தான் தன் வாளை குறி வைப்பான்.

மனிதாபிமானமும், மனிதநேயமும், கருவாய் உருவாகும் போதே இவன் உதிரத்தில் கலக்கப்பட்டு விடுகிறது.அன்பையும், காதலையும் அதிகமாக நேசிப்பான். அதிகம் உணர்ச்சிவசப்படுவான். 

நேர்மைக்காகவும், நீதிக்காகவும், தன் இனத்திற்காகவும், மொழிக்காகவும் உயிரைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவான்.

இப்படியிருந்தவன் தான், இன்றைக்கு காலம் போட்ட கிறுக்கு கோட்டில், நேராக நடக்கத்தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறான். யாராவது நில் என்று உரக்க சப்தம் போட்டால் பயந்து போய்விடுவான்.

வயிறை வளர்ப்பதற்காக மட்டுமே தன் மானத்தை விலை பேசுகிறான். யாருக்கு எது நடந்தாலும் என்ன என்று திரும்பி நின்று கேட்கிற தமிழன், தன் இனத்திற்காக கேள்வி கேட்பதை வீண் என்று நினைக்கிறான்.

கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் தோழர்களே…!

நம் வீட்டில் நியாமற்ற முறையில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் நாம் வாய் மூடிக் கொண்டு மவுனமாகவா இருப்போம்,?

நம் சகோதரியை யாராவது வன் கொடுமைக்கு ஆளாக்கினால் கைக்கட்டி நின்று வேடிக்கையா பார்ப்போம்,?

அங்கே கொத்துக் கொத்தாய் இறந்து கிடந்தது நம் தொப்புள் கொடி உறவுகள்.

நாம் பேசும் மொழியின் அடையாளங்களை தாங்கி நிற்கின்ற நம் சகோதர சகோதரிகள்.

அதற்காக இல்லாவிட்டாலும், ஒரு சாதாரண மனிதனாகவாவது இருந்து, மனிதநேயத்திற்காக நீங்கள் உங்கள் கண்டனத்தை தெரிவிக்கக் கூடாதா?

தயவுசெய்து இந்த கட்டுரையைப் படிக்கும் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும், உடனே புறப்படுங்கள்.

உண்ணா விரத பந்தலிலே உயிரை பணயம் வைத்து,போராடி கொண்டிருக்கும் நம் மாணவத்தம்பிகளை வாழ்த்துங்கள். உங்கள் ஆதரவில் நாம் வைத்திருக்கும் போராட்டம் வெற்றி பெறும்.

உங்களிடம் நாங்கள் கேட்பதெல்லாம் இந்த பிச்சைத்தான்.







நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, March 13, 2013

சட்டத்தின் படி 22 தொடர்கதை

சட்டத்தின் படி 22 தொடர்கதை 
 
தியாகு படிப்பை முடித்துவிட்டான். நல்ல வேலைக்கும் சென்று சேர்ந்துவிட்டான்.

ஒருநாள் முத்துவை ஆட்டோவிலிருந்து இரண்டு பேர் கைத்தாங்கலாக இறக்கிவிட்டு, அம்மா அம்மா என்று கத்தினார்கள். கதவை திறந்த ராசாத்தி, முத்துவின் கால் கட்டை பார்த்து அண்ணா என்னண்னா இது? என்ற படி கத்தினாள்.

வந்தவர்கள் சொன்னார்கள்.பாரம் ஏற்றி கொண்டிருக்கும் போது லாரியிலிருந்து கால் தவறி கீழே விழுந்துட்டார். பெரிசா ஒண்ணுமில்ல ராசாத்தி. சின்ன காயம்தான். என்றான் முத்து.

முதல் நபர் “இல்லைம்மா வந்து….”

“சொல்லுங்கண்ணே என்னண்ணே ஆச்சு?” பதறினாள் ராசாத்தி.

“கால் முறிஞ்சி போய் கட்டு போட்டு விட்டு வந்திருக்கோம்.”

“அப்படியொன்னும் கவலை படற அளவுல இல்லைங்க…ஆனா ரெண்டு மாசம் படுக்கையில் இருக்கணும்.இந்தாம்மா மருந்து மாத்திரை. எங்க போர்டர் ய+னியன் நிச்சயம் உதவிசெய்யும். இந்தா பணத்தை தற்சமயம் செலவுக்கு வைச்சுக்கோங்க.”

பிரமை பிடித்தவள் போல் தலையை மட்டும் ஆட்டினாள் ராசாத்தி.
 
தொடரும் 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி (21)

சட்டத்தின் படி (21)

என்னதான் பெருங்காயம் போட்ட பானையை கடல் நீரில் டெட்டால் போட்டு கழுவினாலும் அந்த பெருங்காயம் மணம் போகாது என்று சொல்லுவார்களே…அதைப்போல் தான் திவாகரனின் கண்டிப்பு வேலுவின் படிப்பை மட்டுமே சீர் செய்ய முடிந்ததே தவிர அவனது ஒழுக்கத்தை சரி செய்ய முடியவில்லை.

இப்போது திவாகரன் அவனுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை நிறுத்தியதன் விளைவு அவருடைய கம்பெனியில் வேலை செய்து, அதன் மூலம் பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான்.

அதுவும் திவாகரனுடைய மகன் மேற்பார்வையில் உள்ள கம்பெனியில் அரவிந்த் வேலை செய்தான்.

திவாகரனின் மகன் பிறந்த ஒரு வருடத்தில் அவன் மனைவி காலமாகிவிட்டாள். அதன் பிறகு தன் கம்பெனியை அமெரிக்காவில் ஆரம்பித்த நேரத்தில் அவன் மகனும் அமெரிக்காவில் குடியேறிவிட்டான். நல்ல பண்பாட்டை கட்டிக்காக்கும் தனயனாக, திவாகரனின் பிள்ளை வளர்ந்தான்.

தன் மகனைப் போலத்தான் வேலுவின் மகனையும் உருவாக்க நினைத்தார். ஆனால் அது முடியவில்லை.

எப்படியோ இருக்கட்டும் எப்படியோ நடக்கட்டும் என்றிருக்க திவாகரனுக்கு மனமில்லை. தப்படியை திருத்தாமல் தள்ளி வைக்க மனமுமில்லாமல் இவர் மனதில் ஒரு உறுதி எடுத்தார்.

அரவிந்தனுடைய அறையில் நுழைந்த திவாகரன் தற்செயலாக பார்வையை மேஜை மீதுள்ள கடிதத்தை பார்த்தார். காலடி சப்தம் கேட்டு அவசரமாக ஒடி வந்த அரவிந்த கடிதத்தை எடுக்க முயற்சிக்கையில்

“என்ன முக்கியமானதா,? இல்லை ரகசியம் நிறைந்ததா,? ஆனால் நிச்சயமா பாட சம்பந்தப்பட்டதோ வாழ்க்கைக்கு தேவையான விசயமோ இருக்காது…ம்?”

அரவிந்த திருட்டு முழி விழிக்க ..

“கொண்டா நான் படிக்கக் கூடாதுன்ன வேண்டாம்..என்னன்னு மட்டும் தெரிஞ்சுக்கலாமா, ?”

நெஞ்சு படபடக்க முத்து முத்தாய் வியர்க்க அரவிந்த்…

“என்னப்பா படிக்கவா?”

அரவிந்த் தன்னையும் அறியாமல் தலையை அசைத்தான்.

அழகான ஆங்கிலத்தில் தவறான கவிதை…பெண்ணை வர்ணித்து எழுதியிருந்தான் அரவிந்த்.

“இன்னும் ஒரு வருசத்தில உன் படிப்பு முடிஞ்சுடும். அதுவரைக்கும் இதெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வை. உங்கப்பாக்கிட்ட கொஞ்சம் பேசணும். லைன் போட்டுக் கொடு.”

அரவிந்த் வெலவெலத்து போனான்.

“ம்…சீக்கிரம்.” என அவசரப்படுத்தினான்  திவாகரன்.

தொடரும் 
 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி (20)


 சட்டத்தின் படி (20)

முத்துவின் மகன் பள்ளி இறுதி தேர்வில் முதலிடம் பெற்றமைக்கு பாராட்டோடு கருணை உள்ளத்துடன் கல்லூரியில் கட்டணம் எதுவுமின்றி சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
ராசத்திக்கும் முத்துவிற்கும் சொல்லி மாளாத மகிழ்ச்சி.
“தியாகு உன்னை வளர்க்கறப்போ ஒவ்வொரு நாளும் நான் சந்தோசமா இருந்ததைவிட கவலைப் பட்டதுதான் அதிகம்.”
முத்து தியாகு தமயந்தி எல்லோரும் ராசாத்தியை ஆச்சிரியமாக பார்த்தார்கள்.
என்ன எல்லோரும் அப்படிப் பார்க்கிறிங்க,?
எங்கே என் வளர்ப்பிலே தப்பு வந்திடுமோ என்ற பயம். செடி கொடி மரத்தை வளர்க்கின்ற போது கூட ஒழுங்கா தண்ணி ஊத்தனும், எரு போடணும். இல்லைன்னா அது பட்டுப் போய்விடும். உன்னை சில நேரம் கண்டிச்சுயிருக்கேன். பின்னாடி நான் அழுதுமிருக்கேன். இப்போவும் அழுகிறேன். சுந்தோசத்தில.”
“அத்தை என் தாய் உயிருடன் இருந்திருந்தால் கூட என்னை இப்படி வளர்த்திருப்பாங்களோ என்னவோ..சந்தேகம் தான”;. ஏன்றான் தியாகு.
“ராசாத்தி… பானு இறந்தது எனக்கு பெரும் துக்கம் தான.; இந்த துக்கம் வருசக் கணக்கா இலர்லை மாசக் கணக்கா மட்டுமே இருந்தது. என் மருமகள் தமயந்தியை பள்ளியில பாராட்டின அப்ப நான் எப்படி சந்தோசமா இருந்தேன் தெரியுமா,?” ஏன்று முத்து ராசாத்தி மகள் தமயந்தியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாhன்.
“அத்தை நம்ம தமயந்தி  ப்ளஸ் டுவில் கட்டாயம்  மாநிலத்தில் முதலாவதாக வருவா. கட்டாயம் அவளுக்கும் என்னை போலவே கல்லூரியில் கட்டணமில்லாமல் இடம் கிடைக்கும்.”
“என்னமோப்பா எல்லாம் கடவுள் செயல். உங்க அம்மா பானுவின் ஆசீர்வாதம். நீங்க படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போய் சம்பாதிருச்சு அண்ணனை வீட்டோடு வைச்சு பார்த்தா போதும்”
“ஏ அத்தை பிரிச்சு பேசறீங்க. உங்களையும் காப்பாத்த வேண்டியது என் பொறுப்புத்தானே.?”
“அப்போ நான் அனாதையா”? என்று சிறிது வருத்தத்துடன் கூறினாள் தமயந்தி.
“அட என் செல்லமே இந்த மாமா உயிருடன் இருக்கும் வரை நீ அனாதையில்லம்மமா” நீ என் தங்கைச்சி பிள்ளை. முட்டுமில்லஃ என் மகளும் நீதான்னம்மா.” ஏன்றான் முத்து.
“எனக்கு நெனைவு தெரிந்ததிலிருந்து மாமான்னு உறவு யிருந்தாலும், பெத்த தகப்பன் மாதிரி தானே பாத்துக்கிறீங்க. அதனால என்னவோ என் அப்பாவைப் பற்றியோ , தொலைஞ்ச அண்ணனை பற்றியோ இதுவரை நான் கேட்டதில்லை” என்றாள் தமயந்தி.
கொஞ்சம் பொறுங்க. இன்னும் நாலு வருசம்…அப்புறம் உங்களை நாங்கப் பாத்துக்குறோம்.

தொடரும் 
 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, March 12, 2013

சட்டத்தின் படி (19)

சட்டத்தின் படி (19)

வேலுவின் கவலையெல்லாம் தன் மகன் அரவிந்தனுடைய செய்கையிலும் செயலிலும் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் தன்னை இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வந்த முதலாளி திவாகரன் முன்னால் தலைகுனிவு ஏற்பட்டால் அய்யோ நினைக்கவே பயமாகயிருந்தது. உடம்பு வேர்த்தது. தண்ணீரை குடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

உடனே ஏதோ நினைத்தவராக தன் மகனை தொடர்புக் கொண்டார்.

"அரவிந்த் நான் தானப்பா…"

"சொல்லுங்கப்பா"

"இப்போ நீ சாப்பிடறது உடுக்கிறது படிக்கிறது எல்லாம் என்னுடைய பணமில்லை. அவரு உனக்கு சொந்த பந்தமில்லை."

"புரியுது சொல்லுங்க."

"அவர் நமக்கு கடவுள் மாதிரி… அவருடைய பெயருக்கு களங்கம் வந்திரக்கூடாது."

அரவிந்தனுக்கு தான் செய்த தவறு டிரைவர் மூலம் அப்பாவுக்கு தெரிந்திருக்குமோ என்று சந்தேகம் அப்பிக் கொண்டது.

"அப்பா உங்க மனசிலே யாரோ என்னைப் பற்றி தவறா….."

"தவறா? மற்றவர்கள் சொல்லுமளவிற்கு செய்திருந்தால் திருத்திக் கொள். மற்றவர் தவறை கண்டு பிடித்து திருத்தும் நிலையில் நானும் நீயும் இருக்க வேண்டுமே தவிர தவறை மூடி மறைக்கும் நிலை நீடித்தால் புற்று நோய்க்கு வெண்சாமறம் வீசியதாகத்தான் முடியும். புடிப்பில் கூர்மையான கவனிப்பு மட்டும் இப்போதைக்கு உனக்குத் தேவை. இருக்கின்ற, படிக்கிற இடத்தின் பழக்க வழக்கங்கள் வேறு மாதிரி. பார்த்து நடந்துக்கோ. தேவையற்ற செலவு உன்னை பெரும் சுமைக்கு ஆளாக்கும்…பார்த்து நடந்துக்கோ."

வேலு-அரவிந்த் பேச்சு துண்டிக்கப்படுகிறது.




எவ்வளவு முயற்சி செய்தும் தன்னை தானே கட்டுப்படுத்தாத நிலைமைக்கு ஆளாகிறான் அரவிந்தத்;. மேலை நாட்டு கூட நட்பு மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு தன்னை தானே வருந்தி விரும்பி நேசித்ததன் விளைவு.
அப்போது உள்ளே வந்தார் திவாகரன்.

"டேய் அரவிந்த் உன் மனசுல என்ன நெனச்சிகிட்டு இருக்க,? நம்ம ஊரல இருந்த கெட்டு போயிருவேன்னு நெனச்சு என் கண்காணிப்புலே இருந்த ஒருங்கா வருவேன்னு நெனச்சேன். ஆனா நீ நைட் கிளப் இது இதுன்னு அசிங்கபடுத்தறயே? உன்னை நல்லா படிக்க வைச்சு இங்கேயிருக்கிற நம்ம கம்பெனியை உங்கிட்ட ஒப்படைக்கலாம் ன்கிறது தான் என் திட்டம் இதுலே மண்ணை போட்டறாதேடா."

"உங்கப்பாவுக்கு நான் கொடுத்த வாக்கை நான் காப்பாத்தணும் இன்னும் கொஞ்ச வருசத்திலே உன் படிப்பு முடிஞ்சுரும். அதுவரை இந்த பழக்கத்தை யெல்hம் மூட்டை கட்டி வை. எம் பையனும் தாண்டா தாயில்லா பையன். ஆனா இவன் ச்சே அவனோட உன்னை கம்பேர் பண்ண விரும்பல. உங்க அப்பா வோடு உன்னை பண்ணிப் பார். இல்லை படிக்க விரும்பவில்லைன்னா இந்தியா  போக ஏற்பாடு பண்ணறேன். பதில் உடனே வேண்டாம் காலையில சொன்னா போதும் " என்று நிதானமாக சொன்னார் ; திவாகர்;

தொடரும்
 


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.