சுட சுட செய்திகள்

Tuesday, March 12, 2013

சட்டத்தின் படி (19)

சட்டத்தின் படி (19)

வேலுவின் கவலையெல்லாம் தன் மகன் அரவிந்தனுடைய செய்கையிலும் செயலிலும் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் தன்னை இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வந்த முதலாளி திவாகரன் முன்னால் தலைகுனிவு ஏற்பட்டால் அய்யோ நினைக்கவே பயமாகயிருந்தது. உடம்பு வேர்த்தது. தண்ணீரை குடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

உடனே ஏதோ நினைத்தவராக தன் மகனை தொடர்புக் கொண்டார்.

"அரவிந்த் நான் தானப்பா…"

"சொல்லுங்கப்பா"

"இப்போ நீ சாப்பிடறது உடுக்கிறது படிக்கிறது எல்லாம் என்னுடைய பணமில்லை. அவரு உனக்கு சொந்த பந்தமில்லை."

"புரியுது சொல்லுங்க."

"அவர் நமக்கு கடவுள் மாதிரி… அவருடைய பெயருக்கு களங்கம் வந்திரக்கூடாது."

அரவிந்தனுக்கு தான் செய்த தவறு டிரைவர் மூலம் அப்பாவுக்கு தெரிந்திருக்குமோ என்று சந்தேகம் அப்பிக் கொண்டது.

"அப்பா உங்க மனசிலே யாரோ என்னைப் பற்றி தவறா….."

"தவறா? மற்றவர்கள் சொல்லுமளவிற்கு செய்திருந்தால் திருத்திக் கொள். மற்றவர் தவறை கண்டு பிடித்து திருத்தும் நிலையில் நானும் நீயும் இருக்க வேண்டுமே தவிர தவறை மூடி மறைக்கும் நிலை நீடித்தால் புற்று நோய்க்கு வெண்சாமறம் வீசியதாகத்தான் முடியும். புடிப்பில் கூர்மையான கவனிப்பு மட்டும் இப்போதைக்கு உனக்குத் தேவை. இருக்கின்ற, படிக்கிற இடத்தின் பழக்க வழக்கங்கள் வேறு மாதிரி. பார்த்து நடந்துக்கோ. தேவையற்ற செலவு உன்னை பெரும் சுமைக்கு ஆளாக்கும்…பார்த்து நடந்துக்கோ."

வேலு-அரவிந்த் பேச்சு துண்டிக்கப்படுகிறது.




எவ்வளவு முயற்சி செய்தும் தன்னை தானே கட்டுப்படுத்தாத நிலைமைக்கு ஆளாகிறான் அரவிந்தத்;. மேலை நாட்டு கூட நட்பு மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு தன்னை தானே வருந்தி விரும்பி நேசித்ததன் விளைவு.
அப்போது உள்ளே வந்தார் திவாகரன்.

"டேய் அரவிந்த் உன் மனசுல என்ன நெனச்சிகிட்டு இருக்க,? நம்ம ஊரல இருந்த கெட்டு போயிருவேன்னு நெனச்சு என் கண்காணிப்புலே இருந்த ஒருங்கா வருவேன்னு நெனச்சேன். ஆனா நீ நைட் கிளப் இது இதுன்னு அசிங்கபடுத்தறயே? உன்னை நல்லா படிக்க வைச்சு இங்கேயிருக்கிற நம்ம கம்பெனியை உங்கிட்ட ஒப்படைக்கலாம் ன்கிறது தான் என் திட்டம் இதுலே மண்ணை போட்டறாதேடா."

"உங்கப்பாவுக்கு நான் கொடுத்த வாக்கை நான் காப்பாத்தணும் இன்னும் கொஞ்ச வருசத்திலே உன் படிப்பு முடிஞ்சுரும். அதுவரை இந்த பழக்கத்தை யெல்hம் மூட்டை கட்டி வை. எம் பையனும் தாண்டா தாயில்லா பையன். ஆனா இவன் ச்சே அவனோட உன்னை கம்பேர் பண்ண விரும்பல. உங்க அப்பா வோடு உன்னை பண்ணிப் பார். இல்லை படிக்க விரும்பவில்லைன்னா இந்தியா  போக ஏற்பாடு பண்ணறேன். பதில் உடனே வேண்டாம் காலையில சொன்னா போதும் " என்று நிதானமாக சொன்னார் ; திவாகர்;

தொடரும்
 


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: