சுட சுட செய்திகள்

Tuesday, December 23, 2008

மெல்ல தமிழ் இனி சாகும்?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த நம் தமிழ் குடி... அழிந்து கொண்டு இருக்கிறதா..?ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்களாய் நம் முன்னோர்கள் கட்டி காத்து வந்த அந்த தமிழினத்தின் தன்மானம் எங்கே..? கலாச்சாரம் எங்கே? தமிழன் எங்கே..? அவன் இப்போது அயல் நாட்டில் கணினி முன் தவம் கிடக்கிறான்.தமிழ் தன் நாவில் தெரியாமல் வந்து அமர்ந்ததால் லேசாக நாக்கை கடிக்கிறான்... உலகத்தின் மிக பழமையான ஆறு மொழிகளில் (ஈப்ரு, லத்தின், கிரேக்கம், சமஸ்கிருதம், சீனா, தமிழ்) தமிழ் தானே...இன்றைக்கும் பேசும் மொழியாக வலம் வந்து கொண்டு இருக்கிறது... எத்தனை படை எடுப்புக்கள் நடந்த போதிலும் தன் நிலை மாறாமல் நடை போடுகிறது.என்றாலும் தமிழன் ஆங்கிலத்தின் மானத்தை காப்பாற்ற தன் கோவணத்தை அவிழ்த்து கொடுத்து கொண்டு இருக்கிறான். தமிழன் தன் தாய் நாட்டை தவிக்க விட்டு போனதால் இன்று தமிழகம் ஒரு அகதிகள் முகாமாய்...தமிழனை தவிர இந்த பாவப்பட்ட நாட்டில் மற்றவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான்... தன் சொந்த சகோதரர்கள் பக்கத்து நாட்டில் அடிபட்டு சாகும் போதும்...அதை கண்டு கண்ணீர் வடிக்க , தட்டி கேட்க ஒரு நாதியில்லை இந்த நாட்டில். தமிழனின் அடையாளமான வீரம் எங்கே..? மானம் எங்கே? வீரம் இன்று வன்முறைக்குள் அடங்கி விட்டது... மானம் காமத்திற்குள் புகுந்து விட்டது. அன்னையை தமிழ் வாயால் மம்மி என்று அழைக்கிறான்.அழகு குழந்தையை பேபி என்று அழைக்கிறான்..தந்தையை டாடி என்றான்.. இன்னுயிர் தமிழை கொன்று புதைத்தான்.. மதத்தை பரப்ப வந்த கால்டு வெல்லுக்கும, ஜி.யு. போபுக்கும் தமிழின் மேன்மை தெரிந்து இருக்கிறது...அதனால் தான்..அவர்கள் தெம்பா வதனி யையும் ,படைத்தார்கள். திருக்குறளையும் மொழி பெயர்த்தார்கள். ஆனால் தமிழன் மொழியை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டேன் என்கிறான். தமிழில் பேசி என்ன சாதிக்க முடியும் என்கிறான்...ஹிட்லர் சொல்லுவான்..."ஒரு நாட்டை பிடிக்க ரானுபம் தேவை இல்லை...கத்தியும்,துப்பாக்கியும் தேவை இல்லை. அவன் தாய் மொழியை அளித்தால் அவன் கலாச்சாரம் அழியும், அடையாளம் மறையும்,இனம் அழியும்,கடைசியில் தலைவனே இல்லாமல் நாடே அழியும்.." .இந்த அடிப்படையில் தான் வெள்ளையர்கள் நாட்டை பிடித்தார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக அவன் மொழியை இடையில் புகுத்துவார்கள்.கடைசியில் மொழி அழிந்து, இனம் அழிந்து, நாடே அழிந்து அவனுக்கு கீழ் அடிமை யாகும்.அப்படித்தான் பல நாடுகள் அழிந்தன..பல மொழிகள் அழிந்தன. அதுதான் இப்போது அச்சமே. ஒருவேளை எல்லோருமே தமிழை புறக்கணித்தால் தமிழனின் அடையாளம் எதிர்காலத்தில் இருக்குமா..? நம் தமிழினத்தை கட்டி காத்த தலைவர்களின் கனவுகள் மண்ணோடு மண்ணாக போய் விடுமா..? என்பதுதான். இமயத்திற்கு சென்று கல் எடுத்து வந்த சேரன் என்ன நினைப்பான்..அந்த கல்லை எடுத்து வந்த மொத்தமாக இந்த கேடு கெட்ட தமிழனின் தலையில் போட்டு ஒரே அடியாக கொன்று இருக்க லாமோ..?
சிந்தியுங்கள்... இது சிந்திக்க வேண்டிய தருணம்...

Monday, December 22, 2008

இளம் பெண்கள் தடுமாறுகிறார்களா?

தமிழின கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் காம களியாட்டங்கள் இன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொன்டிருப்ப்பது கொஞசம் வேதனை அளிக்கும் விசயமாகவே இருக்கிறது.முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே தவறு செய்து கொண்டு இருந்தார்கள். இப்போது பெண்களே முந்தானையை அவிழ்த்துக் கொண்டு "வருவாயா நாயகனே" என்று வலை விரிக்கிறார்கள்.18 வயது தொடங்கும் போதே இப்போது சில பேருக்கு சில உரசல்கள் தேவை படுகின்றது.எல்லாம் ஒரு "ஜாலிக்கு" என்று உல்லாசத்திற்கு தாவணி திறப்பவர்கள் இன்றைக்கு ஏராளம் பேர்.திருமணம் ஆன பின்னும் கணவன் பணிக்கு போன பிறகு கொல்லைபுரத்தின் வாசலை கொஞ்சமாக திறந்து வைத்து கள்ள தொடர்புக்கு ஆள் தேடுபவர்களும் உண்டு...நினைத்து பாருங்கள்..."இது தொடர்ந்தால்..."

Tuesday, December 2, 2008

எங்கே போனார் ராஜ் தாக்கரே?

எங்கே போனார் ராஜ் தாக்கரே?மும்பை எங்கள் இனத்துக்குத் தான் சொந்தம் என்று மராட்டிய மண்ணிற்க்கு பட்டா போட நினைத்த ராஜ் தாக்கரே எங்கே? மும்பை குண்டு வெடிப்பில் சிவந்து போன அந்த மும்பை மண்ணை அள்ளி எடுத்து மார்பிலும், தலையிலும் பூசி அழுவதற்காக போய் விட்டாரா அந்த தாக்கரே? அவர்க்கு ஒன்றை ஞாபகம் படுத்த விரும்புகிறேன்.அந்த மும்பை மண்ணின் பூர்வீக குடிகள் மடிந்து வீழ்ந்த போதும்,இப்போது மரண பயத்தில் இருக்கும் போதும்...டெல்லியிலும்,இந்தியாவின் ஏனைய பகுதியிலுருந்தும் வந்த ராணுவமும்,போலிசும் தான் அவர்களை இப்பொது தாங்கி பிடித்துக் கொண்டுள்ளார்கள். புரிகிறதா இப்போது..? இந்தியாவின் ஒருமைப்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.இது இனம் புரியாத பாசத்தாலும்,மனித நேயத்தாலும் கட்டப்பட்ட பாசக் கயிறு.

Thursday, November 27, 2008

ரத்தக்களறியான மும்பை

மும்பை பயங்கரம்...இதயத்தின் துடிப்பை ஒரு கணம் நிறுத்தி இருக்கும்.சுற்றுலா சென்று சுகம் காண்போம் என்றுதான் அவர்கள் அங்கே நுழைந்து இருப்பார்கள்.ஆனால் துப்பாக்கி குண்டுக்கு தன் உடலும் பகடைகாயாகும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.இதுதான் இந்தியா....வாழும் மனிதனுக்கு இங்கே பாதுக்காப்பில்லை.தினம் தினம் இங்கே குண்டு வெடிப்பு.தீவிர வாத அச்சுரத்தல் அதிகம் உள்ள அமெரிக்காவில் கூட எப்போதாவது தான் இதுபோல் நிகழும். ஆனால் இந்தியாவிலோயோ ஒவ்வொரு வினாடியும்.நினைத்து பாருங்கள்...டுவின் டவர் இடிந்த பிறகு...ஆப்கானிஷ்தானே தரைமட்டம் ஆகியது...ஆனால் இங்கே தான் நம் தலைவர்கள்....என்னதான் நடந்தாலும்.....வெறும் கண்டனங்களை மட்டுமே தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.அப்படியானால்........."எதிர் கால இந்தியா......?"

Friday, November 21, 2008

அம்பேத்கர் தேவை இல்லயா?


சென்ற வாரம் சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த அந்த வன்முறை சம்பவம் பார்த்தவர் நெஞ்சங்களை கலங்கடித்து இருக்கும்.என்னை பொறுத்த வரை அது...உணர்ச்சி போராட்டம். காலம் காலமாய் அடிமைப் படுத்தப்பட்டு இருந்த ஒரு இனம்...அடிவாங்கி கொன்டு இருந்த ஒரு இனம்...உணர்ச்சிக் கொன்டு ஒரு படி முன்னேறி இருக்கிறது. அந்த அடிதடிக் கான காரணம்..ஒரு சாதிய வன்கொடுமைத் தான். தேவர் ஜெயந்தி கொண்டாட அச்சடிக்கப் பட்ட..நோட்டீசில்..அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்பதற்க்கு பதிலாக, வெறும் சட்டக் கல்லூரி என்றே இருந்து இருக்கிறது.அம்பேத்கர் இன மாணவர்கள் இது பற்றி அவர்களிடம் கேட்டதிற்கு...அந்த ஈன சாதி பெயரெல்லாம் போடுவதில்லை என்று..சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார்கள்.எது எப்படியோ...அம்பேத்கர் மக்களிடம் இருக்க வேண்டும் என்ற் சொன்ன சூடும், சொரணையும்....இப்போது அவர்களிடத்தில் நான் பார்க்கிறேன். இது ஒரு சாதி மோதல் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் நமக்கு கிடையாது.இந்த தலித்துக்களுக்கு சூடும், சொரணையும் வந்து விடக்கூடாது என்ற ஆதிக்க சாதி மனப்பான்மையை இந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் உடைத்து காண்பித்தார்கள்.எவன் தொட்டால் தீட்டு என்றார்களோ...அவன் தான், இந்த நாட்டின் சட்டத்தை தீட்டோ தீட்டு என்று தீட்டினான்.ஆனால் இந்த ஆதிக்க சாதி இந்துக்கள் இன்னும் இவர்களை தாழ்த்தியே பிழைக்க வேன்டும் என்ற சாதிய வெறியோடு அலைகிறார்கள் என்பது தான் கொடுமை.முதலில் "அவனை கொல்லுங்கடா என்று வெறியோடு கத்தியை தீட்டிக் கொன்டு வந்தவன் அதிக்க சாதி வெறியன்.அவனிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே எந்த மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்க வேண்டி யாகிவிட்டது. இனிமேலாவது, ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் வன்கொடுமை வெறியை குறைத்து கொள்வது நலம்.

Monday, November 17, 2008

பாவம் இந்த பூமி

பாவம் இந்த பூமி ..பாரம் தாங்காமல் ஒருநாள் தடுமாற போகிறது..!
மில்லியனாய் மக்கள் , நெருக்கடியில் வாழ்க்கை., பற்றாக்குறையில் உலகம்..!
பிறந்தவர்களை பற்றி நான் குறை கூறவில்லை...இனி பிறக்க போகிறவர்களை கட்டு படுத்த கூடாதா? என கேள்வி எழுப்புகிறேன்.
இப்போதே தண்ணீருக்கு அடிதடி என்றால் வருகின்ற காலத்தில் உமிழ் நீர் மட்டுமே வாய் நனைக்கும்.
உணவுக்கு பஞ்சம் என்ற நிலை மாறி, பஞ்சமே உணவு என்ற நிலை வரும்.
விவசாய நிலங்கள் , குடியிருப்புக்காய் இரும்பு தரைகளாய், உருவாக்கப் படும்.
மரம், செடி, கோடி என அனைத்தும் தன் ஆயுளை முடித்து கொள்ளும்.
நதிகள் காயும். வறண்ட மலையில் பாறைகள் உருளும்.
கதிரவன் இனிமேல் அதிகமாய் சிரிப்பான். அந்த கோர சிரிப்பில் பனிமலை உருகும்.
பனிமலை நீரால் கடல் மட்டம் உயரும்.நிலமே ஓர்நாள் நீரால் மூழ்கும். இந்த நிலைமை நடந்தே தீரும்.
வின்ஜானத்தின் விசங்கள் வான கூரையை நனைத்த படியால் ...பாவம் அங்கே விழுந்தது ஓட்டை.
அகச் சிவப்பு அரக்கன் அதன் வழியேத் தான் தலை நுழைத்து எட்டி பார்க்கிறான். மனித தொலை பற்றிக்கொண்டு புற்றாக மாறுகிறான். அறிவியல் நல்லதை உருவாக்க வேண்டுமே தவிர , உருக்குலைக்க கூடாது.அதுவல்ல நிலைமை இங்கே...
அணுகுண்டால் அழிந்தது...ஹிரோசமா, நாகசாகி மட்டுமல்ல ...நமது மனித நேயமும் தான்.
அறிவு முதன் முதலில் அங்கே தான் தன் கோரப் பல் காட்டி சிரித்தது.
அறிவு... உலகை அழிக்க கிளம்பும் முன் .....கொஞ்சம் இதயத்தின் மிருக தோலை கொஞ்சம் உரித்து எறிந்து வாருங்கள்.

Monday, November 3, 2008

வருண பகவானே...

வருண பகவானே...
கண்ணாடியின் வழியே
உன்னை அந்த அடுக்கு மாடிகள் ரசிக்கலாம்...
அண்ணல் உனை வணங்குவது
இந்த குடிசைகள் மட்டுமே...~!

குடிசையில் இழந்து போன
வாழ்கையை தவிர
வேறு என்ன இருக்கிறது..?
வறுமையும் , விரக்தியும் மட்டும் தான்
இங்குள்ள மிச்சம்.

இது சாதியின் அடையாளம்.
ஆதிக்க தீயின் நாக்குக்கு பிடித்த
சுவை மிக்க உணவு..
இந்த குடிசை..

எரிய வில்லை அடுப்பு..
சேரியில்...
போராடினோம் ...எரிந்தது அடுப்பல்ல
சேரி...

குடிசைக்கே வருகிறது சாமி..
மாடிக்கே போகிறது வரம்..!

கலையை, கலைஞ்சனை போர்ரிய
நாடிது என்கிறாய்... காலம்  காலமாய்
பறையை,பறயனை தாழ்த்திய  நீ...!
இறைவா ...
உன் கடைசி  அவதாரமாவது ....

இந்த சேரியில் இருக்கட்டும் ....
"குடிசைகளை  காப்பார்ற்ற .."

டி. ஆர் வித் மைக்கல் ஜாக்சன்

சும்மா சும்மா ஒரு சிரிப்பு...


சர்தார் ~~~~~~

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க? சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன். ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது! சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன். சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே? நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும். சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.


சர்தார் ~~~~~

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர். சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன். கரப்பான் ~~~~~~~~ மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான், "வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன. ஏன் தெரியுமா?

.. .. ஏன்னா, அது "HIT" ஸாங்!!!


குறுக்கே ~~~~~~~~

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.


இது யார் சொத்து?

போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்


Thursday, October 23, 2008

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா?

இந்தக் கேள்விக்கான சரியான விடை நமக்குத் தெரிய வருமேயானால், இலங்கையில் நடக்கின்ற ஒரு இன விடுதலைப் போராட்ட வரலாற்றின் முழுமையான சாரம் நமக்குக் கிடைக்கும். இந்தக் கேள்விக்கான விடையை நோக்கிப் பயணப்படும்போது இலங்கையின் ஆதியான வரலாறு நமக்குத் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அந்த வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவது இன்றைய சூழலில் ஒரு தேவையற்றதானதாகவும், எரிகின்ற வீட்டில் எத்தனை ஓடுகள் இருந்தன, அந்த வீட்டை யார் கட்டியது போன்ற பயனற்ற ஆயவுகளாகவே இருக்கும். இருப்பினும், இலங்கையின் ஒரு குறைந்தபட்ச வரலாறு நாம் அறிந்து கொள்ள வேண்டியதே.போர்த்துக்கீசியர்கள் 1505 ஆம் ஆண்டு வணிக நோக்கில் இலங்கையில் நுழைகிறார்கள், அந்த நேரத்தில் இலங்கையில் மூன்று நிலப்பரப்பு சார்ந்த அரசுகள் இருந்தன. அவை முறையே, கோட்டை அரசு, கண்டி அரசு மற்றும் யாழரசு (சீதாவாக்கை). இவற்றில் முதலிரண்டும், சிங்கள அரசுகளாகவும், கடைசி தமிழ் அரசாகவும் இருந்தது. தொடர்ந்த பல்வேறு சூழியல் காரணிகள் மற்றும் வாழ்வியல் பயணங்களைச் சந்தித்த இலங்கை, 1802 இல் ஆங்கிலக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டபோது ஆமியன்ஸ் (Amiens Agreement) ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட இலங்கையின் வரைபடங்கள் இந்த மூன்று அரசுகளையும் தனித்தனியே சுட்டிக் காட்டுகிறது.இதற்கு முன்னர் கிலேகான் (SIR.HUGH CLEGHORN) ஒரு தனிப்பட்ட வரலாற்றுக் குறிப்பை ஆங்கில அரசுக்குக் கொடுக்கிறார், அதில் தெளிவாக பண்டைக் காலம் தொட்டு இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்பதையும், சிங்களஇனம், மொழி, கலாச்சாரம் தமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரக் கூறுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது என்றும் ஒரு வரைவை, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் அளிக்கிறார். பின்னர் படிப்படியாக மூன்று வெவ்வேறான அரசுகளுமே ஆங்கில ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது என்பதும், நிர்வாக வசதிகளுக்காக, ஆட்சி முறைமைகளுக்காக ஆங்கில அரசு வழமை போல (அதாவது இந்தியாவில் நடந்ததைப் போலவே) இலங்கைத் தீவு முழுதையுமே ஒரே கட்டுக்குள் கொண்டு வந்தது, 1948 இல் இலங்கை ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைகிறது. இது ஒரு சுருக்கமான இலங்கையின் விடுதலைக்கு முந்தைய வரலாறு.சரியான திசையில் பயணிக்க வேண்டிய இலங்கையின் சமூகப், பொருளாதார வளர்வு நிலைகள் விடுதலைக்குப் பின்னர் S.W.R.D பண்டாரநாயகாவின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்கிற ஒரு முறையற்ற செயல் திட்ட முன்வரைவால் தனது அழிவை நோக்கித் திரும்பியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, அடிப்படைக் கல்வியை தமிழில் கற்ற தமிழர்களின் நிலையும், அவர்களின் வேலை வாய்ப்புகளுக்கான நிலைத் தன்மையும் இதனால் கேள்விக்குறியாகியது. தமிழர் பகுதிகளின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டது. பாதுகாப்புப் பணிகளில், படையணிகளில் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர். 1958 இல் தமிழ் மக்களின் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளும், அரசியல் பின்புலமும் தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி, இலங்கையில் வாழும் தமிழர்கள், இலங்கையின் அதிகாரப் பூர்வக் குடிமக்களா என்கிற அளவில் வந்து நின்றது.இதனிடையே, 1972 இல் குடியரசுச் சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மேற்கண்ட கேள்விகளை அரசாட்சி முறையாகவே சிங்கள பெரும்பான்மை அரசு முன்னெடுத்தது. 1950 இல் இருந்து தொடங்கிய சிங்களப் பேரினவாத அரசின் ஒருதலைப் பட்சமான போக்கினை எதிர்க்கும் முகமாக ஒரு எதிர்வினையாக திரு.சி.சுந்தரலிங்கனார் தலைமையில் "ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி" என்கிற அமைப்பு உருவாகி, தமிழர்களுக்கான "சுயாட்சி" என்கிற கொள்கை அவரால் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முன்னரே 1918 இல் திரு.விஸ்வலிங்கம் என்பவர் தனித்தமிழ் நாட்டின் கோரிக்கையை ஆங்கில அரசிடம் வைத்ததும், 1924 இல் திரு.பொன்னம்பலம் ராமநாதன் உருவாக்கிய தமிழர்களுக்கான ஒரு தனி அரசியல் பார்வையும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திரு.சுந்தரலிங்கனார் அவர்களே "தமிழீழம்" என்கிற ஒரு குறியீட்டு அடையாளத்திற்கான காரணியாகவும், தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போரை முதன்முதலாகத் துவக்கியவருமாவார். பிற்காலத்தில் இவர் "வன்னிச் சிங்கம்" என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டார். 1972 இல், இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா ஒருதலைப்பட்சமாக உருவாக்கிய ஓட்டுப் பொறுக்கி அரசியல் தந்திரத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட முன்வரைவுகளே இலங்கையில் வாழும் தமிழ் மக்களை ஒரு கடும் சமூகப், பொருளாதார நெருக்கடிகளை நோக்கித் தள்ளியது. போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழலை அவர்களுக்கு உருவாக்கியது.1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய ஒரு தேர்தல் சூழலில் தான் "தந்தை செல்வா" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.S.J.V செல்வநாயகம் "தமிழரசுக் கட்சி" என்கிற ஒரு அரசியல் நகர்வை தேர்வு செய்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஒருதலைப் பட்சமான இலங்கை அரசின் பேரினவாத நடவடிக்கைகளைக் கண்டித்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிய தந்தை செல்வா, ஒரு இடைத் தேர்தலை சந்தித்து தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவில் மிகப்பெரும் வெற்றி அடைகிறார். வெற்றி அடைந்தது மட்டுமன்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் "தமிழ் மக்கள் தனியானதொரு ஆட்சியைப் பெறுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்கு சிங்களப் பேரினவாத அரசால் தள்ளப்பட்டிருக்கிறார்கள்" என்று கர்ஜனை செய்கிறார்.இந்த நிலையில் பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த இலங்கை தமிழ் மக்களும், அரசியல் இயக்கங்களும் இணைந்து "தமிழர் விடுதலைக் கூட்டணி" என்கிற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி தங்கள் அரசியல் களங்களை வலிமைப்படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்த பல்வேறு அரசியல் ஒருங்கிணைவுகளில் 1977 பாராளுமன்றத் தேர்தல்களில் அதிகப்பட்சமாக 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு, தமிழீழம் என்கிற பாதையை நோக்கியே நாங்கள் செல்கிறோம் என்பதையும், அதனை அமைதி வழியிலோ இல்லை போராட்ட வடிவிலோ பெற்றே தீருவது என்கிற முடிவுக்கு வந்தார்கள். இதுதான் வரலாற்று உண்மை.இன்று பார்ப்பன, பேரினவாத அரசுகளும் உலக ஏகாதிபத்தியங்களும் ஊடகங்களில் பரப்பும், "ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பு" 1980களில் தான் "தமிழீழம்" என்கிற ஒரு கோரிக்கையை முன்னெடுத்தது என்பது ஒரு வரலாற்றுத் திரிப்பு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விடுதலை உணர்வை எள்ளி நகையாடும் ஒரு பித்தலாட்டம் என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தொடர்ந்து கூற்றியல் நோக்கில் ஆய்வு செய்யும் எவரும் ஒப்புக் கொள்வார்கள்.தமிழ் இளைஞர்கள் 1968களில் தங்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக ஆயுதம் ஏந்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். தொடர்ந்து தற்காப்பு மற்றும் இன ஒடுக்கலுக்கு எதிரான நிலைப்பாடுகளில் பல்வேறு குழுக்களாக இயங்கிய ஆயுதப் போராட்டக் குழுவினர், "கருப்பு ஜூலை" என்று இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி மனித சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு அவல நிலையான வெறிகொண்ட பேரினவாதத் தாக்குதலை சந்தித்த பின்பு ஒரு மிகப் பெரும் எழுச்சியை போராட்ட நிலைப்பாடுகளில் கண்டது. தமிழ் மக்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார்கள். தந்தையின் எதிரில், கணவன்மாரின் எதிரில் எம் குலப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். எம் தமிழ்க் குழந்தைகள் ராணுவ வீரர்களால், கால்களைப் பிடித்துக் கொண்டு சாலைகளில் துவைத்து மண்டையைப் பிளந்து கொல்லப்பட்டார்கள். குழுக்கள், குழுக்களாக எம் தமிழ்மக்கள் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார்கள்.இவற்றை எல்லாம் பார்த்துக் கொதித்தெழுந்த தாய்த் தமிழ் மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை இந்திய பார்ப்பனீய மேலாதிக்க அரசுகளுக்குக் கொடுத்த போதுதான், இந்திய அரசும், தமிழக அரசும், தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களையும், உதவிகளையும் செய்தார்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் பதிவுகளும், கொடுமைகளும் நமக்குத் தெரியும் என்பதாலும், நீண்ட நெடிய துயரம் மட்டுமே அவற்றில் தோய்ந்து இருக்கும் என்பதாலும் அவற்றை பிறிதொரு காலத்தில் விரிவாகப் பதிவு செய்ய முனைகிறேன்.காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள், வெவ்வேறு குழுவாக பிரிந்து கிடப்பது, விடுதலை இயங்கியல் போராட்ட வரலாற்றை நீர்த்துப் போகச் செய்யும் என்கிற சமூக அறிவியல் உண்மையை உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல்வேறு போராட்டக் குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றார் அல்லது வேறு வழியின்றி ஒழித்தார். அவை அடிப்படை மனிதநேயம் சார்ந்த பலரது நிலைப்பாடுகளில் மாற்றுக் கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை என்பதும், ஒடுக்கப்படும் உயிரின எழுச்சிகளின் வரலாற்றில் தவிர்க்க இயலாதது என்பதும் உலக இயங்கியல் என்கிற அறிவியல் கோட்பாடுகளை ஆழ்ந்து படிப்பவர்களும், விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்பவர்களும் நன்கு அறிவார்கள். புலிகளைப் பற்றிய கடும் மரண அச்சத்துடன் இலங்கை படையணி வீரர்களும், இலங்கை ராணுவ தாக்குதல்களைப் பற்றிய கடும் அச்சத்துடன் தமிழ்த் தேசிய இனமும் ஒரு இக்கட்டான அரசியல் மற்றும் நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மரணம் என்பதும் வேதனை என்பதும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவும், அவற்றை உறுதி செய்ய எம் எதிரிகளும் துயர் கொள்ளக் கூடாது என்கிற உயரிய போர்முறைகளை, மனித நேயம் சார்ந்த பல்வேறு கட்டுப்பாடுகளை விடுதலைப்புலிகள் வைத்திருக்கிறார்கள் என்பதும், பல்வேறு உலக நாடுகளின் அமைதிக் குழுக்களுக்கும், உலகளாவிய ஊடகவியலாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் அமெரிக்காவில் "HOUSE INTERNATIONAL RELATIONS" என்கிற ஒரு அமைப்பு, நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் மேம்பாடுகள் குறித்த ஒரு கூட்டத்தைக் கூட்டியது. இதில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக அதன் செயலர் திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP) பேசினார். வழமை போல தீவிரவாதம் குறித்த அவரது உரையின் நடுவே குறுக்கிட்டுப் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், (அதாவது காலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட அமெரிக்கக் காங்கிரஸ் செனட் உறுப்பினர்) திரு.பிராட் சார்மேன் (MR.BRAD SHERMAN) பல்வேறு கேள்விகளுக்கு நடுவே ஒரு ஆய்வுக்குரிய கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்வி "பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சட்டபூர்வமான கெரில்லாத் தாக்குதலுக்கும் என்ன வேறுபாடு?". இதைக் கூட விட்டு விடலாம், இன்னொரு மிக அழகான கேள்வியையும் அவர் கேட்டார். அந்தக் கேள்வி "அல் கொய்தாவிற்கும் அமெரிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்கேற்ற எங்கள் ஜார்ஜ் வாஷிங்டனுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் பார்வையில் அவரும் ஒரு பயங்கரவாதியா?” இந்தக் கேள்வியைக் கண்டு நிலை குலைந்து போன திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP), பதில் அளிக்க இயலாமல் குழம்பிய காட்சியை நீங்கள் அனைவரும் இணையங்களில் கூடக் கண்டடையலாம்.அதே கேள்வியைத் தான் இன்று நாங்களும் உலக மக்களிடமும், தமிழர்களைக் கொன்று குவிக்கும், சிங்களப் பேரினவாத அரசின் காவல் விலங்கான மஹிந்த ராஜபக்சேவிடமும், காவல் விலங்குகளுக்கு பாலூட்டிச் சீராட்டும் இந்தியப் பார்ப்பனீய பயங்கரவாத அரசுகளிடமும் கேட்கிறோம். இது உலகின் உயர்தனிச் செவ்வினத்தின் விடுதலைப் போராட்டமா? இல்லை பயங்கரவாதமா?விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்லும், பார்ப்பன ஜெயலலிதாக்களே, சோ.ராமசாமிகளே, தமிழைப் பேசவும் சரியாகத் தெரியாத சுப்ரமனியசாமிகளே, சிங்களப் பேரினவாதங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்ற இந்து ராம்களே, அரசியல் பகடைக் காய்களாய் மாறி ஒற்றுமைக்கு மறுக்கும் கோபாலசாமிகளே, தொப்புள் பம்பரப் புகழ் விஜயகாந்துகளே......இன்றைக்கு தமிழகத்தில், உருவாகி இருக்கும், எழுச்சி அலையானது, ஈழத்தில் துயருறும் எம் தமிழ்மக்களை மட்டுமன்றி, அரசியல் அறிவற்று, அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் கணந்தோறும் உழைக்கும் வர்க்கத்தில் உறைந்து போயிருக்கும் சிங்கள பேரினத்தின் மக்களும் அமைதியை அடையட்டும், மனிதம் தழைக்கப் பிறந்த தமிழனின் பெருமையை சிங்களனும் உணரட்டும் என்று ஒரு உணர்வுள்ள தமிழனாக உங்கள் சார்பில் மனிதச் சங்கிலியின் ஒரு ஓரத்தில் நின்றிருப்பேன். என்னைத் தேடாதீர்கள், நீங்கள் தான் நான்.விடுதலைப்புலிகள் உண்மையில் தீவிரவாதிகளா?நீங்கள் தான் சொல்ல வேண்டும் தமிழர்களே......

Wednesday, October 22, 2008

இந்தியப்பண்பாடு' : எப்போதும் இருந்ததில்லை

இந்தியாவின் வரலாறு, ஆரியர்களுடன் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைந்து, இந்நாட்டைத் தங்கள் வாழ்விடமாக்கிக் கொண்டு -தங்களின் பண்பாட்டை இங்கே நிலை நாட்டினார்கள். உண்மையில், ஆரியரல்லாதாரைவிட ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமை பேசப்பட்ட போதிலும், வரலாற்றில் குறிப்பிடும்படியாக ஆரியர்களின் அரசியல் சாதனை எதுவும் காணப்படவில்லை...
இந்தியாவின் அரசியல் வரலாறு, நாகர்கள் எனப்படும் -ஆரியரல்லாத மக்களின் எழுச்சியுடன் தொடங்குகிறது. இவர்கள் ஆற்றல் மிக்க மக்களாயிருந்தார்கள். ஆரியர்களால் இவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. முஸ்லிம் படையெடுப்பாளர்கள், இந்து மதத்தின் புறச் சின்னங்களான கோயில்கள், மடங்கள் போன்றவற்றைத்தான் அழித்தார்கள். அவர்கள் இந்து மதத்தை வேருடன் களைந்து எறிந்து விடவில்லை. மக்களின் ஆன்மீக வாழ்க்கையை நெறிப்படுத்திய தத்துவங்களையும் -கோட்பாடுகளையும் அவர்கள் அழித்து விடவில்லை. ஆனால், பார்ப்பனியப் படையெடுப்பு அப்படிப்பட்டதல்ல.
ஒரு நூற்றாண்டுக் காலமாக பவுத்தத்தால் ஆன்மீக வாழ்க்கையின் உண்மையான தத்துவங்கள் என்று போதிக்கப்பட்டு, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாழ்க்கை முறையாகப் பின்பற்றப்பட்டு வந்த கோட்பாடுகளை அது முற்றிலுமாக மாற்றிவிட்டது. பார்ப்பனியம் தனது படையெடுப்புகளின் மூலம் புத்த மதத்தை வேருடன் அழிப்பதற்கான அரசியல் அதிகாரத்தைப் பெற்றது: அவ்வாறே அழித்தும் விட்டது. இஸ்லாம், இந்து மதத்தை வெளியேற்றி விடவில்லை. இஸ்லாம், தான் மேற்கொண்ட பணியை ஒரு போதும் முழுமையாகச் செய்யவில்லை. ஆனால், பார்ப்பனியம் அவ்வாறு செய்தது. அது, புத்த மதத்தை வெளியேற்றிவிட்டு -அதனுடைய இடத்தில் தான் (இந்து மதம்) அமர்ந்து கொண்டது.
இந்தியாவின் பண்பாடு, வரலாறு நெடுகிலும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. பார்ப்பனியம், புத்த மதம், ஜைன மதம் ஆகியவையெல்லாம் வெவ்வேறு விதமான சட்டங்களே என்றும், அவற்றினிடையே அடிப்படையான முரண்பாடுகள் இருந்ததில்லை என்றும் கருதப்படுகிறது. இரண்டாவதாக, இந்திய அரசியலில் எத்தகைய போராட்டங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், அவையெல்லாம் அரசியல் போராட்டங்களே! அதாவது ஆட்சியாளர்களிடையே நடந்த போராட்டங்களே என்றும், அவற்றுக்குச் சமூக, ஆன்மீக முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் கருதப்படுகிறது.
இதுபோன்ற தவறான கருத்துக்களால்தான், இந்திய வரலாறு எந்திர ரீதியாக ஒரு வம்சத்தை அடுத்து மற்றொரு வம்சமும், ஒரு மன்னனை அடுத்து இன்னொரு மன்னன் ஆட்சிக்கு வருவதைப் பட்டியலிடுவதாகவும் எழுதப்பட்டு வந்துள்ளது. இத்தகைய மனப்பான்மையும், வரலாறுஎழுதும் முறையும் மாறுவதற்கு வழி, மறுக்க முடியாத இரண்டு உண்மைகளை ஒப்புக் கொள்வதாகும்:
1. பொதுவான இந்தியப் பண்பாடு என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதையும், வரலாற்று ரீதியாக -"பார்ப்பனிய இந்தியா', "பவுத்த இந்தியா', "இந்து இந்தியா' என்று மூன்று இந்தியாக்கள் -ஒவ்வொன்றும் தனக்கெனச் சொந்தமான தனிப்பண்பாடுகளைக் கொண்டிருந்தன என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
2. முஸ்லிம் படையெடுப்புகளுக்கு முந்தைய இந்தியாவின் வரலாறு -பார்ப்பனியத்திற்கும், பவுத்தத்திற்கும் இடையே நடைபெற்ற கடுமையான போராட்டத்தின் வரலாறு என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு உண்மைகளையும் ஒப்புக் கொள்ளாதவர் எவரும், இந்தியாவின் உண்மையான வரலாற்றை, அதில் ஊடுறுவி நிற்கும் ஆழ்ந்த பொருளையும் -நோக்கத்தையும் வெளிக்கொணருகின்ற வரலாற்றை எழுத முடியாது.
தாழ்த்த பட்ட மக்களின் மேல் இந்த இந்து சனாதனவாதிகள் கொன்டு வந்த , கொடுமையான சட்டங்களே இந்துக்களின் மீதும் , மதத்தின் மீதும் எங்களுக்கு,கோபமும் வெறுப்பும் வந்ததிற்கு காரணம்.ஆக....எங்களின் பண்பாடு வேறு.......கொடுப்பதும்,சகிப்புத்தன்மையுமே எங்களின் பன்பாடு....ஆனால் உங்கள் பண்பாடோ......கெடுப்பதும்...பிறர் கொடுமையால் சாவதை கண்டு ரசிப்பதும் தான்...

Thursday, October 16, 2008

நாங்க தமிழன் இல்லையா...?

அய்யா மகாஜனங்களே....
வணக்கமுங்கோ...
முதல் பலிகடா... இன்னிக்கு....அக்கா ...கனிமொழி தான்...
ஆனா இவங்க ...சொன்ன மாதிரியே...செஞ்சுட்டாங்கப்பா ...
எப்படயோ ....இன்னும் கொஞ்ச நாள் ல ...ஆட்சி கவிழ போகுது...
எனக்கு என்ன கோபம் னா
இலங்கை ல இருக்கிற வங்கதான்... தமிழனுங்க னு நம்ம ....
வைகோ அய்யா , கருணாநிதி அய்யா , இன்னும் சில அய்யா க்கள் நெனச்சுட்டு இருக்காங்க... .....அங்க ....தமிழனுங்க கஷ்ட படுறத பாத்தா பாவம் இவங்களால தாங்க முடியமாடிங்கிது... .. ...அதுல எனக்கு ஒரு கோபமும் இல்ல. ஆனா...
அங்க யாவது...குண்டு அடி பட்டு ..உடனே ...தமிழன் சாகுறான்...
நம்ம தமிழ் நாட்டுல...தாழ்த்த பட்ட தமிழனுங்க சாதி கொடுமைனால ....தினம் தினம் சாகுறானே......அவனை பத்தி இவனுங்க நினைத்தே பாக்கமாட்டேன் ,,என்கிறானே.....
அது தான் எனக்கு கோபம்.....
இந்த தமிழனுக்காக எவனாவது....ஒரு நாள் ஆவது....சோலிய ஒதிக்கி...என்ன பண்ணலாம் னு யோசிச்சு இருப்பானா?

எல்லாம்....ஒரு கண் துடைப்பு.....
உண்மையாய்...மனபூர்வமாய்...தமிழனுக்காக...போராடும்....தமிழன்...பெரியாருக்கு...பிறகு...இன்னும் பிறக்க வில்லை... இனிமேல் எப்படி யோ..
இதுல....இந்த....கூத்தாடி கூட்டம் வேற....
போராட்டம்...நடத்த....ராமேஸ்வரம் போரானுங்கலாம்...
கரண்ட நிறுத்த...நெய்வேலி போன மாதிரி....
போ...போ....உன்னை..போக வேணாம்னு... நான்...சொல்லல....
அந்த தமிழன....நெனச்சு பாக்கும் பொது....இதோ...இவனையும்...நினச்சு...பாரு....
அவனுக்காக...நீ என்ன பண்ணி இருக்க...?
அவன்...படுற பாட்டை....நீ பாத்து இருக்கியா....
அட...மாட்டை விட கேவலமாய்......
குடுத்த கடனை கேட்டதுக்காக...வாயில மனித மலத் த....
திணித்த கொடூரம்...நம்ம தமிழனுக்கு தான்....நடந்திருக்கு...திண்ணியத்துல...
ஜனநாயக...நாட்டுல...தலைவர் பதவிக்கு...போட்டியிட்ட...ஒரே காரணத்திற் காக
பட்ட பகல்ல ...ஓட ஓட ...விரட்டினன்களே....மேல வளவுல...
உயர்ந்த சாதின்னு...ஊரை ஏமாத்துற...கூடத்துல...பொறந்த...ஒரு பொண்ண...
காதலிச்ச பாவத்துக்காக...வாயில...ஒன்னுக்கு... அடிச்சு அசிங்க படுத்துனான் களே... இன்னும்...இந்த ரெட்டை குவலய் முறை ...சில ஊர்ல இருந்து கிட்டே தான்..இருக்கு...எவன் கேட்டான்....???
ஒன்னு ரெண்டு இல்ல....நண்பர்களே....ஓராயிரம்...கூட இல்ல...கோடி...கோடி...
அவன் படுற...கஷ்டம்....
இதை முதல்ல...தீக்குறதலைவன்....யாரோ...அவன் தான்...தலைவன்....
முடிவில் ஒன்னே ஒன்னு...
"தன் மண்டையில். .. பேன் பாக்க..தெரியாதவன்...
பக்கத்து மண்டைய பாத்து....ஈர் இருக்குன்னனாம்..."

Wednesday, October 15, 2008

பாவப் பட்ட ...இனம்...

ஊதாரி கணவனின்
மரணம் தான் ..இங்கே
சில பேருக்கு தீபாவளி....
ஓரிரவில் கள்ள சாராயம் குடித்து
செத்தான்...கணவன்...
இவளுக்கோ...அடுத்த நாள்...
விதவை கோலத்தில் விடியல்...வந்தது...
உடலுறவுக்கு மட்டுமே...
பயன்படுகிற பொருள்...
ஆககி கொட்டவே...
அடுப்படி வந்தவள்...
இப்படி தான்...அவளை பற்றி
நினைத்தவர்கள் உண்டு....
பல கணவன்கள்
உழைக்கும் எண்ணத்திற்கு
அப்பால் சென்றதால்...
இந்த பெண்கள்....பாவம்....
வறுமை கோட்டில்....
இதனால்....தான்...
பல இடங்களில்...
வயிற்றுக்காக...
குறிகளை...விற்கிறார்கள்...
தாசி களாக...
இவளும் ஒரு வணிகன் தான்.....
கேட்டதை தர வேண்டும்.....
வருபவன்....
குமரனோ...கிழவனோ...
கவலை படக்கூடாது...
வெட்கத்தை பாடையில் கிடத்தி...
பாலுர்டி விட வேண்டும்...
மொத்தத்தில்....நடை பிணமாய்....
வயிற்றுக்காக.. மட்டும்...
ஒப்பனை கொண்ட அழகியாய்...
ஒரு பெண் ....அப்படித் தான்..
படுக்க வந்தவனிடம் கேட்டாளாம்..
." என் மகன் மாதிரி இருக்கீங்க...
இன்னும் ...கொஞ்சம் சேர்த்து
கொடுங்களேன் "

Monday, October 13, 2008

அட...மாமனா ..மச்சான்னா .....மானம் கெட்டவங்களா...

அய்யா மகாஜனங்களே .......வணக்கம்...அதுதானே பாத்தேன்...
இன்னும் இந்த கிறுக்கு பயளுககிட்ட இருந்து ஒரு ஆதங்கமும் வரலேஎயுன்னு... என்னான்னு ? ..."எங்க தலைவர் உடனே கட்சிய அரம்பிக்கிலனா....நாங்க ...அறப்போராட்டம் ஆரம்பிப்போம்.."
அட...மாமனா ..மச்சான்னா .....மானம் கெட்டவங்களா... ...உன் தங்கச்சி குளிக்க...தடுப்பு இல்ல. தா....துணியை கொடியாய் தூக்கிட்டு...ஊர்வலம்...போற . அவனா...உன் வீட்டுக்கு...வெள்ளையடிக்க..காசு கொடுத்தான்..? உங்க அம்மா சாககிடக்கயில...அவனா மருந்து,மாத்திரை வாங்க ,..காசு கொடுத்தான்..? இழவு எடுதவனுங்களா... எவனுக்கோ... சொரியுதுனா ,...நீ ஏண்டாநாக்கு போட்டு நக்குற? ...இப்படியே பண்ணி பண்ணி..தான...இந்த நாட்டையே சினிமாக்காரன்....இடுக்குல.. சொருகி வச்சிங்க..? அவன் கட்சி ஆரம்பிச்சா என்ன? அராம்பிக்கேலென்ன என்ன...? உன் வீட்டு..அடுப்படி எப்போதும் சுடாஇருக்கான்னுமட்டும் பாரு..மத்தவன்பொழப்பை அவன் பாத்துக்குவான்......
கடைசி வரை இப்படியே.. முதுகை காட்டிட்டு இருந்தன்ன... மிதிச்சுட்டு..போய்கிட்டேதான்...இருப்பான்...
அடிமை.நீ அடிமை ...கடைசி வரை நீ அடிமை......தமிழா.....ஒப்பனை காரன்னுக்கு...ஒத்து ஊதி ..ஒத்து ஊதி ...நாசமா போச்சேடா நாடு....அறிவுகெட்டவனே......
"நான்...யாரையும்..குறிப்பிட்டு...சொல்லலேங்க..என் நாட்டை..போலி..முகத்தை வெச்சு...பிடிக்க நினைபவன் நுங்க்லத்தான்.. ...நான்...சொன்னேன்...."
கடைசியாய் ஒன்னு..
"காலம் காலமாய் ...கொம்புகளை மறந்து..
..வண்டி இழுக்கும் மாடுகள்..."
யார்.....வேற யாரு நாமத்தான்.....

Friday, October 10, 2008

மின்வெட்டும் இலங்கை பிரச்னையும்


அய்யா மகா ஜனங்களே... வணக்கம்ங்க...
தினம் தினம் ...மின் தட்டு பாட்டால் தடுமாறி போய்இருப்ப்பிங்க...என்ன பண்றது? ஏன்டா நாயே... ன்னு சட்டைய புடிச்சு கேக்க இங்க யாருக்கும் தைரியம் வரதில்ல....ஏன்னா ..நாம தான் தமிழனாச்சே.. ! திண்ணையில உக்காந்து, மொக்க நாயம் பேசுவமே ஒழிஞ்சு .கரண்ட் கட் பன்றவன கைநீட்டி கேள்வி கேக்க மட்டும் மாட்டோம் ..எவன் எதை பண்ணுனாலும்..அதை அமோதிக்கறவன் தானா நாம.
நான் எந்த பாரம்பரியத்தில் இருந்து வந்தவன் தெரியுமா...வீரம் செறிந்த தமிழர் மரபு என்னுது. புடலங்கா ... லஞ்சம் கேட்டா குடுத்துட்டு வர...ஒருத்தன் கண்ணு முன்னாடி அநியாயமா அடிவங்குனா நல்லாவேடிக்கை பாத்துட்டு மட்டும் வர..அவனை காபாத்தனும் னுதோணல்ல...பெட்ரோல் விலை எவ்ளோ எத்துனாலும் ...அட பரவால... என்ன ௨0 ரூபாய் அதிகம் பண்ணியிருக்கான் ...நாம பண்ணையார் பரம்பரை...இதெல்லாம் என்ன.. பெருசு...ன்னு கேள்வி கேக்காம.. வாங்கிட்டு போறியே.தமிழே ..உயிரே.. ன்னா அவன் பின்னாடி போறது...கன்னட கரன்னுக்கும்,தெலுங்கு காரனுக்கும் அரசியல் கட்சி ஆரம்பிச்சு அவன் வீட்டு..பத்ரூம்கு வெள்ளை அடிக்க வேண்டியது... இப்படி ஒன்னு ரெண்டு இல்ல தமிழா .....கணக்கே இல்ல...உன் அடிமை தனத்தை பட்டியல் போட...
மண்டையில மொளகாய் ....அறைகிறவனுக்கு.... என்னமோ..உன் மண்டைதான்.. அம்மிக் கல் மாதிரி தெரியிது போல. வரவன் ...போறவன் எல்லாம் ...உன் மண்டையில்தான்...ஒரு கண்னு .
இப்போ...இன்னொரு மிளகாய்...
கரண்ட் கட் ஆகுது....அதை மறைக்க....நம்ம கலைன்ஜெர் அய்யா.....
இலங்கை தமழர் ப்ரிச்சனைய கயில எடுத்து இருக்கார்...
எதுக்கு தெரியுமா...."ஒரு விசயத்த மறைகனும்னா... இன்னொரு விசயத்த புதுசா காட்டனும்.." இந்த தெயோரி தான்....அதுவும் இது தமிழனுக்கு மட்டும் தான்....
அதனல்தான் ...இந்த கருணாநிதி அய்யா.. புதுசா "இலங்கை தமிழர் விசயத்தை கைல எடுத்து இருக்கார்...என்னான்னு..? "அப்பாவி இலங்கை தமிழர் சாகடிக்க படுவது தடுக்கப்பட வேண்டும்."..ந்குராறு. அய்யாவுக்கு....இதுக்கு முன்னாடி அங்க இலங்கை தமிழர் சாகறது தெரியில போல இருக்கு...இப்போ தான் யாரோ...வந்து...சொல்லி இருக்காங்க போல.
"நீங்க அரசியல் பண்ணுவதற்கு ...பாவம் அந்த இலங்கை தமிழன் தான் கிடைத்தானா? "

Thursday, October 9, 2008

பீடி சட்டம்...

"அட பாவிங்களா ...வயித்தில அடிச்சு முடிச்சுட்டு ....இப்போ வாயில அடிக்க ஆரம்பிச்சிட்டிங்க லே.. " ...



எல்லாத்துக்கும் வணக்கம்....
அம்மணமா இருக்குற ஊர்ல கோவணம் கட்டுறவன் கோமாளி ங்கிறமாதிரி .. அன்புமணி ராமதாசும் ஒரு சட்டத்தை கொண்டு வந்தாச்சு...என்னன்னு ?
பீடி குடிகிறவனை புடி... கைல இருக்குறதெல்லாம் புடுங்கு...உடாத...
அட நாசமா போனவங்களா ...இதெல்லாம் நடக்கற காரியமா...? பீடி கம்பெனிய மூடற வழிய பாக்காம ஏன்டா ..மூக்கை சுத்தி வாய தொடுரிங்க ..?...
அது சரி,....உங்களுக்கு....நேர் வழியில போய்தான் பழக்கமே இல்லையே....
பாரளமன்ற துக்கு கூட ....பாத்ரூம் வழியில போன ஆளு தானநீங்க.....?
அய்யா மகாஜனங்களே....நம்ம நாடு ...இப்படி இருப்பதன் காரணம் புரியுதா?